Pages

Tuesday, March 8, 2011

கர்மா பலன் தரும்போது...



 ततस्तद्विपाकनुगुणानामेवाभिव्यक्तिर्वासनानाम् ।।8।।
ததஸ்தத்³விபாகநுகு³ணாநாமேவாபி⁴வ்யக்திர்வாஸநாநாம் || 8||

தத: அவற்றிலிருந்து (முன் கூறிய மூவித கர்மாக்களால்) தத்³விபாக அநு கு³ணாநாம் = அந்தந்த கர்ம பலனான ஜாதி, ஆயுள், போகம் இவற்றுக்கு அனு குணமான; ஏவ = நிச்சயமாக; அபி⁴வ்யக்தி =வெளிப்படுதல்; வாஸநாநாம் = ஸம்ஸ்காரங்களுக்கு;

ஒரு கர்மா பலன் தரும்போது தேவர், மனிதர் முதலான பிறவி எது கிடைக்கும்; அதில் என்ன ஆயுள் கிடைக்கும், அனுபவிக்க வேண்டிய சுக துக்கங்கள் என்ன என்று மூன்று வித பலன்களை நிர்ணயித்து விடுகிறது. ஒரு ஜீவன் பல வித பிறவிகளை அடைகிறது. அந்தந்த பிறவிக்கு தகுந்தபடியே வாசனைகளும் செயல்படும், அவற்றின் வெளிப்பாடும் இருக்கும். பூனை பிறவியில் எலியை பிடித்தலே வாசனையாக வெளிப்படும். மனித ஜன்மம் எடுத்தால் தேவ போக வாசனைக்கு வெளிப்பாடு உண்டாகாது.
இந்த ஸம்ஸ்காரம் - வாசனை இதெல்லாம் என்ன?


2 comments:

Geetha Sambasivam said...

மனித ஜன்மம் எடுத்தால் தேவ போக வாசனைக்கு வெளிப்பாடு உண்டாகாது.//

தேவ போக வாசனை?? ம்ம்ம்ம் கொஞ்சம் புரியலை! :(

திவாண்ணா said...

"வாசனை" பதிவில் உள்ள பதிலை பார்க்கவும்!