कर्माशुक्लाकृष्णं योगिनस्त्रिविधमितरेषाम् ।।7।।
கர்மாஶுக்லாக்ரு«ஷ்ணம்° யோகி³நஸ்த்ரிவித⁴மிதரேஷாம் || 7||
கர்ம = கர்மாவானது; அஶுக்லா க்ரு«ஷ்ணம்° = வெண்மையாகவும் கருப்பாகவும் இல்லாமல் (ஆகிறது) யோகி³ந: யோகிகளுடையன; த்ரிவித⁴ம் = வெண்மை, கருமை, இரண்டும் கலந்தது என மூவிதமாக; இதரேஷாம் = மற்றவர்களுடையன.
வெண்மை என்பது புண்ணிய கர்மாக்கள்; கருப்பு என்பது பாப கர்மாக்கள்.
ஆனால் நாம் செய்யும் கர்மாக்கள் பெரும்பாலும் இரண்டும் கலந்தே இருக்கும். இவை வெண்மை, கருமை, இரண்டும் கலந்தது எனலாம். யாகம் செய்தால் அவற்றில் நெல், அரிசி குத்தி எடுக்கும்போது கூட சில சிறு உயிரினங்களின் ஹிம்ஸை ஏற்படுகிறது. தக்ஷிணை, தானம் என்று புண்ணிய கர்மாக்களும் அடங்குகின்றன. ஆகவே இவை பாப புண்ணியம் கலந்ததாகவே இருக்கும்.
யோகி வெளியில் உள்ள வஸ்துக்களை விலக்கிவிட்டதால் அந்த கர்மாக்களை செய்வதில்லை. அவனால் செய்யப்படும் யோக அனுஷ்டானத்தின் பலனோ ஈஶ்வர அர்ப்பணத்தால் அவனுக்கு மோக்ஷம் ஒன்றையே பலனாக கொண்டதாகின்றது. அதனால் அவனது செய்கைகள் அஶுக்லா க்ருஷ்ணம். அதாவது அதில் புண்ணியமோ பாபமோ இல்லை. ஆகவே இதுவே மோக்ஷத்துக்கு யோக்யதை உள்ளதாகிறது.
3 comments:
யோகிக்கும், நமக்கும் உள்ள வித்தியாசம் சொல்லப் பட்டிருக்கிறது. யோகி மாதிரி நாமளும் ஆகணும்! முதல்லே இதைப் புரிஞ்சுக்கணும்! :(
செய்யும் காரியங்கள் ஈஶ்வர அர்ப்பணமானால் போதுமே!
எதிலே போட்டேன்னு நினைவில்லை, ஆனால் ஒரு கமெண்டை ப்ளாகர் சாப்பிட்டிருக்கு போல! :P
Post a Comment