போகிற போக்கில் அப்படியே பத்ம புராணத்தில சொன்ன மற்றவர்களை பத்தியும் பாத்துடலாம்:
அசுரர்கள் திதிக்கும் கஷ்யபருக்கும் பிறந்தவர்கள்: ஹிரண்யகசிபு, ஹிரண்யாக்ஷன்.
ஹிரண்யகசிபுவுக்கு 4 புத்திரர்கள். ஆயுஷ்மான், ஷிபி, வாஷ்காலி, விரோசனன்.
விரோசனன் க்கு பலி என்ற புகழ் பெற்ற மகன் உண்டு. பலிக்கு பாணாசுரன் உள்ளிட்ட 100 புதல்வர்கள். பாணாசுரன் வில்வித்தையில் மிகவும் தேர்ச்சி பெற்றவன். இவனுக்கு சிவன் மஹாகாலன் என பெயர் கொடுத்து தன் பரிவாரத்தில் வைத்துக்கொண்டார்.
ஹிரண்யாக்ஷனுக்கு 4 புதல்வர்கள். உலூகன், சகுனி, புதசந்தாபன், மஹா பீம்.
இவர்கள் மூலம் 27 கோடி தானவர்கள் உண்டானார்கள்.
தனுவுக்கும் கஷ்யபருக்கும் 100 மகாவீரர்கள் பிறந்தனர்.
அவர்களில் முக்கியமானவர்கள்: விப்ரசித், ஸ்வர்பானு, மயன், வ்ருஷபர்வன், வைஷ்வாநரன். மயனின் புதல்வி மண்டோதரி. வைஷ்வாநரனின் புதல்வி புலோமா. இவளுக்கு பவுலோம என்ற புதல்வியும் காலகேயன் என்ற புதால்வனும் உண்டு. (காலகேயன் ப்ரம்மாவிடன் பல வரங்கள் வாங்கி மூவுலகையும் கலங்கடித்து கடைசியில் மஹாபாரத போரில் அர்ஜுனனால் கொல்லப்பட்டான்.)
விப்ரசித் சிம்மிகையை மணந்தான். இவர்களது புத்திரன் ராஹு. இவன் அம்ருதத்தை அருந்தி சாகா நிலை அடைந்தான்.
கஷ்யபரின் இன்னொரு மனைவி தாம்ரா. இவளுக்கு ஆறு புதல்விகள். இவர்கள் மூலம் பறவையினம் உண்டாயிற்று. சுகி மூலம் கிளிகளும், ஆந்தைகளும் உருவாயின. ஷைனி மூலம் அதே பெயர் கொண்ட பறவைகளும் பசி மூலம் கிர் பறவைகளும் க்ருத்ரி மூலம் கழுகு, கருடன்களும் சும்ருஹ்னி மூலம் புறாக்களும் உண்டாயின. சுசி மூலம் அன்னங்களும் சாரஸ், கராண்டா, ப்லவம் என்ற பறவைகளும் உண்டாயின.
தேவி வினதி கஷ்யபரின் ஆன்மிக சிந்தனை உள்ள மனைவி. இவளுக்கு கருடனும் அருணனும் புதல்வர்கள். இவளுக்கு சௌதாமினி என்ற பெண்ணுமுண்டு. இவள் க்ஷண நேரம் தோன்றி மறையும் மின்னல் போல வானில் அவ்வப்போது தோன்றுவாள்.
அருணனுக்கு சாம்பாதி ஜடாயு என இரண்டு புதல்வர்கள்.
சுரசை கஷ்யபரின் இன்னொரு மனைவி. இவள் ஆயிரக்கணக்கான பாம்புகளை பெற்று எடுத்தாள்.
கத்ரு மேன்மையான விரதத்தை கடைபிடித்து ஆயிரம் தலை கொண்ட நாகங்களை பெற்றாள்....
2 comments:
க்ருத்ரி மூலம் கழுகு, கருடன்களும்//
இந்த கருடனுக்கும் விநதை மூலம் பிறக்கும் கருடனுக்கும் வேறுபாடு உண்டல்லவா?
ஆமாம். இது ஸ்பீசிஸ்.
Post a Comment