Pages

Wednesday, March 9, 2011

வாசனை...



जातिदेशकालव्यवहितानामप्यानन्तर्य स्मृतिसंस्कारयोरेकरूपत्वात् ।।9।।
ஜாதி தே³ஶ கால வ்யவஹிதாநாமப்யாநந்த ஸ்ம்ரு«திஸம்°ஸ்காரயோரேகரூபத்வாத் || 9||

ஜாதி தே³ஶ கால வ்யவஹிதாநாம் அபி = ஜாதி, தேசம், காலம் ஆகியவற்றால் விலகி இருந்தாலும்; ஆநந்தர்ய = தடை இல்லாதது போல வேலை செய்யும் சக்தி; ஸ்ம்ரு«தி = நினைவிற்கும்; ஸம்°ஸ்காரயோ = நினைவுக்கு காரணமான ஸம்ஸ்காரங்களுக்கும்; ஏகரூபத்வாத் = ஒரே ரூபத்தை முடையதாக இருப்பது; (இப்படியாக அங்கீகரிக்கப்படுகிறது)

சுகமோ துக்கமோ ஒரு விஷயத்தை அனுபவிப்பதால் சித்தத்தில் ஏற்படும் தர்மமோ, அல்லது அனுபவத்தின் ஸூக்ஷ்ம நிலையோ வாசனை எனப்படும். ஒரு ஜீவன் பல பிறவிகளை அடைகிறது. முன்னர் ஒரு கல்ப காலம் முன்தான் மனித பிறவி இருந்தது என்றாலும் கூட இப்போது மனிதப்பிறவி வாய்க்கையில் போன மனித பிறவியில் ஏற்பட்ட வாசனைகளே இப்போது வெளிப்படும். வெகு காலமாகிவிட்டதால் அது மறந்துவிடும் என்று இல்லை. முன் பிறவியில் தேவனாக இருந்து இருந்தால் கூட இப்போது அந்த வாசனைகள் வெளிப்படாது. சமீபத்தில் இருந்த பிறவி என்பதால் அது இப்போது வெளிப்படாது. சின்னஞ்சிறு குழந்தை (பசித்தால்) எப்படி அம்மாவின் மார்பை நாடுகிறது? முன் மனித பிறவி வாசனையே! இவ்விதமே மற்ற ஸம்ஸ்காரங்கள்.

3 comments:

Geetha Sambasivam said...

//இப்போது மனிதப்பிறவி வாய்க்கையில் போன மனித பிறவியில் ஏற்பட்ட வாசனைகளே இப்போது வெளிப்படும். வெகு காலமாகிவிட்டதால் அது மறந்துவிடும் என்று இல்லை.//

இது வரைக்கும் ஓகே, புரியுது.



//முன் பிறவியில் தேவனாக இருந்து இருந்தால் கூட இப்போது அந்த வாசனைகள் வெளிப்படாது. //

தேவன் மீண்டும் மனிதப் பிறவி எடுக்கலாம், சரி, அதுவும் புரியுது. இங்கே வாசனை என்பது அவனுடைய தேவத் தன்மை வெளிப்படாது என்பதைக் குறிக்குமா? தேவனாக இருந்தப்போ யாராய் இருந்தோம், என்ன செய்தோம் என நினைவில் இருக்காது என்பதா?


//சமீபத்தில் இருந்த பிறவி என்பதால் அது இப்போது வெளிப்படாது. //

சரி, அப்போ வாசனை முன் மனிதப் பிறவி வாசனை என்றால் எப்படி??சமீபத்தில் எடுத்த பிறவிக்கும் முன் பிறவி மனிதராய் இல்லாமல் இருக்கவும் வாய்ப்பு உண்டல்லவா?



//சின்னஞ்சிறு குழந்தை (பசித்தால்) எப்படி அம்மாவின் மார்பை நாடுகிறது? முன் மனித பிறவி வாசனையே! //

போன வரியிலே சமீபத்தில் எடுத்த பிறவியின் வாசனை இருக்காதுனு சொல்லிட்டு, இங்கே முன் மனிதப் பிறவி வாசனைனா?? புரியலை!


இவ்விதமே மற்ற ஸம்ஸ்காரங்கள்.//

புரிஞ்சாப்போல் தோன்றினாலும் யோசிக்க யோசிக்க வேறே விதமாய் அர்த்தங்கள்.

Geetha Sambasivam said...

இதுக்கு முன்னாடி கேட்டதுக்கும் பதில் வரலை. :((((((

திவாண்ணா said...

//தேவன் மீண்டும் மனிதப் பிறவி எடுக்கலாம், சரி, அதுவும் புரியுது. இங்கே வாசனை என்பது அவனுடைய தேவத் தன்மை வெளிப்படாது என்பதைக் குறிக்குமா? தேவனாக இருந்தப்போ யாராய் இருந்தோம், என்ன செய்தோம் என நினைவில் இருக்காது என்பதா? //

தேவத்தன்மை நிச்சயம் வெளிப்படாது.
நினைவிலும் இருக்காது என்றாலும் அதை இங்கு சொல்லவில்லை.
இப்போது என்ன பிறவி என்பதை பொருத்து அதற்கு உரியதாக வெளிப்படும்.
நாயாயாக பிறந்தால் பூனையை துரத்தத்தான் தோன்றும். முன் ஒரு ஜன்மத்தில் எலியாக பிறந்ததால் அதைப்பார்த்து ஓட தோன்றாது.

//சரி, அப்போ வாசனை முன் மனிதப் பிறவி வாசனை என்றால் எப்படி??சமீபத்தில் எடுத்த பிறவிக்கும் முன் பிறவி மனிதராய் இல்லாமல் இருக்கவும் வாய்ப்பு உண்டல்லவா? //

உண்டு. எப்போதோ எடுத்த பிறவியின் வாசனையும் வெளிப்படும்.

//போன வரியிலே சமீபத்தில் எடுத்த பிறவியின் வாசனை இருக்காதுனு சொல்லிட்டு, இங்கே முன் மனிதப் பிறவி வாசனைனா?? புரியலை//

சமீபத்தில் எடுத்த பிறவி என்பதால் அதன் வாசனை இருக்கும் என்று இல்லை.

எப்போது வேண்டுமானாலும் வாசனை உண்டாகி இருக்கலாம்.
பிறவிக்கு தகுந்த வாசனைதான் வெளிப்படுமே தவிர வெளிப்படும் வாசனை சமீபத்திய பிறவி, முன்ன்ன்ன்னே எடுத்த பிறவி என்று காலம் சார்ந்தது அல்ல.