परिणामैकत्वाद्वस्तुतत्वम् ।।14।।
பரிணாமைகத்வாத்³வஸ்துதத்வம் || 14||
பரிணாம = பரிணாமங்களில்; ஏகத்வாத்³ = ஒருமை; வஸ்துதத்வம் = மஹத் முதலான தத்துவங்களில்;
ப்ரக்ருதியில் க்லேச (மனச்சலன) வாசனைகள் அநாதியாகவும் வெவ்வேறாகவும் இருப்பதால் அவற்றை ஒட்டி காரியம் வேறுபடுகிறது.
முக்குணங்கள் இருப்பினும் அவற்றில் ஒன்று பிரதானமாகவும் மற்ற இரண்டும் அங்கமாகவும் இருக்கும். ஸத்வ குணம் ப்ரதானமான போது மஹத் என்ற பரிணாமம். ரஜஸ் ப்ரதானமானபோது அஹங்காரம் என்ற பரிணாமம். தமஸ் ப்ரதானமானபோது பஞ்ச தன் மாத்ரை என்ற பரிணாமம்.
இதே போல அஹங்காரத்தில் இருந்து:
சத்வ ப்ரதானமான அஹங்காரத்தில் இருந்து ஞானேந்திரியங்கள்.
ரஜஸ் ப்ரதானமான அஹங்காரத்தில் இருந்து கர்மேந்திரியங்கள்.
ஸத்வம் ரஜஸ் சமமாக உள்ள அஹங்காரத்தில் இருந்து மனஸ் ஆகியன உண்டாகின்றன.
தன்மாத்திரை என்பது 5 வித தத்துவங்கள்.
1.சப்தம். 2.ஸ்பர்சம். 3.ரூபம். 4.ரஸம். 5.கந்தம்.
சப்தம் ப்ரதானமாகவும் மற்ற தன் மாத்திரைகள் அங்கமாகவும் இருக்கும்போது ஆகாசம் என்ற பரிணாமம் உண்டாகிறது.
இதே போல ஸ்பர்சம் - வாயு; ரூபம் - அக்னி; ரஸம் - ஜலம்; கந்தம் -ப்ருத்வீ; என ஊகித்தறியவும்.
இப்படி எது ப்ரதானமாக இருக்கிறது என்பதைப் பொறுத்து தனித்துவம் உண்டாகிறது.
1 comment:
இது கொஞ்சம் பரவாயில்லை, ஆகாச தத்துவம் இப்போத் தான் அடிக்கடி படிக்கிறேன், செளந்தர்ய லஹரியிலும் இது குறித்த விளக்கம் வருது. கொஞ்சம் மண்டையிலே ஏறுதோனு ஒரு பிரமை!
Post a Comment