தேவர்கள் நம்மை மாதிரித்தான். படைப்பின் போது மனிதனையும் தேவர்களையும் அசுரர்களையும் மற்றவற்றையும் படைத்தார் இறைவன் என்று ஒரு கருத்து. ஒத்தருக்கு ஒத்தர் உதவி செய்து கொண்டு வாழுங்கன்னு சொல்லிட்டாராம். தேவர்கள் மழை வெயில் காத்து இவைகள் மேலே இருக்கிற ஆளுமை சக்தியாலே மனிதர்களுக்கு உதவி செய்ய முடியும். மனிதர்களோட பூஜைகள், யாகங்கள், ஜபங்கள் தேவர்களுக்கு சக்தி ஊட்டும்.
தேவர்கள் மறைந்து இருப்பாங்க, பார்க்க முடியாதுன்னு சொல்கிறாங்க. "பரோக்ஷ ப்ரியா ஹி தேவாஹா" என்று வேதம். மறைந்திருக்கிறதை விரும்பறாங்களாம். ஆனா புராணங்கள் இதிஹாசங்களை படிச்சா அந்த காலத்தில தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் சண்டை ஏற்படும் போது மனிதர்களும் தேவர்கள் பக்கம் இருந்து சண்டை போட்டு இருக்காங்க. தசரதர் அப்படி பண்ணி இருக்கார். அந்த மாதிரி சண்டை ஒண்ணிலதானே கைகேயி வரம் வாங்கினா? கழன்று போன தேர் கடையாணிக்கு பதில் தன் விரலை கொடுத்து....
முசுகுந்த சக்கரவர்த்தியும் சண்டை போட்டு இருக்கார். களைச்சு போய் சண்டை முடிஞ்ச பிறகு தூங்கப்போறேன், யார் எழுப்பினாலும் அவங்க தலை வெடிக்கணும் ன்னு வரம் ஒண்னை வாங்கி தூங்கினார். இந்த வரத்தை நம்ம ரணசோட் சாமர்த்தியமா பயன்படுத்தி கொண்டான்!
ஒருசமயம் சனி பகவான் கிருத்திகா நக்ஷத்திரத்திலிருந்து ரோகிணியைப் பிளந்துகொண்டு போக இருந்தான். அதனை ஜோதிடர் மூலம் தசரதன் அறிந்தான். உடனே தசரதன் வசிஷ்டரை அணுகி, "இதற்கு என்ன செய்யலாம்?" என்று கேட்டான்.
வசிஷ்டர்,"ரோகிணியைப் பிளந்துகொண்டு சனி சென்றால் பன்னிரண்டு ஆண்டுகள் பெரும் வற்கடம் என்னும் பஞ்சம் ஏற்படும். மக்கள் விலங்கு முதலியவை மிகவும் அவதியுறும். அதனால் நேரில் சென்று தடுக்க முயற்சி செய்யவேண்டும்" அப்படின்னார். தசரதனும் தேர் ஒண்ணில ஏறி சனி பகவானோட சண்டைக்கு போனானாம். அதை பாத்து அதிசயப்பட்டு "எல்லாரும் என்ன பாத்தா ஓடறாங்க, நீ சண்டைக்கே வரியே! என்ன வேணும்?" ன்னு கேட்டான். தசரதனும் "பஞ்சம் ஏற்படும் என்கிறதால ரோகிணியை பிளந்துகொண்டு போக வேண்டாம்" ன்னு வரம் கேட்டான். வேற? ன்னு கேட்க, "எப்பவுமே நீ ரோகிணியை தாண்டி போறதால ஜனங்களுக்கு கஷ்டம் எதுவும் வரக்கூடாது" ன்னு கேட்டான். அப்படியே ஆகட்டும் என்ற சனி பகவானை ஒரு ஸ்தோத்திரம் சொல்லி ஆராதிச்சார் தசரதர்.
மகிழ்ந்து போய் " தசரதரே! நீர் துதித்த இந்த ஸ்தோத்திரத்தைக் காலையிலும் மாலையிலும் கூறுகிறவருக்குத் தோஷங்களை நீக்கிச் சுப பலனை அளிப்பேன்" ன்னு சொன்னாராம் சனி பகவான்.
எதுக்கு சொன்னேன்? மனிதர்கள் தேவர்களுடன் சமமாக வாழ்ந்த காலம் கூட இருந்திருக்கு போல இருக்கு. இப்ப என்னடான்னா நவ க்ரஹங்களை பாத்து நடுங்கறோம். கோவில்களில மூலவரை விட இவங்களுக்குத்தான் மதிப்பு அதிகமா இருக்கு.
(இன்னும் வரும்)
5 comments:
முசுகுந்த சக்கரவர்த்தியும் சண்டை போட்டு இருக்கார். களைச்சு போய் சண்டை முடிஞ்ச பிறகு தூங்கப்போறேன், யார் எழுப்பினாலும் அவங்க தலை வெடிக்கணும் ன்னு வரம் ஒண்னை வாங்கி தூங்கினார். இந்த வரத்தை நம்ம ரணசோட் சாமர்த்தியமா பயன்படுத்தி கொண்டான்!//
அட? கண்ணன் கதையிலே இந்தக் கட்டம் தான் வருது.
அந்த ஸ்லோகத்தை அதாவது தசரதர் சொன்னதைப்போட்டிருக்கலாமோ! எங்க வீட்டிலே மூணு பேருக்கு ஏழரை! ஆட்டி வைக்குது! பயன்படுமே!
அந்த ஸ்லோகத்தை அதாவது தசரதர் சொன்னதைப்போட்டிருக்கலாமோ! எங்க வீட்டிலே மூணு பேருக்கு ஏழரை! ஆட்டி வைக்குது! பயன்படுமே!//
கௌசிகர் (தி.ரா.ச) அவரோட ப்ளாக்ல போட்டு அதுக்கு பஸ்ல நான் லிங்கும் கொடுத்தாச்சு!
கௌசிகர் (தி.ரா.ச) அவரோட ப்ளாக்ல போட்டு அதுக்கு பஸ்ல நான் லிங்கும் கொடுத்தாச்சு! //
கெளசிகர் போட்டது நினைவிலே இருக்கு; பஸ்ஸிலே லிங்க் கொடுத்தது தெரியாது. அதோட நான் பஸ்ஸுக்குப் போயும் பதினைந்து நாட்களுக்கு மேலே ஆகுது. சரி, அவரையே கேட்டுக்கறேன். நன்றி, தகவலுக்கு.
From Ramaswamy Chandrasekaran - திவாஜி என் மேலே ஏன் வீண் பழி போடறீங்க ஞயமா இது.நல்லா பாருங்க என் பதிவை
தசரதர் இயற்றிய சனி பகவான் ஸ்தோத்திரம்
க்ருஷ்ணாய நீலாய சிதிகண்ட நிபாய ச
நமோ நீலமயூகாய நீலோத்பவ நிபாயச
நமோ நிர்மாம்ஸ தேஹாய தீர்க்க ச்ருதிஜடாய ச
நமோ விசால நேத்ராய சுஷ்கோதர பயாநக
நம : பெளருஷகாத்ராய ஸ்தூலரோக்ணே ச தே நம :
நமோ நித்யம் க்ஷுதார்த்தாய ஹ்யத்ருப்தாய ச தே நம :
நமோ கோராய ரெளத்ராய பீஷணாய கராளிநே
நமோ தீர்க்காய சுஷ்காய காலதம்க்ஷ்ட்ர நமோஸ்து தே
நமஸ்தே கோரரூபாய துர்நிரீக்ஷ்யாய தே நம :
நமஸ்தே ஸர்வபக்ஸாய வலீமுக நமோஸ்து தே
ஸூர்யபுத்ர நமோஸ்தேஸ்து பாஸ்கர பயதாயிநே
அதோ த்ருஷ்டே நமஸ்தேஸ்து ஸம்வர்த்தக நமோஸ்து தே
நமோ மந்தகதே துப்யம் நிஷ்ப்ராய நமோ நம :
தபநாஜ்ஜாத தேஹாய நித்யயோகதராய ச
ஜ்ஞாநசக்ஷுர் நமஸ்தேஸ்து காஸ்யபாத்மஜ ஸூநவே
துஷ்டோ ததாஸி ராஜ்யம் த்வம் க்ருத்தோ ஹராஸி தத்க்ஷணாத்
தேவாஸுர மநுஷ்யாஸ்ச ஸித்த வித்யாதரோரகா :
த்வயாவலோகிதா : ஸர்வே தைந்யமாசு வ்ரஜந்தி தே
ப்ரஹ்மா சக்ரோ யமஸ்சைவ முநய : ஸப்த தாரகா :
ராஜ்யப்ரஷ்டா : பதந்தீஹ தவ த்ர்ய்ஷ்ட்யாவலோகிதா :
த்வயா வலோகிதாஸ்தேபி நாசம் யாந்தி ஸமூலத :
ப்டஸாதம் குரு மே ஸெளரே ப்ரணத்யா ஹி த்வமர்த்தித :
அட?? நன்றி, ஸ்லோகம் வந்து சேர்ந்தது. சேமிச்சுக்கறேன். எழுதிக்கறேன்.
Post a Comment