Pages

Wednesday, July 17, 2013

சிவாஷ்டோத்திர சதம் - 1


சில நாட்களாகவே இதை செய்ய ஒரு உந்துதல் இருந்து வந்தது. இறைவனின் எந்த நாமாவையுமே அப்படியே சொல்வதே போதும் என்றாலும் பொருள் தெரிந்து சொன்னால் கொஞ்சம் பரவாயில்லையே என்று தோன்றியது.

அதற்காக ​ வலையில் பொருள் தேடிய போது ஆங்கிலத்தில் ​ ஒரே ​ ஒரு ஆவணம் மட்டுமே ​கிடைத்தது. அதில் ​ இருந்த மொழி பெயர்ப்பு அவ்வளவு திருப்தி அளிக்கவில்லை. ஆனாலும் அதை ஒரு அடிப்படையாக வைத்துக்கொண்டு பொருள் காண முயன்றேன். இதற்கு உதவியாக என் மகனார் - சம்ஸ்க்ருத புலவரையும் அழைத்தேன். அவர் நேரம் இன்மையால் உடனடியாக முழு ஈடுபாடு கொள்ள முடியவில்லை.​

ஆகவே ​ சற்றொப்ப ​ஒரு ​ வாரம் கழித்து இதை குழுவில் வெளியிடத் துவங்கினேன். கூடுதல் விஷயங்கள் கிடைத்தன.   வரும் சில நாட்களில் பகுதி பகுதியாக ​இதை  ​ வெளியிட உத்தேசம். பெரியவர்கள் படித்துப்பார்த்து பரிந்துரைகள் செய்ய வேண்டுகிறேன்.


உபயோகித்த சம்ஸ்க்ருத அகராதி http://spokensanskrit.de/index.php
சில சொற்களுக்கு ராமக்ருஷ்ணா மிஷன் 'அண்ணா' வின் ருத்ரம் புத்தகத்தில் விடை கிடத்தது.
தமிழில் பொருத்தமான பதிகங்கள் இட்டவர் சிவசிவா, நாயன்மார் அண்ணா என்றெல்லாம் அழைக்கப்படும் ஸ்ரீ. சுப்ரமணியன் அவர்கள். 


1ஓம்ʼ ஶிவாய நம​:ॐ शिवाय नमःom śivāya namaḥமங்களமானவனுக்கு நமஸ்காரம்.
2ஓம்ʼ மஹேஶ்வராய நம​:ॐ महेश्वराय नमःom maheśvarāya namaḥஅனைத்திற்கும் அதிபதிக்கு நமஸ்காரம்.
3ஓம்ʼ ஶம்ப⁴வே நம​:ॐ शम्भवे नमः om śambhave namaḥமங்களங்களின் இருப்பிடமானவருக்கு நமஸ்காரம்.
4ஓம்ʼ பினாகினே நம​:ॐ पिनाकिने नमःom pinākine namaḥபினாகம் என்னும் வில்லை ஏந்தியவனுக்கு நமஸ்காரம்.
5ஓம்ʼ ஶஶிஶேக²ராய நம​:ॐ शशिशेखराय नमःom śaśiśekharāya namaḥபிறை சந்திரனை சூடியவனுக்கு நமஸ்காரம்.
6ஓம்ʼ வாமதே³வாய நம​:ॐ वामदेवाय नमःom vāmadevāya namaḥஎல்லா வழிகளிலும் மங்களகரமானவனுக்கும் மகிழ்விப்பவனுக்கும் நமஸ்காரம்.
7ஓம்ʼ விரூபாக்ஷாய நம​:ॐ विरूपाक्षाय नमःom virūpākṣāya namaḥவித்தியாசமான கண்களை உடையவனே நமஸ்காரம்.
8ஓம்ʼ கபர்தி³னே நம​:ॐ कपर्दिने नमःom kapardine namaḥதடித்த சடையனே நமஸ்காரம்
9ஓம்ʼ நீலலோஹிதாய நம​:ॐ नीललोहिताय नमःom nīlalohitāya namaḥகழுத்தில் கறுத்தவனும் ஜடையில் சிவந்தவனுமானவனுக்கு நமஸ்காரம்.
10ஓம்ʼ ஶங்கராய நம​:ॐ शङ्कराय नमःom śaṅkarāya namaḥஸாத்விகமான ஸுகத்தை  அளிப்பவருக்கு நமஸ்காரம்.
3, 8 மற்றும் 10 க்கு அண்ணாவின் புத்தகத்திலிருந்து உசாத்துணைகள் கிடைத்தன.

2. மஹேஶ்வரன்   - பெரியபெருமான்


மருவார் கொன்றை மதிசூடி
    மாணிக் கத்தின் மலைபோல
வருவார் விடைமேல் மாதோடு
    மகிழ்ந்து பூதப் படைசூழத்
திருமால் பிரமன் இந்திரற்குந்
    தேவர் நாகர் தானவர்க்கும்
பெருமான் கடவூர் மயானத்துப்
    பெரிய பெருமா னடிகளே. 
6 .வாம தேவன் வளநகர் வைகலும்
காம மொன்றில ராய்க்கை விளக்கொடு
தாமம் தூபமும் தண்நறுஞ் சாந்தமும்
ஏம மும்புனை வாரெதிர் செல்லலே.


வாமதேவன் - சிவன். சதாசிவமூர்த்தியாகிய இறைவனது வடக்கு நோக்கிய திருமுகம் வாமதேவமுகம் எனப்படும்.

9. நீலலோஹிதன்.
செய்யாய் கரியாய் வெளியாய் போற்றி
    செல்லாத செல்வ முடையாய் போற்றி
ஐயாய் பெரியாய் சிறியாய் போற்றி
    ஆகாய வண்ண முடையாய் போற்றி
வெய்யாய் தணியாய் அணியாய் போற்றி
    வேளாத வேள்வி யுடையாய் போற்றி
கையார் தழலார் விடங்கா போற்றி
    கயிலை மலையானே போற்றி போற்றி.

No comments: