प्रवृत्तिभेदे प्रयोजकं चित्तमेकमनेकषाम् ।।5।।
ப்ரவ்ரு«த்திபே⁴தே³ ப்ரயோஜகம்° சித்தமேகமநேகஷாம் || 5||
ப்ரவ்ரு«த்தி பே⁴தே³ = ப்ரவ்ருத்தியின் பேதங்கள்; ப்ரயோஜகம்° சித்தம் ஏகம் = தூண்டுகின்ற சித்தம் ஒன்றே; அநேகஷாம் = (யோகியால் உண்டுபண்ணப்பட்ட) அனேக சித்தங்களுக்கு;
ஒரு அரசன் பல அதிகாரிகளை நியமித்து பல வேலைகளை நடக்கச்செய்யும் போதே அனைவரும் ஒருவருக்கொருவர் விரோதமில்லாமல் செயல்பட மேற்பார்வை இட இன்னொரு அதிகாரியையும் நியமிக்கிறான். அது போல யோகி பல சரீரங்களை படைத்து அவற்றுக்கு அதிகாரி போல மனங்களையும் படைத்து எல்லாவற்றையும் அந்தந்த வேலையில் தூண்டிவிட இன்னொரு மனதையும் படைக்கிறான். இந்த இன்னொரு மனதின் தூண்டுதலாலேயே மற்ற மனதுகள் நடப்பதால் (ப்ரவிருத்திப்பதால்) ஒன்றுக்கொன்று விரோதம் சம்பவிக்காது.
1 comment:
ஓஹோ, அப்போ மனம் பல விஷயங்களையும் நினைப்பதையும் இங்கே உதாரணம் காட்ட முடியுமா?? இல்லைனா யோக சம்பந்தமான விஷயங்கள் மட்டுமா?? மனம் அதிலேயே மேலே மேலே போகிறதை மட்டும் சொல்லுதா?
Post a Comment