निर्माणचित्तान्यस्मितामात्रात् ।।4।।
நிர்மாணசித்தாந்யஸ்மிதாமாத்ராத் || 4||
நிர்மாண = (யோகி சங்கல்பிக்கிறான்; அதை ப்ரக்ருதி தன் அஹங்கார ரூபத்தில் இருந்து அனுசரிக்கிறது. உறுப்புகளில் அது ப்ரவேசிப்பதால்) நிர்மாணிக்கப்பட்ட ; சித்தாநி = மனதுகள்; அஸ்மிதா மாத்ராத் = அஹங்காரத்தில் இருந்து. (உண்டாகின்றன.)
ஒரே நேரத்தில் பல விஷயங்களை அனுபவிக்க யோகி பல சரீரங்களை ப்ரக்ருதியின் மீதுள்ள பலத்தால் எடுத்துக்கொண்டால் பல சித்தங்கள் இருக்குமா? ஒன்றுதான் இருக்குமா? யோகியின் சங்கல்பத்தால் அஹங்காரத்தில் இருந்து உண்டான மனதுகள் பலவாகும் என்று இந்த சூத்திரம் சொல்கிறது.
அனேக சரீரங்கள் இருந்தால் அவற்றின் அபிப்பிராயம் ஒன்றாயிருக்க முடியாது; ஒரு சரீரத்தில் அனுபவித்ததை இன்னொன்றில் உள்ள மனது நினைக்க முடியாது; ஆகவே மனசை ஒன்றாகவே சொல்லவேண்டும் என ஆட்சேபித்தால் ...
2 comments:
இங்கே அஹங்காரம் என்ன பொருளில் வருது???
அனேக சரீரங்கள் இருந்தால் அவற்றின் அபிப்பிராயம் ஒன்றாயிருக்க முடியாது; ஒரு சரீரத்தில் அனுபவித்ததை இன்னொன்றில் உள்ள மனது நினைக்க முடியாது; ஆகவே மனசை ஒன்றாகவே சொல்லவேண்டும் என ஆட்சேபித்தால் ...//
அநேக சரீரங்கள்??? அது எப்படி முடியும்?? மனித சரீரம்?? தேவ சரீரம்???
Post a Comment