Pages

Wednesday, July 31, 2013

சிவாஷ்டோத்திர சதம் - 11


101 ஓம்ʼ பூஷத³ந்தபி⁴தே³ நம: ॐ पूषदन्तभिदे नमः oṁ pūṣadantabhide namaḥ பூஷா என்னும் தேவதையின் பற்களை அகற்றி தண்டனை அளித்தவனுக்கு நமஸ்காரம்
102 ஓம் அவ்யக்³ராய நம: ॐ अव्यग्राय नमः om avyagrāya namaḥ எதிலும் அல்லல் உறாதவனுக்கு
103 ஓம்ʼ ஸஹஸ்ராக்ஷாய நம: ॐ सहस्राक्षाय नमः oṁ sahasrākṣāya namaḥ தன் ஆயிரம் (எண்ணற்ற) கண்களால் அனைத்தையும் காண்பவனுக்கு நமஸ்காரம்
104 ஓம்ʼ ஸஹஸ்ரபதே³ நம: ॐ सहस्रपदे नमः oṁ sahasrapade namaḥ தன் ஆயிரம் (எண்ணற்ற) கால்களால் எங்கும் செல்லக்கூடியவனுக்கு நமஸ்காரம்
105 ஓம் அபவர்க³ப்ரதா³ய நம: ॐ अपवर्गप्रदाय नमः om apavargapradāya namaḥ மோக்ஷத்தை அளிப்பவனுக்கு
106 ஓம் அநந்தாய நம: ॐ अनन्ताय नमः om anantāya namaḥ முடிவு இல்லாதவனுக்கு நமஸ்காரம்
107 ஓம்ʼ தாரகாய நம: ॐ तारकाय नमः oṁ tārakāya namaḥ சம்சார கடலை தாண்டுவிப்பவனுக்கு நமஸ்காரம்

108 ஓம்ʼ பரமேஶ்வராய நம: ॐ परमेश्वराय नमः oṁ parameśvarāya namaḥ எல்லாவற்றையும் கட்டுப்படுத்தக் கூடியவனுக்கு நமஸ்காரம்

#101: pūṣadantabhide namaḥ :
பகலவன் பல் உகுத்தாய் போற்றி

पूषन् m. (nom. पूषा, -षणौ, -षणः) [पूष्-कनिन्; Uṇ.1. 156] 1 A Vedic deity. -2 The protector of the universe; Īśop.16. -3 The sun; सदापान्थः पूषा गगनपरिमाणं कलयति Bh.2.114; इन्धनौघधगप्यग्निस्त्विषा नात्येति पूषणम् Śi.2.23; नवीनमिव पूषणम् Śiva B.15.26. -4 One of the 12 Ādityas; Mb.12.15.18. -5 The earth. -Comp. -अनुजः rain; प्रास्यद् द्रोणसुतो बाणान् वृष्टिं पूषानुजो यथा Mb.8. 2.29. -अरिः, असुहृद् m. an epithet of Śiva. -आत्मजः 1 a cloud. -2 an epithet of Indra. -3 an epithet of Karṇa; पूषात्मजो मर्मसु निर्बिभेद Mb.8.89.76. -दन्तहरः an epithet of Vīrabhadra; see अदन्त.

अदन्त a. [. .] 1 Toothless. -2 Not yet having the teeth formed or grown (said of young ones of men or animals before the teething time). -3 Ending in अत् or . P.VIII.4.7. -तः 1 A leech. -2 N. of Pūṣan, one of the 12 Ādityas, he having lost his teeth at the destruction of Dakṣa's sacrifice by Vīrabhadra.

6.33.10
பகலவன்தன் பல்லுகுத்த படிறன் தன்னைப்
..
பராய்த் துறைபைஞ் ஞீலியிடம் பாவித் தானை
(
சூரியன் ஒருவனுடைய பற்களைத் தகர்த்த ......)6.96.9எச்சனிணத் தலைகொண்டார் பகன்கண் கொண்டார்
..
இரவிகளி லொருவன்பல் லிறுத்துக் கொண்டார்

(......
சூரியர்களில் ஒருவனாகிய பகனது கண்ணைக் கொண்டவரும், சூரியர்களில் மற்றொருவனுடைய பற்களை உடைத்து ஒறுத்தலைக் கொண்டவரும், ..... அறிவில்லாத தக்கனுடைய வேள்வி முழுவதையும் அதில் ஈடுபட்டார் அனைவருக்கும் அச்சம் உண்டாக அழித்துப் பின் அனைவருக்கும் அருள் செய்தவரும் ஆகிய சிவபெருமானார் ....)
#102: avyagrāya namaḥ :
துளக்கிலாதாய் போற்றி / துளக்கிலியே போற்றி

अव्यग्र a. 1 Not agitated or ruffled, steady, cool. -2 Not engaged or occupied (in business); अव्यग्रस्य पुनरस्य U.2. -3 Indifferent, undisturbed. -4 Attentive, careful. -ग्रम् ind. Quietly, at ease, cooly, leisurely; क्रव्यमव्यग्रमत्ति Māl.5.16.

व्यग्र a. [विगतमग्रं यस्य] 1 Bewildered, perplexed, distracted; तं व्यग्रचक्रं दितिपुत्राधमेन Bhāg.3.19.6. -2 Alarmed, frightened. -3 Eagerly or intently occupied (with loc., instr. or in comp.) स राजककुदव्यग्रपाणिभिः पार्श्ववर्तिभिः R.17.27; Mv.1.13;4.28; Ku.7.2; U.1. 23; Bv.1.123; आरभन्ते$ल्पमेवाज्ञाः कामं व्यग्रा भवन्ति च Śi.2.79. -4 Being in motion (as a wheel). -ग्रः N. of Viṣṇu.

2.104.2
விண்க ளார்தொழும் விளக்கினைத் துளக்கிலா விகிர்தனை விழவாரும்
மண்க ளார்துதித் தன்பரா யின்புறும் வள்ளலை மருவித்தம்
கண்க ளார்தரக் கண்டுநங் கடிக்குளத் துறைதரு கற்பகத்தைப்
பண்க ளார்தரப் பாடுவார் கேடிலர் பழியிலர் புகழாமே.

(
துளக்கு - Shaking; அசைவு. Grief, sorrow; வருத்தம்.
"Civaṉ, the light worshipped by the celestials who is different from this world and who is unshakable........" - Translation: V.M.Subramanya Aiyar)
4.15.8
மாலைத் தோன்றும் வளர்மதியை மறைக்காட் டுறையு மணாளனை
ஆலைக் கரும்பி னின்சாற்றை யண்ணா மலையெம் மண்ணலைச்
சோலைத் துருத்தி நகர்மேய சுடரிற் றிகழுந் துளக்கிலியை
மேலை வானோர் பெருமானை விருப்பால் விழுங்கி யிட்டேனே.
(
துளக்கு - அசைவு.உரையில்: ".... துருத்திநகர்க் கோயிலில் விரும்பி உறையும் சூரியனைப் போல ஒளிவீசும் அசைவற நின்ற பேராற்றலன் ...")
#103: sahasrākṣāya namaḥ :
ஆயிரங் கண்ணுடையாய் போற்றி
सहस्रम् [समानं हसति हस्-Tv.] 1 A thousand. -2 A large number

11.28.27அடியா யிரந்தொழில் ஆயின ஆயிரம் ஆயிரம்பேர்
முடியா யிரங்கண்கள் மூவா யிரம்முற்றும் நீறணிந்த
தொடியா யிரங்கொண்ட தோளிரண் டாயிரம் என்றுநெஞ்சே
படியாய் இராப்பகல் தென்மரு தாளியைப் பற்றிக்கொண்டே.
#104: sahasrapade namaḥ :
ஆயிரஞ் சேவடியாய் போற்றி
सहस्रम् [समानं हसति हस्-Tv.] 1 A thousand. -2 A large number

4.4.8
ஆயிரந் தாமரை போலும் ஆயிரஞ் சேவடி யானும்
ஆயிரம் பொன்வரை போலும் ஆயிரந் தோளுடை யானும்
ஆயிரம் ஞாயிறு போலும் ஆயிரம் நீண்முடி யானும்
ஆயிரம் பேருகந் தானு மாரூ ரமர்ந்தவம் மானே.
#105: apavargapradāya namaḥ :
வீடருள வல்லாய் போற்றி
अपवर्गः 1 Completion, end, fufilment or accomplishment of an action; अपवर्गे तृतीया P.II.3.6;III.4. 6; (अपवर्गः = क्रियाप्राप्तिः or समाप्तिः Sk.) तेषां चैवापवर्गाय मार्गं पश्यामि नाण्डज Mb.5.113.17. क्रियापवर्गेष्वनुजीविसात्कृताः Ki.1.14; अपवर्गे तृतीयेति भणतः पाणिनेरपि N.17.68; Ki. 16.49; पञ्च˚ coming to an end in 5 days. -2 An exception, special rule; अभिव्याप्यापकर्षणमपवर्गः Suśr. -3 Absolution, final beatitude; अपवर्गमहोदयार्थयोर्भुवमंशाविव धर्मयोर्गतौ R.8.16; ज्ञानेन चापवर्गः Sāṅkhya K.44

6.5.6
பாடுவார் பாட லுகப்பாய் போற்றி
..
பழையாற்றுப் பட்டீச் சுரத்தாய் போற்றி
வீடுவார் வீடருள வல்லாய் போற்றி
..
வேழத் துரிவெருவப் போர்த்தாய் போற்றி
நாடுவார் நாடற் கரியாய் போற்றி
..
நாக மரைக்கசைத்த நம்பா போற்றி
ஆடும்ஆன் ஐந்தும் உகப்பாய் போற்றி
..
அலைகெடில வீரட்டத் தாள்வாய் போற்றி.
(..........
உலகப் பற்றறுத்த அடியார்களுக்கு வீடுபேற்றினை அருள வல்லவனே ..........)
#106: anantāya namaḥ :
எல்லையிலாதாய் போற்றி / அளவிலாப் பெம்மானே போற்றி
अनन्त a. [नास्ति अन्तो यस्य] Endless, infinite, eternal, boundless, inexhaustible; ˚रत्नप्रभवस्य यस्य Ku.1.3. -न्तः 1 N. of Viṣṇu; गन्धर्वाप्सरसः सिद्धाः किन्नरोरगचारणाः । नान्तं गुणानां जानन्ति (नास्यान्तमधिगच्छन्ति) तेनानन्तो$यमुच्यते ॥; also of Viṣṇu's couch, the serpent #-Śeṣa; of Kṛiṣṇa and his brother; of Siva,

8.1 - திருவாசகம் - சிவபுராணம்
விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய்
எண்ணிறந் தெல்லை யிலாதானே! நின்பெருஞ்சீர்
பொல்லா வினையேன் புகழுமா றொன்றறியேன் 25
.........
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத் தொளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கியென் ஆருயிராய் நின்றானே
இன்பமுந் துன்பமும் இல்லானே உள்ளானே 70
(.....
ஒளிப்பிழம்பாகி மனத்தைக் கடந்து அளவின்றி நிற்பவனே .......
...
தெவிட்டாத அமிர்தமே! எல்லையில்லாத பெருமானே! ....)

#107: tārakāya namaḥ :
புணையாளனே போற்றி
தாரகன் - n. < tāraka. 1. One who helps in crossing or overcoming; கடப்பிப்போன்.

8.13.1 -
திருவாசகம் - திருப்பூவல்லி - 1இணையார் திருவடிஎன் தலைமேல் வைத்தலுமே
துணையான சுற்றங்கள் அத்தனையுந் துறந்தொழிந்தேன்
அணையார் புனற்றில்லை அம்பலத்தே ஆடுகின்ற
புணையாளன் சீர்பாடிப் பூவல்லி கொய்யாமோ.
(....
அம்பலத்தில் நடிக்கின்ற, நமதுபிறவிக் கடலுக்கு ஓர் மரக்கலம் போல்பவனாகிய சிவபெருமானது பெருமையைப் புகழ்ந்து பாடி .....)#108: parameśvarāya namaḥ :
மூவரின் முதல்வா போற்றி / மேலோர்க்கும் மேலோர்க்கும் மேலாய் போற்றி
4.23.6
பார்த்திருந் தடிய னேனான் பரவுவன் பாடி யாடி
மூர்த்தியே யென்ப னுன்னை மூவரின் முதல்வ னென்பன்
ஏத்துவா ரிடர்க டீர்ப்பாய் தில்லைச்சிற் றம்ப லத்துக்
கூத்தாவுன் கூத்துக் காண்பான் கூடநான் வந்த வாறே.
(.....
உன்னை மூவரினும் முதல்வனாகிய மூர்த்தியே என்று அழைப்பேன். ....)

6.32.8
உள்ளமா யுள்ளத்தே நின்றாய் போற்றி
..
உகப்பார் மனத்தென்றும் நீங்காய் போற்றி
வள்ளலே போற்றி மணாளா போற்றி
..
வானவர்கோன் தோள்துணித்த மைந்தா போற்றி
வெள்ளையே றேறும் விகிர்தா போற்றி
..
மேலோர்க்கும் மேலோர்க்கும் மேலாய் போற்றி
தெள்ளுநீர்க் கங்கைச் சடையாய் போற்றி
..
திருமூலட் டானனே போற்றி போற்றி.

(
மேலோர் - தேவர். அவர்க்கு மேலோர், அயனும் மாலும்.)

அருமையான தமிழ் ஆக்கத்திற்கும், உசாத்துணைகளுக்கும் 'நாயன்மார் அண்ணா'  சுப்ரமணியனுக்கு பல கோடி வாழ்த்துகள்!

 

No comments: