Pages

Friday, March 18, 2011

த்ருஷ்டியும் ஸ்ருஷ்டியும்:



न चैकचित्ततन्त्रं वस्तु तदप्रमाणकं तदा किं स्यात्।16।।
ந சைகசித்ததந்த்ரம்° வஸ்து தத³ப்ரமாணகம்° ததா³ கிம்° ஸ்யாத்| 16||

ந ச = ஆகாது; ஏக = ஒரு; சித்த தந்த்ரம் = சித்தத்தின் தந்திரம் (ஒருவனது ஞானத்தால் உண்டுபண்ணதாக); வஸ்து = வெளியில் உள்ள குடம் போன்ற வஸ்து; தத³ = பின்னால் (வஸ்துவை உண்டு பண்ணிய சித்தம் வேறு விஷயத்தில் நாட்டம் கொண்டால் அறியப்பட்ட வஸ்து); அப்ரமாணகம்° = ப்ரமாணம் இல்லை என்பதால்; ததா³ கிம்° ஸ்யாத் = இல்லாமல் போகுமா என்ன?

திருஷ்டி ஸ்ருஷ்டிவாதிகள் சொல்வது என்னவென்றால் விக்ஞானத்தை விட பொருள் வேறாகத்தான் இருக்கிறது. ஆனால் அது ஜடம். ஞானத்தால்தான் அது தோற்றத்தை அடைய வேண்டும். மனசு என்று ஒன்று அறிவதால்தான் ஒரு பொருள் இருக்கிறது. அறிய ஒன்றும் இல்லையானால் பொருள் இல்லை. ஆகவே அறியப்படும் வஸ்துக்களும் ஞானம் இருக்கும் போது மட்டுமே இருக்கின்றன. மற்ற நேரங்களில் இருப்பதாக சொல்ல ஆதாரம் ஏதுமில்லை. எப்படி சுக துக்கங்கள் இருக்கும் போது அவை அனுபவிக்கக்கூடியவையாக இருக்கிறதோ; நாமும் அதனால் அவற்றை ஒப்புக்கொள்ளுகிறோமோ அதே போல பொருட்களையும் அனுபவத்தில் இருக்கும்போது மட்டுமே ஒப்புக்கொள்ள வேன்டும்.

இதை இங்கு பதஞ்சலி ஆக்ஷேபிக்கிறார்.

ஒரு குடத்தை பார்க்கிறோம். அதனால் அதன் இருப்பு ஏற்படுகிறது எனில் அது ஒருவர் பார்த்ததாலா, பலர் பார்த்ததாலா? ஒருவர் பார்ப்பதை நிறுத்திவிட்டால் அது இல்லாமல் போகுமா? ஒருவர் பார்த்து குடம் உண்டானால் மற்றவர் பார்க்க பார்க்க காரணம் (பொருள் உண்டாவதன் காரணம்) மாறிக்கொண்டே இருப்பதால் குடம் அழிந்து அழிந்து தோன்ற வேண்டுமே? அப்படியா நடக்கிறது? இல்லை அது ஒருவனுடைய சித்த ஆதீனம் (சித்தத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது) என்றால் அவன் அதை பார்ப்பதை நிறுத்த மற்றவரும் பார்க்க முடியாமல் போக வேண்டும். அப்படியும் அனுபவத்தில் இல்லை.
இதனால் வெளி வஸ்துக்கள் ஒருவரது ஆதீனத்தில் இல்லை.


4 comments:

Jayashree said...

""ஆகவே அறியப்படும் வஸ்துக்களும் ஞானம் இருக்கும் போது மட்டுமே இருக்கின்றன."" அறியப்படும் பொருள் மனஸு இருக்கறவறை இல்லையா .ஞானத்தின் உதவியோடு மனசுங்கற tool ஐ உபயோகப்படுத்தி அறிய முயல்கிறோம் மனசு அடங்கறச்சே ஞானம் பிறக்கிறது . உண்மை தெரிகிறது . அறிஞ்சப்புறம் மனசும் இல்லை பொருளும் இல்லை ஒன்று என்று ஆனபின்.ஞானம் இல்லாம போறதுங்கறேளா ? ஓ!! எல்லாமே ஆத்மன் அறியப்படற பொருள்ல அடக்கம்னு mean பண்ணறதா.!!or ஞானம் இருக்கறச்சேதான் அறியமுடியும் இல்லைனா முடியாதுன்னா?? knowledge of an object makes you to seek and know?

திவாண்ணா said...

அக்கா, நீங்க ஆராய்கிற விஷயம் திருஷ்டி சிருஷ்டிவாதிகள் சொல்லவது. அதை பதஞ்சலி கண்டனம் செய்து தப்புன்னு சொல்கிறார்.
ஏறக்குறைய எல்லா சாஸ்திரங்களீலும் அவங்க கடைபிடிக்கிற வழி இதான். முதல்ல மற்றவர் கருத்தை விளக்கி அப்புறம் ஏன் அது தப்புன்னு விளக்கணும்.

Geetha Sambasivam said...

இங்கே புரிஞ்சாப்பல இருக்கேனு நினைச்சேன், ஆனால் அடுத்ததில் கொஞ்சம் குழப்புது! :(

திவாண்ணா said...

மனிதன் ஒரு விஷயத்தை அறீய அவை மனிதனின் மனதில் ஒரு மாற்றத்தை உண்டு பண்ண வேண்டும். இல்லை என்றால் அறியப்பட மாட்டாது. ஆனால் புருஷனுக்கு அப்படி இல்லை. அவனுக்கு மாற்றமே இல்லை. மாற்றமே இல்லை என்றால் அவனால் அறியப்பட முடியாது என்றில்லை. புருஷனால் எல்லாமே எப்போதுமே அறியப்படும்.