Pages

Tuesday, August 16, 2011

கிரகங்கள்..


தேவர்களை ஆராதனை செய்து வேண்டியதை பெற்றுக்கொள்ளலாம் ன்னு பாத்தோம். சரிதான். எதுக்கு எந்த தேவதையை எப்படி ஆராதிக்கணும்? இங்கே நிறைய பிரச்சினை இருக்கு. இதுக்கு நிறைய பேர் போகிறது ஜோதிடர்கள்கிட்டேதான். ஜோதிடத்தை நம்புகிறார்கள், நம்பாதவர்கள் இருக்காங்க. இது அனுபவ விஷயம். ஆனானப்பட்ட வசிஷ்டர் குறித்த தேதியே வொர்க் அவௌட் ஆகலையே!

ஜோதிஷம் வெறும் கணக்கு இல்லை. பார்க்கிறவரோட ஆசார அனுஷ்டானம், தெய்வ பலம், மந்திர சித்தி இவற்றோட ஜாதகரின் பூர்வ புண்ணியம் முதலானவைகளும் சேரும். ஒத்தன் அனுபவிச்சு தீர வேண்டிய கர்மாவை அனுபவிச்சே தீரணும். அதுக்கு ப்ராயச்சித்தம் இருந்தாலும் ஜோதிஷருக்கு கண்ணுக்கு படாது. அல்லது ஜோதிஷர் சொல்லியும் நிறைவேற்றுவதில சிக்கல் ஏற்படலாம், தள்ளிப்போகலாம்... ஜோதிஷர்கள் கிரகங்களை பார்த்து ஏதேனும் பரிகாரம் சொல்கிறார்கள். இது எத்தனை தூரம் சரின்னு புரியலை. கிரகங்கள் ஒரு பலனை நேரடியா தருதா இல்லை இருக்கிற கர்மாவை அனுபவிக்க வைக்குதா? சனிக்கிரகம் நல்ல இடத்துல இல்லை, பிரச்சினை என்கிறாங்க. இதுல தனி நபர் மேலே எந்த கிரகத்துக்கும் காழ்ப்பு உணர்ச்சி இருக்குமா? வேணும்ன்னு கெடுதல் செய்யுமா? இல்லை பிடிச்சு இருக்குன்னு எங்கான மேலே தூக்கி கொண்டு விடுமா?

சட்டியில் இருக்கறதை எடுத்துக்கொடுக்கிற அகப்பைக்கு இருக்கிற முக்கியத்துவம்தான் கிரகங்களுக்கு. இல்லாததை எடுத்தும் கொடுக்க முடியாது. இருக்கிறதை இல்லைன்னு சொல்லவும் முடியாது. என்ன கால தாமதம் இல்லாம பலனை கொடுக்கவோ இல்லை ஒரு லிமிட்டுக்குள் கொஞ்சம் அதிகம் கொஞ்சம் குறைவு ன்னு கொடுக்கவோ முடியுமோ என்னவோ!

நவ கிரக பிராயச்சித்தத்துக்கு எனக்கு அதிக நம்பிக்கை இல்லாததுக்கு இன்னொரு காரணம் இருக்கு. என்ன பிராயச்சித்தம் சொல்கிறாங்க? இவ்வளவு ஆவிருத்தி ஹோமம் பண்ணுங்க என்கிறதுதான் முக்கியமா சொல்வது. ஹோமத்தில சொல்கிற இந்த மந்திரம் வேதத்தில எங்கே வருதுன்னு பாத்தா ஆச்சரியமா இருக்கு. பல கிரகங்களுக்கும் அதுக்கான மந்திரத்தின் பொருளுக்கும் சம்பந்தமே இல்லாம இருக்கும். அப்புறம் எப்படி அது கிரகத்தை மகிழ்விக்கிறதாகவோ ப்ராயச்சித்தமாகவோ ஆக முடியும்?

இது பத்தி இன்னும் ஒரு தீர்மானத்துக்கு வர முடியலை.

ஒருவர் பிறந்த உடனேயே இவருக்கு இவ்வளவு ஆயுள் இன்ன இன்ன போகம் என்றெல்லாம் நிர்ணயம் ஆகிவிடுகிறது. ஜாதகத்தை ஆராயும் போது இந்த இந்த கால கட்டத்தில் இந்த இந்த விஷயம் அனுபவிப்பார் ன்னு சொல்லலாம். சில சமயம் அதுக்கு தகுந்தாப்போல வாழ்க்கையை அமைச்சுக்கலாம். ஸ்கூல் பைனல் முடிச்ச பின்னே ஒண்ணும் பிரமாதமா படிக்கலையேன்னு ஜோதிஷர்கிட்டே ஜாதகத்தை காட்ட அவர் பாத்துட்டு இது வரைக்கும் கிரக நிலை அவ்வளோ சாதகமா இல்லை; ஆனா இனிமே நல்லா இருக்கு, படிக்க வைங்கன்னும் சொல்லலாம். இல்லை கிரகநிலை இவன் வியாபாரத்துல நல்லா வருவான்னு சொல்லுது; பிசினெஸ் வெச்சு கொடுத்துடுங்கன்னும் சொல்லலாம். இப்படி அடுத்து என்ன செய்யணும்ன்னு திட்டமிட வசதியா இருக்கும்.
இப்ப பலருக்கும் இருக்கிற பிரச்சினை கல்யாணம் ஆகலை; குழந்தை பிறக்கலை; இப்படி... காலாகாலமா இதெல்லாம் பிரச்சினையா இருந்து வந்தாலும், முன் எப்போதையும் விட இப்பல்லாம் இது அதிகமா இருக்கு போல தோணுது.
ஏன்?

12 comments:

sury siva said...

// பல கிரகங்களுக்கும் அதுக்கான மந்திரத்தின் பொருளுக்கும் சம்பந்தமே இல்லாம இருக்கும். அப்புறம் எப்படி அது கிரகத்தை மகிழ்விக்கிறதாகவோ ப்ராயச்சித்தமாகவோ ஆக முடியும்?//

இதே விஷயம் தான் என்னையும் பஹு காலமா உறுத்திண்டு இருக்கு. அதனாலெ யாருக்குமே நான்
பரிஹாரங்கள் சொல்ரதை விட்டுட்டேன். எனக்கென்னமோ அவாவா பகவான் தலைலே எழுதினத‌
அனுபவிச்சுத்தான் தீரணும்னு தோண்றது. அதை ஒரு ஷார்ட் கட் மூலமா அவாய்ட் பண்றது சுலபம்னு
வச்சுண்டா, அவாவா பண்ற நல்லது, கெட்டதுக்கு ஒரு பலன் இருக்கு அப்படிங்கற ந்யாயத்துக்கு ஒரு
அர்த்தம் இல்லாம் போயிடும். இன்னொரு பக்கம் பார்த்தா, அப்படி இந்த ஜன்மத்திலே ஏதோ ஒரு பரிஹாரத்தின்
மூலமா, அனுபவிக்கற கஷ்டத்தை போக்கடிச்சுண்டா, அத அனுபவிக்க இன்னொரு ஜன்மம் கண்டிப்பா
எடுத்தாகணும்.
ஜன்ம ஜ்ன்மாத் செய்த புண்ணிய பாவங்கள் தொடரும் அது நிஸ் ஸந்தேஹம். இருந்தாலும், பரிஹாரம்
செய்யறதுலே ஒரு ஹோமம் செய்யறது, பத்து ஏழை ப்ராம்ஹணாளுக்கு தானம் கொடுக்கறது எல்லாமே
தத்கால சாந்திக்காக என்றும் தோன்றுகிறது.

ஒரு விஷயம். ப்ருஹத் ஜாதகத்திலே ராஹு கேது பற்றி மென்ஷனே இல்ல. அப்படி இருக்கும்பொழுது
ராஹு பீடிச்சிருக்கான். அஞ்சிலே ராஹு இருக்கான். புத்ர தோஷம். அங்க போங்கோ இங்க போங்கோ,
இத அத செய்யுங்கோ அப்படின்னு சொல்றது ந்யாயமான்னும் தெரியல்ல.

சுப்பு ரத்தினம்.
http://pureaanmeekam.blogspot.com

திவாண்ணா said...

நமஸ்காரம் சூரி சார். யோசிக்க வேண்டிய விஷயங்கள்தான்!

vijayaragavan said...

Another thing to be worth noting here. For instance, when I get severe back pain, I rushed to an astrologer, he said that it's due to some planetary positions-combinations etc. If he suggests a 'parikaaram' and if i do that... STOP here.
What if I go to a doctor and try to correct the problem?
1. Will the karma continues only for the first case or only for the second case?
2. both cases not continued.
3. yes for the first and no for the second. If so why?

திவாண்ணா said...

நல்வரவு விஜயராகவன்!

சிலது அனுபவிச்சே தீர்க்க வேண்டியவை. எந்த பரிகாரமும் மருந்தும் எடுபடாது; அல்லது தள்ளிப்போடும்; திருப்பியும் வரும்.
அவ்வளவா பலமில்லாத கர்மா பரிகாரத்தாலேயோ அல்லது மருந்து சாப்பிடுவது என்கிற இன்னொரு செயல்- கர்மாவாலேயோ சரியாகிவிடும்.
இதுவே என் புரிதல்.
இன்றைய பதிவு இதை ஒட்டியே இருக்கிறது.

geethasmbsvm6 said...

திராச சார், எனக்கு நேர் மாறா ஜோசியர் சொன்னதெல்லாம் பலிச்சது! :)))))))) அதோட என் பிரண்டு ஒருத்தர் சிவானு பேர் கல்யாணத்துக்கு முன்னாடியே அவர் என் கையைப் பார்த்துச் சொன்னதும் அப்படியே நடந்திருக்கு. அப்புறமா அவர் கல்கத்தா போயிட்டார்; தொடர்பே இல்லை! :(

அது மட்டும் இல்லை; எங்க வீட்டிலே எல்லாருக்குமே இந்த ஜோசியர் சொன்னது பலிச்சிருக்கு. உங்களோட இன்றைய பதிவில் ஒரே ஜோசியர் சொல்றது சிலருக்குப் பலிக்கலாம்; சிலருக்குப் பலிக்காதுனு படிச்சேன். அதனால் இதை இங்கே கொடுக்கிறேன். அவர் சொன்னது எல்லாமும் பலிச்சிருக்கு.

geethasmbsvm6 said...

திரு விஜயராகவன் முதுகு வலிக்கு ஜோசியரிடம் போனது ஒரு விதத்தில் சரியே. ஆனால் அவருக்கு மருத்துவமும் தெரிஞ்சிருந்திருக்கணும். அப்படிப் பட்ட மருத்துவர்கள் ஆயுர்வேதத்தில் இன்னமும் ஜாதகம் பார்த்து மருத்துவம் செய்பவர்களை குஜராத் ஜாம்நகரில் பார்த்திருக்கேன்.

என் அப்பாவின் அப்பா (தாத்தா) அப்படித் தான் மருத்துவம் பார்ப்பார் என என் அம்மா, அப்பா, பெரியப்பாக்கள் சொல்லிக் கேட்டிருக்கேன். ஒரு காலத்தில் வைத்தியமும், ஜோசியமும் பின்னிப் பிணைந்தே இருந்ததோ என்றும் சந்தேகம் உண்டு. இது குறித்துக் கொஞ்சம் யோசிக்கணும்.

geethasmbsvm6 said...

இன்னொரு பின்னூட்டம் வரலையோ??

sury siva said...

கீதாமேடம் இன்னொரு பின்னூட்டம் வல்லையோ அப்படின்னு ஆதங்கப்பட்டிருக்கா.

ஜ்யோதிஷம் எல்லாமே நம்பிக்கை சமாசாரம். உதாரணத்துக்கு சொல்லப்போனா, சகுண பிரும்ம உபாசனை மாதிரி.
நம்பிக்கை சமாசாரம் தான். ஒத்தருக்கு எல்லாமே அம்பாள், இன்னொத்தருக்கு மாரியாத்தா தான்.
இன்னொருவர் தாயார் தான் எல்லாமே அப்படின்னு. இதெல்லாமே அவாவா நம்பிக்கையை
பொருத்தது. A firm belief when integrated into the intellect becomes faith. And once faith is ingrained,the same becomes impregnable
and one's culture and life style follow such faith, without any question.
சுப்பு ரத்தினம்(contd)

sury siva said...

மருத்துவமும் நம்பிக்கை சமாசாரம் தான். நமக்கு ஒரு டாக்டர் மீது நம்பிக்கை வந்துடுத்துன்னா, அப்பறம் அவர் சொன்னது தான் வேத வாக்கு.

அது போலத்தான் ஜோதிஷமும். நம்பாத்து ஜ்யோதிஷர் சொல்லிட்டார். அதுக்கு அப்பீலே கிடையாது அப்படின்னு நல்ல நல்ல வரனெல்லாம் தடுத்துண்டு, ஏதோ கடைசிலே நொந்துபோய், இருக்கப்ப, ஒரு ஜாதகத்தை ஜோதிடரிடம் காட்டப்போய், இது பரவாயில்லை என்று சொல்லி, அதயும் நாம சரின்னு அப்பாடா, இப்பவாவது நம்ம அம்முவுக்கு ஜாதகம் பொருந்தித்தேன்னு எல்லா தெய்வத்தையும்
நமஸ்காரம் பண்ணிட்டு, லௌகீக சமாசாரம் அப்படியே தள்ளி வச்சுட்டு, கல்யாணத்தைப் பண்ணி வச்சுட்டு, ஒரே வருஷம் கழிச்சு, என்னம்மா இப்படியொரு குடும்பத்திலே என்னை தள்ளி விட்டுட்டயே அப்படின்னு பொண்ணு சொல்லாமா சொல்லும்பொழுது, அதை அவாவா தலை எழுத்துன்னு சொல்லி
நம்மோட ரஸ்பான்ஸிபிலிடியை எவ்வளவு தூரம் கடைப்பிடிச்சிருக்கோம் அப்படின்னு யாராவது சிந்திக்கறாளா !!! தெரியல்ல்லையே !!
subbu rathinam (contd)

sury siva said...

அப்பதான் தோன்றது, ஒன்னுலே நம்பிக்கை வைக்கிறது, அது சொன்னபடியே நடக்கிறது எல்லாமே
பூர்வ ஜன்ம பாவ புண்யத்தின் பிரதிபலிப்பு தான்.

நல்ல காலமா இருந்தா, நல்ல ஜ்யோஸ்யர் கிடைக்கிறார். அவருக்கும் கரெக்டா இன்டூயிஷன் அன்னிக்கு
வர்றது. நல்ல டாக்டர் கிடைக்கிறார். அவருக்கும் கரெக்ட் மருந்து ஸ்ட்ரைக் ஆரது.

எல்லாமே ஈஸ்வர ஸங்கல்பம். எதுவுமே நம்ம செய்யறது இல்ல.
நடக்கறது எல்லாமே நடந்து தான் தீரும். நம்ம ஒரு சாட்சி.

சுப்பு ரத்தினம்.

sury siva said...

பலானி க்ரகசாராணி ஸூசயந்தி மனீஷிணஹ‌
கோ வா தாரதம்யஸ்ய தமேகம் வேதஸம் வினா

என்பது ப்ரதம ஸ்லோகம். ப்ருஹத் ஜாதக க்ரந்தத்திலே. இதுக்கு அர்த்தம்:

எல்லா க்ரஹங்களுமே மனுஷாளுக்கு என்னஎன்ன நடக்கும் அப்படின்னு ஒரு
சூசகமா சொல்ல்றது. எது எப்ப எப்படி நடக்கும் அப்படின்னு அந்த பிரும்மனைத்
தவிர வேற யாருக்குத் தெரியும் ?

கருத்து: அது தெரியாததாலே, ஏ ஜ்யோதிஷா ! இப்படித்தான் நடக்கும்னு
சொல்லாதே. ஒரு கோடி காட்டு, அதோட நிறுத்திக்கோ ! ஏதோ ஸரவத்ரமும்
உனக்குத்தான் தெரியும்னு நினச்சுண்டு வர்றவா மனசைக்குழப்பாதே !
உனக்கு பணம் பண்ணனும்னா வேர ஆயிரம் வழி இருக்கு.
Astrology is one indicator . You go more by your Head.That is all What I should say, at this age.

சுப்பு ரத்தினம்.

Geetha Sambasivam said...

ஜோசியத்தைப் பத்தி எழுதினதும் பின்னூட்டம் மழையாக் கொட்டுது பாருங்க. இதுக்கு ஜோசியமே பார்க்கவேண்டாம். :P