Pages

Friday, August 26, 2011

டிமன்ஷன்...



உரத்த சிந்தனை:

உரத்த சிந்தனை தொடரும்போது வேற இடத்தில தொடருது, அப்படியே விடுவோம்.

இந்த தேவர்கள் எங்கே இருக்காங்க? தேவலோகம்ன்னு ஒரு தனி இடமா? நம்ம உலகம் இருக்கிற மாதிரி பிரபஞ்சத்தில வேற ஒரு இடமா?

பல இடங்களிலேயும் தேவலோகம்ன்னு குறிப்பிட்டு இருந்தாலும் அது எங்கோ இல்லை; இங்கேயேதான் வேற டிமன்ஷன்ல இருக்குன்னு என் அனுமானம். அதென்ன வேற டிமன்ஷன்?

அட்வகேட் ராமசாமியை தேடிப்போறேன். அவர் இன்ன நகரிலே எட்டாவது தெருல இருக்கார்ன்னு சொல்கிறாங்க. அந்த எட்டாவது தெருவுக்கு போனால் ஒண்ணும் புரியலை. விசாரிக்கிறேன். ஓ, இங்கே இன்னும் அம்பது மீட்டர் போய் வலது பக்கம் திரும்புங்க சார். ரெண்டாவது குறுக்குத்தெரு. அங்கேதான் இருக்கார்ன்னு சொல்லறாங்க. ரெண்டாவது குறுக்குத்தெரு போகிறேன். விசாரிக்கிறேன். ஒரு 40 அடி தூரம் போங்க. வலது பக்கம் 4 ஆம் நம்பர் வீடு என்கிறாங்க. அங்கே போகிறேன். ராமசாமி அட்வொகேட் 2 ஆம் மாடி ன்னு போர்ட் போட்டு இருக்கு. இரண்டாம் மாடி ஏறுகிறேன். அங்கே விசாரிக்கிறேன். அடடா, அவர் மூணு நாள் முன்னே வரை இங்கதான் சார் இருந்தார். இப்ப ஊருக்கு போயிட்டார்,வர இன்னும் ரெண்டு நாளாகும் என்கிறாங்க.

இந்த எட்டாவது தெருவிலே 50 மீட்டர் என்கிறது முதல் டிமென்ஷன்.
வலது பக்கம் திரும்பி 40 அடி என்கிறது இரண்டாவது டிமென்ஷன்.
இரண்டாம் மாடி என்கிறது மூன்றாவது டிமென்ஷன்.
மூணு மாசம் முன்னே என்கிறது நாலாவது டிமென்ஷன்.

இந்த நாலும் சரியா பிக்ஸ் பண்ணாத்தான் ஆசாமியை பார்க்கலாம்.

தேவர்கள் இதெல்லாமும் இல்லாம இன்னும் ஒரு டிமன்ஷன்ல இருக்காங்க. எப்படி க்ரவுண்ட் ப்லோர்லேந்து பார்க்க முடியாதோ, அப்படியே மாடி ஏறிப்போனா பார்க்கலாமோ அப்படி ஒரு வழியா அந்த டிமன்ஷனுக்கு பயணம் செஞ்சா பார்க்க முடியலாம்.

எப்படி இந்த டிமென்ஷனுக்கு போகிறது?

ஹா! அதான் சமாசாரம்.

இறை சக்தி எங்கேயும் நிறைஞ்சு இருந்தாலும் சாதாரணமா நாம் அதை அணுக முடியறதில்லை. அதை அணுக ஏதோ ஒண்ணு விசேஷமா வேண்டி இருக்கு. இதை ஒரு கதவு - போர்டல் என்கிறாங்களே - அதுன்னு வைச்சுக்கலாமா?

தினசரி பூஜை செய்கிற விக்கிரஹம், ஆகம விதிகளாலே பிரதிஷ்டை செய்த மூர்த்திகள், ஹோம குண்டம் இப்படி சிலது உடனடியா தோணுது. பூக்கள், அரைத்து 4 மணி நேரமாகாத சந்தனம், மங்கள அக்ஷதை இப்படி சிலதுக்கும் அந்த மாதிரி ஒரு சிறப்பு சக்தி இருக்கணும். அதனாலதான் குறிப்பா இதை எல்லாம் பூஜைக்கு பயன்படுத்தறோமோ?

மேலும் சில தேவதைகளுக்கு சிலது பிடிக்கும், சிலது பிடிக்காது என்றெல்லாம் சொல்கிறோம். பிள்ளையார் என்றால் மஞ்சள்பொடியால செய்து அல்லது சோனா பத்ரத்தில் ஆவாஹனம் செய்து பூஜை செய்கிறோம். சாளகிராமத்தில் எப்போதும் விஷ்ணு இருக்கிறதாக சொல்கிறோம். தங்கம் தாமிரம் இதை குறிப்பா பூஜைக்கு பயன்படுத்தறோம். இதுக்கெல்லாம் இப்படித்தான் ஒரு சிக்னிபிகன்ஸ் இருக்கோன்னு யோசனை.

நாலு டிமன்ன்ஷனுக்கு மேலே கிடையாது, இந்த கூடுதல் டிமன்ஷன் எல்லாம் உடான்ஸ் ன்னு நினைச்சா இந்த பக்கத்தை பாருங்க. சயன்ஸ் 10 -11 டிமன்ஷன் இருக்கிறதா இப்ப ஒத்துகொண்டு இருக்கு. அதைப்பத்தி மேலே ஆராய்ச்சி நடக்குது.

4 comments:

sury siva said...

//நாலு டிமன்ன்ஷனுக்கு மேலே கிடையாது, இந்த கூடுதல் டிமன்ஷன் எல்லாம் உடான்ஸ் ன்னு நினைச்சா இந்த பக்கத்தை பாருங்க. சயன்ஸ் 10 -11 டிமன்ஷன் இருக்கிறதா இப்ப ஒத்துகொண்டு இருக்கு. அதைப்பத்தி மேலே ஆராய்ச்சி நடக்குது. //

ஸர்வம் விஷ்ணு மயம் ஜகத் அப்படின்னு மன்ஸு ஒத்துண்டு போயிடுத்து அப்படின்னா
நாலு டைமன்ஷன் இருந்தால் என்ன ? நாற்பது இருந்தால் என்ன ?

சுப்பு ரத்தினம்.

திவாண்ணா said...

சூரி சார்! அது சரிதான்.
உங்க மனப்பக்குவம் எல்லாருக்கும் வரதில்லையே!
அப்புறம் பாதோஸ்ய வி'ஷ்வாபூதானி; த்ரிபாதஸ்யாம்ருதம் திவி - யோசிச்சு பாத்து இருக்கீங்க இல்லை? :-))

Geetha Sambasivam said...

டிமென்ஷன் குறித்த விளக்கத்திற்கு நன்றி.

திவாண்ணா said...

:-)