हेतुफलाश्रयालम्बनैः संगृहीतत्वादेषामभावे तदभावः ।।11।।
ஹேதுப²லாஶ்ரயாலம்ப³நை: ஸம்°க்³ரு«ஹீதத்வாதே³ஷாமபா⁴வே தத³பா⁴வ: || 11||
ஹேது = (வாசனைக்கு) ஏதுவானவை [காரணமானவை] (அவித்யா, அஸ்மிதா முதலான காரணங்கள்) ப²ல =பலனான (ஜாதி, ஆயுள், போகம் ஆகியன); ஆஶ்ரய = மனதாகிய பற்றுதலாலும் (ஆஶ்ரயத்தாலும்); ஆலம்ப³நை: = (நல்ல சப்தம் முதலான) சுகமான விஷய பற்றுதல்களாலும் (ஆஶ்ரயங்களாலும்); ஸம்°க்³ரு«ஹீதத்வாத் = இவற்றுடன் சேர்ந்தே இருப்பதால்; ஏஷாம் = இவற்றின் (ஹேதுக்களின்) அபா⁴வே = இல்லாமை ஏற்பட்டால்; தத³பா⁴வ = வாசனையின் இல்லாமையும் ஏற்படுகிறது.
வாசனைக்கு எது காரணமோ அதை நீக்கினால் வாசனையும் இல்லாமல் போகும். அவித்தையே வாசனைக்கு முக்கிய காரணம். இந்த அவித்தை முதலான ஹேதுக்கள் பற்றுதலை முக்கியமாக கொண்டவை. ஆகவே மனது, சுக விஷயங்கள் ஆகியவற்றில் பற்றை நீக்க ஹேதுக்களும் நீங்கும்.
2 comments:
இதுவும் ஓகே. அனைத்துப் பற்றுக்களையும் அறுத்தெறிய வேண்டும்., ஓகே.
சுலபமா சொல்லியாச்சு! செய்யறதுதான் கஷ்டம் இல்லையா?
Post a Comment