निमित्तमप्रयोजकं प्रकृतिनां वरणभेदस्तु ततः क्षेत्रिकवत् ।।3।।
நிமித்தமப்ரயோஜகம்° ப்ரக்ரு«திநாம்° வரணபே⁴த³ஸ்து தத: க்ஷேத்ரிகவத் || 3||
நிமித்தம் = தர்மம் - அதர்மம்; ப்ரக்ரு«திநாம்° = ப்ரக்ருதியின் ப்ரவ்ருத்திக்கு காரணமாக; அப்ரயோஜகம்° =தூண்டுவனவாக ஆவதில்லை; து = ஆனால்; வரணபே⁴த³ = ப்ரதி பந்தக நிவ்ருத்தி (தடை நீங்குதல்); தத: = அந்த தர்மத்தினால்; க்ஷேத்ரிகவத் = விவசாயி போல (உண்டாகிறது).
விவசாயி ஒரு வயலில் நீரை நிரப்பிவிட்டு பின் மற்றொரு வயலுக்கு நீர் பாய்ச்ச அவற்றின் இடையில் உள்ள வரப்பை வெட்டிவிடுவான். வரப்பு என்ற தடை நீங்கியதும் நீரும் தானாக மற்ற வயலுக்கு பாயும். அது போல தர்மங்களால் மற்றொரு சரீரத்துக்கு மாற இருந்த பிரதிபந்தகம் (தடை) நீக்கப்படலாம். அதே போல அதர்மத்தாலும் அது நீக்கப்படலாம். (நகுஷன் தேவ சரீரம் இழந்து மலைப்பாம்பாக மாறியது)
நேரடியாக வளர்ச்சிக்கு காரணமாகாவிட்டாலும் வளர்ச்சிக்கான தடைகளை தர்மாதர்மங்கள் நீக்கக்கூடும்.
2 comments:
சரிதான், பதில் இங்கே இருக்கு, இல்லையா???
ஹிஹிஹி, மறந்துட்டேன், ரொம்ப நாட்கள் ஆச்சா? அ.வ.சி.
Post a Comment