Pages

Thursday, August 25, 2011

உரத்த சிந்தனை.. யாகங்கள்..







தேவர்களை குறித்து இஷ்டி செய்கிறார்கள்.

ஒரே இஷ்டியில் ஒன்றுக்கு மேற்பட்ட தேவர்களுக்கு ஹவிஸ் கொடுப்பதுண்டு. காம்ய இஷ்டி என்கிறது ஒரு விஷயத்தை விரும்பி செய்வது. இன்ன இன்ன ஆசைக்கு இன்ன இன்ன இஷ்டி என்று நிர்ணயம் செய்து இருக்கு.

எதை குறித்து செய்கிறோம் என்கிறதை பொருத்து ஒரே தேவதை வேற வேற ரூபத்திலும் வரும். அக்னியே வெவ்வேறு ரூபத்தில் அக்நிபவமானன், அக்னி பாவகன், அக்னி சுசன் என வரலாம். சில சமயம் இரண்டு தேவதைகள் சேர்ந்தும் வரலாம். இந்த்ராக்னி (இந்திரன் + அக்னி) , மித்ரா வருணன் என்பது போல.

இந்த இஷ்டிகள் மிகவும் சக்தி வாய்ந்தவை. அதனால செய்கிறதும் கஷ்டம். சும்மா நாலு பேரை கூட்டிக்கொண்டு செய்ய முடியாது. விஷயம் தெரிஞ்ச நாலு பேராவது வேணும். நிறைய தயாரிப்பு வேணும். செய்கிறவர் ஆசார அனுஷ்டானத்தோட இருக்கணும். அவரோட ஆத்ம சக்தியை பொருத்தே பலனும் அமையும்.

காம்ய இஷ்டிக்கு இன்னும் அதிக கட்டுப்பாடுகள். யாகம் செய்கிறவர் மழையில் நனைந்தால்.. ன்னு எல்லாம் சொல்லி சிலது சொல்லி இருக்கும். படுக்கையில் படிக்காதே, பிச்சை எடுத்து சாப்பிடுன்னு கூட விரதம் சொல்லி இருக்கும்.

யாகம் செய்கிற காலமும் வெவ்வேறா இருக்கும். தொடர்ந்து ஒரு வருஷம் செய்கிற சத்திர யாகங்கள் இருக்கு. இந்த ஒரு வருஷமும் தீக்ஷை இருக்கணும். அதுக்கு பல கட்டுப்பாடுகள்.

மழை விரும்பி செய்கிறது காரீரேஷ்டி . பல கட்டுப்பாடுகள். தமிழ்நாட்டில் மழை மிகக்குறைந்து கஷ்டப்பட்ட நேரத்தில் சிலர் போது பொது நலம் கருதி அதை செய்தாங்க. மழை ஒண்ணும் பெரிசா பெய்யலை. மஹா பெரியவரிடம் போய் முறையிட்டார்கள். "ஏண்டா, உப்பில்லாமல் பத்தியம் இருக்கணுமே? அப்படி எல்லாரும் இருந்தாங்களோ ? " என்று கேட்டாராம். உண்மைதான்; இஷ்டி செய்கிற டீமில் ஒத்தர் அதை தவற விட்டுட்டார். தலையை தொங்க போட்டுக்கொண்டு திரும்பினார்கள்.

ஒரு சமயம் பூலோகத்தில் கோவில், நதிக்கரை, கிராமம் ன்னு எல்லா இடங்களும் பலரும் ருத்ர பாராயணம் செய்ய ஆரம்பித்துவிட்டார்களாம். அப்படிப்பட்ட இடங்களை யமதூதர்கள் அணுக முடியலை. அதனால யம பட்டினத்துக்கு வர ஆசாமிகள் குறைஞ்சு போனாங்க. யமன் பிரம்மாகிட்ட போய் , என் வேலையை செய்ய முடியலைன்னு முறையிட்டாராம். அவரும் அவித்யா என்பவளோட இரண்டு பெண்களை பூலோகத்துக்கு அனுப்பினார். அவங்க பேர் அச்ரத்தா, துர்மேதா. இவங்க பூலோகத்தில நடமாட ஜனங்களும் சிரத்தை இல்லாமலும் கெட்ட புத்தி உடையவர்களாகவும் ஆகிவிட்டார்கள். இப்படி ஆனதும் அவர்கள் செய்த ருத்ர பாராயணத்துக்கு சக்தி குறைந்து போய்விட்டது. யமப்பட்டிணத்துக்கும் ஆட்கள் போக நேர்ந்தது.

பாராயணத்துக்கு இப்படி ன்னா யாகத்துக்கு சொல்ல வேண்டாம் இல்லையா? எவ்வளவு சிரத்தை பற்றோட செய்கிறோமோ அவ்வளவுதான் பலனும். சிரமப்படாம பலன் கிடைக்கறதில்லை. வெகு சிரமங்கள் நிறைந்த இந்த யாகங்களை விட்டு அடுத்ததை பார்க்கலாம்.

2 comments:

Geetha Sambasivam said...

இந்த ஒரு வருஷமும் தீக்ஷை இருக்கணும். அதுக்கு பல கட்டுப்பாடுகள்.//

இங்கே சொல்லப்படும் தீக்ஷை மந்திர தீக்ஷையைக் குறிக்காது என நம்புகிறேன்.

மழை மிகக்குறைந்து கஷ்டப்பட்ட நேரத்தில் சிலர் போது நலம் கருதி //

பொது நலம் கருதி????

திவாண்ணா said...

hihi aamaam.