Pages

Tuesday, March 15, 2011

முக்குணங்களின் ஸ்வரூபம்:



 ते व्यक्तसूक्ष्मा गुणात्मानः ।।13।।
தே வ்யக்தஸூக்ஷ்மா கு³ணாத்மாந​: || 13||

வ்யக்த = நிகழ் காலத்திலும்; ஸூக்ஷ்மா = சென்ற காலம், எதிர்காலம் (இவற்றின் சம்பந்தத்தை அடைந்தும் இருக்கிற); தே = அவை (மஹத் தத்வம் முதல் விசேஷம் உள்ள குடம் வரை எல்லா கார்யங்களும்); கு³ணாத்மாந​: = முக்குணங்களின் சொரூபமாக இருக்கின்றன.

எல்லாப்பொருட்களும் சுக, துக்க, மோஹம் ஆகியவற்றை பொருந்தியதாக உள்ளன. ஆகவே இவை சுக துக்க மோஹமான முக்குணங்களிலிருந்தே வருகின்றன. குடத்தை மண்ணாக பார்ப்பது போல சுக துக்க மோஹங்களை முக்குண வடிவமாகவே பார்க்கலாம்.

குணங்கள் நித்தியமானவை; ஆனாலும் அவற்றின் மாறுதல் அடைந்த வடிவங்களான எல்லா காரிய வஸ்துக்களும் கணத்துக்கு கணம் நாசமடைகின்றன. புருஷ தத்துவமோ பிரக்ருதியான ஸத்வம் ஆகிய குணங்களில் இருந்து வேறுபட்டது. அதிலிருந்து வந்த மஹத் போன்றவற்றில் இருந்தும் வேறுபட்டது. கூடஸ்தன் எனப்படுகிறது.

எல்லா காரியங்களுக்கும் முக்குணங்களே காரணமானால் எப்படி ஒவ்வொரு காரியங்களுக்கும் வேற்றுமை இருக்கிறது?


2 comments:

Geetha Sambasivam said...

மறுபடியும் படிக்கணும். முக்குணங்கள் தான் காரணம்னா?? ம்ம்ம்ம்ம்ம்???எல்லாருக்கும் முக்குணங்கள் ஒரே மாதிரி இருக்கிறதில்லையே, இல்லையா? அதற்குத் தகுந்தாற்போல் காரியங்களின் செயல்பாடுகளும் மாறுமோ> ம்ம்ம்ம்??? ஏதோ தப்பாப்புரிஞ்சுக்கறேன்னு தோணுதே. மறுபடியும் வரேன்.

திவாண்ணா said...

சரிதான். தப்பில்லை. காரணம் அடுத்த பதிவில....