Pages

Monday, August 22, 2011

ஸ்ரீ ப்ரஹ்ம புராணத்தில் இருந்து....



உரத்த சிந்தனையில் தேவர்கள் பத்தி எழுதறோமே; ஒரு லிஸ்ட் எடுக்கலாம்ன்னு ஆராய்ஞ்சா ரெபரென்ஸ் ப்ரஹ்ம புராணத்தில கிடைச்சது. கொஞ்சம் தலையை சுத்தியது. சரி சரி, யாம் பெற்ற இன்பம்... ன்னு நினைச்சுகொண்டு எடுத்து எழுதிட்டேன்...

முதலில் சங்கல்பத்தாலும், தர்சனத்தாலும், ஸ்பர்சத்தாலுமே பிரஜைகள் உண்டாயின. தக்ஷப்ரஜாபதி ஆண் பெண் உறவால் ப்ரஜைகள் உண்டாகட்டும் என விதித்தார். இதனால் ப்ரஜா உற்பத்தி விரைவாகவும் நிச்சயமாகவும் ஆயிற்று. வீரிணி என்ற தக்ஷப்ரஜாபதியின் மனைவி இரண்டு தர்மர்கள், 13 கஷ்யபர்கள், 27 சந்திரன்கள், 4 அக்னிஷ்டோமிகர்கள், இரண்டு ப்ருகு புத்திரர்கள், இரண்டு குஷாஸ்வஸ், இரண்டு மகரிஷி ஆங்கீரஸ் ஆகியோரை பெற்று எடுத்தாள்.

தர்மரின் மனைவிகள்: அருந்ததி, வசு, ஜாமி, லம்பா, பானு, மருத்வதி, சங்கல்பா, முஹூர்தா, சந்த்யா, விஷ்வா. இவர்களிடம் பிறந்தவர்களே தேவர்கள்.

விஷ்வாவுக்கு விஸ்வேதேவர்கள் பிறந்தனர்;
சந்த்யாவுக்கு சந்த்யா நாம தேவர்கள்;
வசுவுக்கு அஷ்ட வசுக்கள்;
மருத்வதிக்கு மருத் தேவர்கள்;
பானுவுக்கு பானு;
முஹூர்தாவுக்கு முஹூர்தாமி தேவர்கள்;
லம்பாவுக்கு கோஷ்.
ஜாமிக்கு நாக கன்யைகள்.
அருந்ததி எல்லா ப்ராணிகளுக்கும் தாய் ஆனாள்.
சங்கல்பாவுக்கு சங்கல்ப தேவதை.

சரி, அஷ்ட வசுக்கள் யார் யார்?
ஆபன், த்ருவன், சோமன், தாரன், அனிலன், அனலன், ப்ரத்யுஷா, ப்ரபாஸா.

ஆபனுக்கு 4 மகன்கள். ஷாந்தன், வைதண்டன், சாம்பன், பப்ரு முனி.

இவர்கள் யக்ஞங்களுக்கு பாதுகாப்பு அதிகாரிகள் ஆவர்.
த்ருவனின் புத்திரன் காலன்;
சோமனின் புத்திரன் வர்சஸ்.
தாரனின் புத்திரர்கள் த்ரவிணா, ஹவ்யவாஹன்.
அனிலன் க்கு ப்ராணன், ரமணன், சரீரன் என மூன்று புத்திரர்கள்.
அனலனுக்கு அக்னி போன்ற பல புத்திரர்கள். இவர்கள் கடற்கரை புற்களுக்கு பிறந்தவர்கள். ஷாகா, உபஷாகா, நாய்கமேயன் என சிலர் முக்கியமானவர்கள்.
ப்ரத்யுஷாவின் புதல்வர் தேவல முனி.
ப்ரபாஸாவின் புதல்வன் விஸ்வகர்ம ப்ரஜாபதி. இவர்தான் தேவர்களின் ஆர்கிடெக்ட்.

அடுத்து ஏகாதச ருத்திரர்கள்: அஜைகபாத்.
அஹிர்புத்னியன்
விரூபாக்ஷ்தன்
ரைவதன்
ஹரன்
பஹுரூபன்
த்ரையம்பகன்
சாவித்ரன்
ஜயந்தன்
பினாகி
அபராஜிதன்.
இவர்கள் 84 கோடி ருத்ர கணங்களுக்கு தலைவர்கள்.

கஷ்யபரின் மனைவிகள்: அதிதி, திதி, தனு, அரிஷ்டா, சுரசா, சுரபி, வினதா, டாம்னா, க்ரோதவஷா, இரா, கத்ரு, காசா, முனி முதலாக பலர்.

இந்த வைவஸ்வத மந்வந்தரத்துக்கு 12 ஆதித்யர்கள்: இவர்கள் அதிதிக்கும் கஷ்யபருக்கும் பிறந்தவர்கள்.
இந்திரன்
தத்தன்
பகன்
த்வஷ்டா
 மித்ரன்
வருணன்
அர்யமா
விவஸ்வான்
சவிதா
பூஷா
அம்ஷுமான்
விஷ்ணு.

5 comments:

இராஜராஜேஸ்வரி said...

ரெபரென்ஸ் ப்ரஹ்ம புராணத்தில கிடைச்சது. கொஞ்சம் தலையை சுத்தியது. சரி சரி, யாம் பெற்ற இன்பம்... ன்னு நினைச்சுகொண்டு எடுத்து எழுதிட்டேன்.../

நன்றி.

Geetha Sambasivam said...

தர்மரின் மனைவிகள்: அருந்ததி,//

நிஜமாவே தலை சுத்துது; இந்த அருந்ததியும், வசிஷ்டர் மனைவியும் வேறுதானே? குழப்பம்

திவாண்ணா said...

இந்த அருந்ததியும், வசிஷ்டர் மனைவியும் வேறுதானே?//
ஆமாம்.

Geetha Sambasivam said...

வேறே ஒரு ரெபரென்ஸுக்காக வந்தேன். 13 கஷ்யபர்கள்னு கவனிச்ச்சேன். அதிலே கோத்ரத்துக்குச் சொல்ற கஷ்யபரும் பிரஜாபதியான கஷ்யபரும் ஒருத்தரா? நைத்ருப கஷ்யபர் வேறேயா? பதின்மூன்று கஷ்யபரில் எந்த கஷ்யபர் பிரஜாபதி?

திவாண்ணா said...

வேறேயாயும் இருக்கலாம். இந்த 13 யார் கோத்ர ரிஷி என்பது? தெரியவில்லை. எப்படியும் ஆதியில் எல்லா பிரஜா உற்பத்திக்கும் கஷ்யபரே காரணம் என்பதால் கோத்திரம் தெரியாதவர்கள் கஷ்யப கோத்ரம் என்பதுண்டு.