Pages

Tuesday, August 2, 2011

தேவர்கள் ...



ஒரு நாள் யோசனை இப்படி போச்சு.

சிலர் அடிக்கடி சொல்கிறார்கள், இந்த பகவானுக்கு கருணையே இல்லையா?

நாத்திகர்கள் பலரது வாதமும் இதை ஒட்டியே போகும். பரம தயாளன் கருணாகரன் ன்னு எல்லாம் சொல்கிற கடவுளுக்கு ஏன் இப்படி பாரபட்சம்?

கோவில் போய் சாமி கும்பிட்டாதான் அது நல்லது பண்ணுமா? இல்லை கேட்டது பண்ணும்ன்னா அது என்ன சாமி?

{ஹிஹி கெட்டது ன்னுதான் டைப் பண்ணேன்! கூகுள் கருவி இப்படி செய்துவிட்டது. சாமி கேட்டது பண்ணும்தானே?}

இதெல்லாம் சரியா புரிய நாம் தேவர்களை பத்தி கொஞ்சம் சரியா தெரிஞ்சுக்கணும்.

அதுக்கு முன்னே நம்மோட புரிதலை கொஞ்சம் சரி செய்துக்கலாமா?

ஒரு நிலை பிரம்ம நிலை. எல்லாம் பிரம்மமயம். இதுலே அப்புறமா கேள்வி கேட்கன்னு ஒண்ணுமே இல்லை! அதனால் இதை விட்டுடுவோம்!

அடுத்து பிரம்மா, விஷ்ணு, சிவன் ன்னு ஒரு கான்செப்ட்!

ஒரே பிரம்மம் மாய நிலையில: உருவாக்கும்போது பிரம்மா, காக்கும்போது விஷ்ணு, அழிக்கும்போது சிவன் ன்னு பெயரோட இருக்கு என்கிராங்க. ம்ம்ம்ம்ம்? அப்ப இவங்க  எல்லாரும் மாயையில இருப்பாங்களா?

உள்ளுக்குள்ள பிரம்ம சத்ய நிலையை தெரிஞ்சு கொண்டே வெளியே இருக்கிற மாயா லோகமும் இவர்களுக்கு தெரியும். அது சரி, அப்படி இருந்தாதானே அந்த லோகங்களில மாறுதல்களை ஏற்படுத்த முடியும்?

இதையும் விட்டு இன்னும் கீழே இறங்கலாம். மேலே சொன்ன மும்மூர்த்திகளைத்தவிர இவர்களுக்கு கன்சார்ட் வந்தாச்சு! மனைவின்னு சொல்லலை. கவனியுங்க!

இவங்களுக்கு பரிவாரங்களும் வந்தாச்சு. புராணங்களில இவங்க கதைகளை படிக்கலாம்.

இங்க கீழே இறங்காம சைட்ல போனா முப்பத்து மூணு தேவர்கள். இந்த கான்சப்ட்ல ஹையார்கி பிரஜாபதி மேலே, இந்திரன், அஷ்ட வசுக்கள், (8) ஏகாதச ருத்திரர்கள் (11), த்வாதச ஆதித்யர்கள்.(12)

ஆக மொத்தம் 33. இவங்களுக்கு அசிஸ்டென்ட் 100. இந்த ஒவ்வொரு அசிஸ்டென்டுக்கும் அசிஸ்டென்ட் 100. அவங்களுக்கு அசிஸ்டென்ட் 1000. ஆக மொத்தம்  33,00,00,000. அதான் முப்பது முக்கோடி தேவர்கள்.

இவங்க எல்லாம் ஒரு வகையில் நம்ம மாதிரி. இதெல்லாம் போஸ்ட் தான். ஆட்சி மாறினா ஆளும் மாறும்!

இந்த முப்பத்து மூணு கோடியோட மேனிபெஸ்டேஷன் அல்லது இன்னும் குட்டி தேவதைகளும் உண்டு.

இந்த தேவர்கள் நம்மை மாதிரின்னு சொன்னேன் இல்லையா? அமிர்தம் குடிச்சு இவங்களுக்கு சாவு இல்லை பசி , தாகம் இல்லைன்னாலும் நம்ம மாதிரி  கோப தாபங்கள் உண்டு. இவங்களை திருப்தி பண்ணா சந்தோஷமா நமக்கு வேண்டியதை கொடுக்கிறாங்க. ஒரு லிமிட் வரை அவங்களுக்கு இந்த சக்தி இருக்கு. அதே சமயம் இவங்களுக்கு கோபம் வரா மாதிரி நாம நடந்துகொண்டா நமக்கு கஷ்டமும் கொடுப்பாங்க! இவங்களை கடவுள் ன்னு நாம நினைச்சா, ஆமாம் கடவுள் கோபப்படும், சந்தோஷப்படும்!

(இன்னும் வரும்)

4 comments:

jeevagv said...

...இன்னும் வர வேண்டும்...

திவாண்ணா said...

அடேடே! வாங்க ஜீவா ரொம்ப நாளாச்சு பாத்து. நலம்தானே?
நேத்து தலைவலி. எழுத முடியலை. அனேகமா இன்னிக்கு வரும். :-)

Geetha Sambasivam said...

இவர்களுக்கு கன்சார்ட் வந்தாச்சு! மனைவின்னு சொல்லலை. கவனியுங்க!//

google மொழிபெயர்ப்பு மனைவினு தான் வருது.

இந்த தேவர்கள் கோபம், பழிவாங்கலைக் கடவுளோடு சம்பந்தப்படுத்திக்கொண்டு எல்லாருமே குழம்பறாங்களே!

திவாண்ணா said...

google மொழிபெயர்ப்பு மனைவினு தான் வருது//
கூகுள் முழிபெயர்ப்பு பத்தி ஆளுக்கு ஆள் பொலம்பறாங்க!நீங்க வேற! துணை(வி). மனைவியா இருக்கணும்ன்னு இல்லை.

//இந்த தேவர்கள் கோபம், பழிவாங்கலைக் கடவுளோடு சம்பந்தப்படுத்திக்கொண்டு எல்லாருமே குழம்பறாங்களே!//
அதுக்குத்தானே போஸ்ட் போடறேன்! :-)