Pages

Monday, August 15, 2011

ப்ராயச்சித்தம்.....



தேவர்களை அண்டி காரியம் சாதிச்சுக்கறது ஒண்ணும் இழுக்கு இல்லை. முந்தின பதிவில "ஒத்தருக்கு ஒத்தர் உதவி செய்து கொண்டு வாழுங்கன்னு சொல்லிட்டாராம்." ன்னு எழுதி இருக்கேன் இல்லையா? பலரும் நினைக்கிற மாதிரி வேதங்கள் பிலாசபி மட்டும் சொல்லலை. அது வேதாந்தம் என்பது. வேத அந்தம் -வேதத்தின் கடைசியில் வருவது. அதுக்கு முன்னே இருக்கிறதெல்லாம் வேத மந்திரங்கள், அவற்றை ப்ரயோகம் செய்ய ப்ரொசீஜர்ஸ். வாழ்க்கையை நல்லா வாழு; அப்புறம் கூடவே பிலாசபி தெரிஞ்சுக்கோ என்கிறது வேதம். அது கொஞ்சம் கொஞ்சமா புரியட்டும். அப்புறம் அதுல ருசி வந்து சாதனை செய்கிறதானால் செய்யலாம். வாழ்க்கையை நல்லபடி வாழ நிறைய சமாசாரங்கள் சொல்லி இருக்கு. இன்ன இன்ன ஆசைக்கு இன்ன இன்ன ஹோமம் செய்ன்னு சொல்லி இருக்கு.

நமக்கு என்ன கிடைக்கும் என்கிறது நம்ம கர்மாவால நிர்ணயிச்சு இருக்கு இல்லையா? அதை ஏன் மாத்தணும், எப்படி மாத்த முடியும் ன்னு கேட்டா.... கிடைக்கிறதை வெச்சு வாழ்க்கையை ஓட்டறது ன்னு மனசு வந்துட்டா இப்படி எதுவும் செய்ய வேண்டாம்தான். ஆண்டவன் கொடுக்கிறது எதுவோ அதை நான் அப்படியே ஏத்துக்கிறேன் ன்னு உள் மனசிலேந்து யாரும் சொன்னா அவங்க கால்ல விழுந்து கும்பிடலாம். ஆனா அப்படி ஒரு மனசு இருக்கிறவங்களை பார்க்கிறது அரிதே!

எப்படி மாத்த முடியும்ன்னு கேட்டா.. நாம் செய்யும் ஹோமமும் ஒரு கர்மாதானே? அப்ப இரண்டு கர்மாக்கள் பாலன்ஸ் ஆகி மத்தியமாக ஒரு பலன் கிடைக்கும்.

கர்மாக்களில பல விதம். சிலதை ஒரு ப்ராயச்சித்தம் செய்து நிவர்த்தி செய்துக்கலாம். சிலதை அப்படி நீக்க முடியாது; அது அனுபவித்தே தீர வேண்டியது. ஒரு உதாரண நிகழ்ச்சி. மஹா பெரியவர் காலம். ஒரு தனவந்தர் வருகிறார். அவருக்கு அந்த காலத்தில் தீர்க்க முடியாத நோய் ஒன்று உண்டு. அதனால் வழக்கமாக் தூரத்திலேயே இருந்து தரிசனம் செய்து போய் விடுவார். இன்று பெரியவர் கிட்டே வருமாறு சைகை செய்கிறார். அவரும் தயங்கி தயங்கி வருகிறார். " நீ மடத்துக்கு பல நாட்களாக சேவை செய்து கொண்டு இருக்கிறாய். உனக்கு இருக்கும் இந்த நோய் நீங்க ஒரு ப்ராயச்சித்த ஹோமம் இருக்கிறது. அதை செய்ய வேண்டிய நாளும் தற்செயலாக இன்றே அமைந்து இருக்கிறது. இந்த ஹோமம் செய்ய எல்லாருக்கும் தெரியாது. அதிர்ஷ்ட வசமாக அது தெரிந்த ஒருவர் இன்றைக்கு இங்கே வந்து இருக்கிறார். ஆகவே அதை இப்போது செய்துக்கொள்" தனவந்தர் தயங்கினார், யோசித்தார். "தயங்க வேண்டாம். இன்று விட்டால் இதே போல சரியான நாள் அமைவது கடினம். இன்னும் அதே போன்ற அமைப்பு வர பல வருஷங்கள் ஆகும்." "நான் தயாராக வரவில்லையே?" "பரவாயில்லை. ஹோமத்துக்கு வேண்டிய அனைத்து ஏற்பாடும் மடமே செய்யும். நீ சும்மா எஜமானனாக இருக்க வேண்டும் அவ்வளவுதான்." தனவந்தர் மனைவியுடன் கலந்து ஆலோசித்து வருவதாக சொல்லி வெளியே போனார். பெரியவரின் பக்கக்தில் இருந்தவர்கள் கேட்டார்கள்." ஏன் இவர் இதுக்கு இவ்வளவு யோசிக்கிறார்?" பெரியவர் சொன்னார். கர்மா மிகவும் பலம் வாய்ந்ததாக இருந்தால் அது தடை செய்யும். ப்ராயச்சித்தம் இருந்தால் கூட அதை செய்ய விடாது." "இவர் செய்வாரா?" "மாட்டார் போலத்தான் இருக்கு" தனவந்தரும் திரும்பி வந்து இப்போது வேண்டாம் என்கிறார்கள் என்று சொல்லி நமஸ்காரம் செய்துவிட்டு போய்விட்டார்.
ஆனால் நடை முறையில இந்த ப்ராயச்சித்தங்கள் பெரிய ப்ரச்சனைகளாகவே இருக்கு......

3 comments:

Maheshwaran Ganapati said...

Hi Diva Sir,
ஆன்மீகம்4டம்ப்மீஸ் ungaloda blognnu teriyaamaye ivalavvu naal padichu niraiya kattundu irukken. romba nanri sir. naan ungaloda fanaave maaritten. unga blog thaan enakku default home page:-)

best regards
Mahesh

Geetha Sambasivam said...

கர்மா மிகவும் பலம் வாய்ந்ததாக இருந்தால் அது தடை செய்யும். ப்ராயச்சித்தம் இருந்தால் கூட அதை செய்ய விடாது."//

ஆமாம், பலமுறை உணர முடிந்துள்ளது. நன்றி. ப்ராயச்சித்தங்களே பிரச்னைகளாகப் போன அனுபவமும் உண்டு.

திவாண்ணா said...

மஹேஷ், முன்னேயே பதில் போட்டாச்சு இல்லே? இதை இப்பதான் சரியா பாக்கிறேன்.
கீதா அக்கா, ஆமாம், அப்படியும் போகலாம். பகிர முடிஞ்ச விஷயமானா பகிருங்க. ஒரு பாடமா இருக்கும்.