Pages

Thursday, August 11, 2011

நீ யார்?



மாருஃப் கர்கி ஒரு முஸ்லிம் மாஸ்டர். ஒரு நாள் ஒருஇளைஞன் அவரிடம் வந்து கேட்டான்." ஐயா, உங்களைப்பற்றி பல விதமாக கேள்விப்படுகிறேன்.
யூதர்கள் உங்களை அவர்களில் ஒருவர் என்கிறார்கள். கிறிஸ்துவர்கள் உங்களை அவர்களுடைய புனிதராக கருதுகிறார்கள். முஸ்லிம்கள் இஸ்லாத்துக்கு நீங்கள் ஒரு பெருமை என்கிறார்கள்."
மாருஃப் சொன்னார்: " ஆமாம். இங்கே பாக்தாதில் அப்படித்தான் சொல்கிறார்கள். நான் ஜெருஸலேமில் இருந்த போது யூதர்கள் என்னை கிறிஸ்துவன் என்றார்கள்; கிறிஸ்துவர்கள் என்னை முஸ்லிம் என்றார்கள்; முஸ்லிம்கள் என்னை யூதன் என்றார்கள்!"
"அப்போது நாங்கள் உங்களை என்னவென்று நினைப்பது?"
" என்னை புரியாதவர்கள் என்னை மதிப்பதில்லை. என்னை திட்டுபவர்களும் என்னை புரிந்து கொள்ளவில்லை! இப்படி சொல்லிக்கொள்ளும் ஒரு மனிதனாக நினை!"

 நம் நண்பர்களும் எதிரிகளும் நம்மைப்பற்றி நினைப்பது போல நம்மை நாம் நினைத்தால் நம்மை நாம் இன்னும் புரிந்துகொள்ளவில்லை!


 

2 comments:

Geetha Sambasivam said...

நம் நண்பர்களும் எதிரிகளும் நம்மைப்பற்றி நினைப்பது போல நம்மை நாம் நினைத்தால் நம்மை நாம் இன்னும் புரிந்துகொள்ளவில்லை!//

அவரவர் கருத்து அவரவருக்கு; மாறுபட்டுத் தானே இருக்கும்?? எனக்கு இது புரியவில்லை. நண்பர்கள், எதிரிகள் நம்மை மாதிரி எப்படி நினைப்பாங்க? பார்வையின் கோணமே மாறுமே.

திவாண்ணா said...

ஆமாம். பார்வை கோணம் மாறத்தான் மாறும்.
அதை இப்படி படிங்க.
நம் நண்பர்கள் நம்மைப்பற்றி நினைப்பது போலவும், எதிரிகள் நம்மைப்பற்றி நினைப்பது போலவும் நம்மை நாம் நினைத்தால் நம்மை நாம் இன்னும் புரிந்துகொள்ளவில்லை