Pages

Wednesday, August 24, 2011

தேவர்கள் ஆராதனை...



உரத்த சிந்தனையா இருக்கறதால கொஞ்சம் டைக்ரஸ் ஆகிவிட்டோம். அடுத்து தேவர்களை பார்க்க திருப்பியும் போகலாம்.
----
ஒரு தரம் திருப்பி நினைவு படுத்திக்கலாம்.
அஷ்ட வசுக்கள் யார் யார்? ஆபன், த்ருவன், சோமன், தாரன், அனிலன், அனலன், ப்ரத்யுஷா, ப்ரபாஸா.
ஒத்தர் (http://hindustories.blogspot.com/2008/06/ashta-vasus.html) இந்த அஷ்டவசுக்களை இயற்கை சக்திகள் என்கிறார். பட்டியலும் கொஞ்சம் வித்தியாசமா இருக்கு. எங்கிருந்து எடுத்ததுன்னு உசாத்துணை இல்லை.
ஆபன் (நீர்),  சோமன் (சந்திரன்), தாரன் (நிலம்), அனிலன் (வாயு), அனலன் (நெருப்பு), த்யௌ (வானம்) அந்தரிக்ஷம், நக்ஷத்திரம் (?த்ருவன்).

அடுத்து ஏகாதச ருத்திரர்கள்: அஜைகபாத், அஹிர்புத்னியன், விரூபாக்ஷ்தன், ரைவதன், ஹரன், பஹுரூபன், த்ரையம்பகன், சாவித்ரன், ஜயந்தன், பினாகி, அபராஜிதன்.

இந்த வைவஸ்வத மந்வந்தரத்துக்கு 12 ஆதித்யர்கள்:
இந்திரன், தத்தன், பகன், த்வஷ்டா, மித்ரன், வருணன், அர்யமா, விவஸ்வான், சவிதா, பூஷா, அம்ஷுமான், விஷ்ணு.

அஷ்டவசுக்களை நாம் கேள்வி பட்டிருக்கோம், மஹாபாரத கதையில வரதால. பீஷ்மர் எட்டாவது வசு.
வசிஷ்டர்கிட்டே காமதேனு இருந்தது. அது நாம் கேட்டதெல்லாம் கொடுக்கும். அஷ்ட வசுக்களில் பிரபாசனின் மனைவி தன் தோழிக்காக காமதேனுவின் பாலைக்கேட்க அஷ்ட வசுக்கள் அதைத்திருட முற்பட்டனர். ஆனால் வசிஷ்டர் இதை அறிந்து பூமியில் பிறக்க இவர்களுக்குச் சாபம் கொடுத்தார். பிரபாசன்தான் பீஷ்மரா பிறந்தது. அருமையான கதை இங்கே பாருங்க.

ஏகாதச ருத்திரர்களை நாம் தெரிஞ்சிருக்க மாட்டோம்.
அதே போலத்தான் த்வாதச ஆதித்யர்களும்; ஆனா இந்த லிஸ்டில சில பெயர்கள் தெரிஞ்சு இருக்கும். வேதம் அத்யயனம் செய்தவங்களுக்கு இந்த ரெண்டு லிஸ்ட் பேர்களும் அறிமுகம் ஆகி இருக்கும்.

எப்படின்னா வேத மந்திரங்கள் இந்த தேவதைகளை குறித்து செய்கிற யாகங்களை குறிப்பிட்டு அதுக்கான மந்திரங்களை, ப்ரொசீஜரை எல்லாம் சொல்லி இருக்கு.
இந்த லிஸ்டில இந்திரன் வருணன் விஷ்ணு மூணு பேரையும் நாம கேள்வி பட்டிருக்கோம். இந்த மூணு பேர்ல விஷ்ணுவுக்குத்தான் வழிபாடு இன்னும் இருக்கு. (தீவிர வைணவர்கள் யாரும் சண்டைக்கு வர வேண்டாம். வேதத்தில இருக்கிறதைதானே சொல்ல முடியும்.)
இந்த வேதத்தில சொல்லி இருக்கற தேவதைகளை திருப்தி  செய்கிறது எப்படி?

யாகங்கள் யக்ஞங்கள் மூலமாக.
(இது ரெண்டுத்துக்கும் கொஞ்சம் வித்தியாசம் இருக்கு.)

அடிப்படையில இஷ்டி என்கிற வேள்வி. அதிலே தேவதை, (அதுக்கான மந்திரங்கள்) ஹோமம் செய்கிற பொருள், தக்ஷிணை இந்த மூன்றும் குறிப்பா சொல்லி இருக்கும்.
மத்தபடி எல்லாத்துக்கும் சில அடிப்படை யாகத்தை ஒட்டியே ப்ரொசீஜர் இருக்கும்.
ஹோமம் செய்கிற பொருள்ன்னா அதில ஆடு, மாடு, குதிரை ஏன் மனுஷன் கூட உண்டு. அதெல்லாம் வேற யுகத்தில. இந்த யுகத்துக்குன்னு போட்ட சட்டதிட்டங்களில கலி யுகத்தில விலக்க வேண்டியவை என்கிற லிஸ்ட்டிலே பல விஷயங்கள் இருக்கு. அதில இந்த பசு, குதிரை, மனுஷ யாகங்களும் உண்டு.

இப்படிப்பட்ட யாகங்களை எல்லாரும் செய்ய முடியாது. அக்னி ஆதானம் செய்து அக்னிஹோத்திரம் செய்து, ஒவ்வொரு அமாவாசை பௌர்ணமியையும் ஒட்டி வருகிற பிரதமை திதிகளிலே இஷ்டி செய்து வருபவர்கள் மட்டுமே செய்யலாம். மற்றவர்கள் செய்விக்கலாம்.

தமிழ்நாட்டிலேதான் இன்னும் இப்படி செய்யக்கூடியவங்க இன்னும் கொஞ்சம் இருக்காங்க. அடுத்தபடியா ஆந்திரா. கர்நாடகா கொஞ்சமா. குஜராத்லேயும் உண்டு. கேரளாவும் மிகக்குறைவு.

அக்னிஹோத்திரிகள் எண்ணிக்கை கண்ணெதிரேயே குறைந்து போய்க்கொண்டு இருக்கிறது. பகவான்தான் காப்பாத்தணும்.

2 comments:

Geetha Sambasivam said...

அக்னிஹோத்திரிகள் எண்ணிக்கை கண்ணெதிரேயே குறைந்து போய்க்கொண்டு இருக்கிறது. பகவான்தான் காப்பாத்தணும். //

நடைமுறை சிரமங்கள். யாருக்கும் சொந்த வீடு இருப்பது கஷ்டம்; இருந்தாலும் வேலை நிமித்தமாகவோ வேறு காரணங்களாலோ ஊர் விட்டு ஊர் போவது! இப்படி எத்தனையோ நொ.சா. நாங்கள் உட்பட! கல்யாணத்தின் போது மாமனார் ஆனமட்டும் முயன்றார். ஆனால் குடும்ப புரோகிதர் என் கணவரின் உத்தியோகம் காரணமாய்ச் சரிவராதுனு திட்டமாய் மறுத்துட்டார். அதோடு அத்யயனம் வேறே பண்ணலை. இத்தனைக்கும் அத்யயனம் செய்ய மாமனார் ஏற்பாடு பண்ணி இருந்திருக்கார். ஆனாலும் பண்ணலை. குடுமி வைச்சுக்கணும்னு சொன்னதும் விட்டுட்டு வந்துட்டாராம். எல்லாத்திலேயும் அது முக்கியம் ஆச்சே! அப்போ இருந்த சூழ்நிலையிலே அதுக்கெல்லாம் நேரமே இல்லாமல் இருந்தது.

திவாண்ணா said...

:-(