Pages

Thursday, July 25, 2013

சிவாஷ்டோத்திர சதம் - 8


70 ஓம்ʼ ப்ரமதா²தி⁴பாய நம: ॐ प्रमथाधिपाय नमः oṁ pramathādhipāya namaḥ ப்ரமதம் என்னும் பூத கணங்களுக்கு அதிபதியே நமஸ்காரம்.
71 ஓம்ʼ ம்ருʼத்யுஞ்ஜயாய நம: ॐ मृत्युञ्जयाय नमः oṁ mr̥tyuñjayāya namaḥ இறப்பை ஜெயித்தவனே நமஸ்காரம்
72 ஓம்ʼ ஸூக்ஷ்மதநவே நம: ॐ सूक्ष्मतनवे नमः oṁ sūkṣmatanave namaḥ சூக்குமத்திலும் சூக்குமமாக இருப்பவனே நமஸ்காரம்
73 ஓம்ʼ ஜக³த்³வ்யாபிநே நம: ॐ जगद्व्यापिने नमः oṁ jagadvyāpine namaḥ உலகம் முழுதும் வியாபித்து இருப்பவனே நமஸ்காரம்
74 ஓம்ʼ ஜக³த்³கு³ரவே நம: ॐ जगद्गुरवे नमः oṁ jagadgurave namaḥ உலகத்துக்கு குருவாக இருப்பவனே நமஸ்காரம்
75 ஓம்ʼ வ்யோமகேஶாய நம: ॐ व्योमकेशाय नमः oṁ vyomakeśāya namaḥ ஆகாயத்தில் பரவிய கேசத்தை உடையவனே நமஸ்காரம்
76 ஓம்ʼ மஹாஸேநஜநகாய நம: ॐ महासेनजनकाय नमः oṁ mahāsenajanakāya namaḥ சேனைகளுக்கு தலைவனான ஸுப்ரஹ்மண்யனை பெற்றவனே நமஸ்காரம்
77 ஓம்ʼ சாருவிக்ரமாய நம: ॐ चारुविक्रमाय नमः oṁ cāruvikramāya namaḥ நயமுற வீரச்செயல்கள் செய்தவனே நமஸ்காரம்
78 ஓம்ʼ ருத்³ராய நம: ॐ रुद्राय नमः oṁ rudrāya namaḥ பக்தர்களின் துன்பங்களை போக்குபவனே நமஸ்காரம்
79 ஓம்ʼ பூ⁴தபதயே நம: ॐ भूतपतये नमः oṁ bhūtapataye namaḥ பூதங்களின் தலைவனே நமஸ்காரம்
80 ஓம்ʼ ஸ்தா²ணவே நம: ॐ स्थाणवे नमः oṁ sthāṇave namaḥ அசைக்க முடியாமல் நிலைபெற்றவனே நமஸ்காரம்


#71: mr̥tyuñjayāya namaḥ :
கூற்றைவென்றான்.
திருவாசகம் - திருப்பாண்டிப் பதிகம் - 10கூற்றைவென் றாங்கைவர் கோக்களை யும்வென் றிருந்தழகால்
வீற்றிருந் தான்பெருந் தேவியுந் தானும்ஓர் மீனவன்பால்

ஏற்றுவந் தாருயிர் உண்ட திறல்ஒற்றைச் சேவகனே

தேற்றமி லாதவர் சேவடி சிக்கெனச் சேர்மின்களே
.
#72: sūkṣmatanave namaḥ
நுண்ணியன்.

1.61.6
நுண்ணியான் மிகப்பெரியான் நோவுளார் வாயுளான்
தண்ணியான் வெய்யான்நந் தலைமேலான் மனத்துளான்
திண்ணியான் செங்காட்டங் குடியான்செஞ் சடைமதியக்
கண்ணியான் கண்ணுதலான் கணபதீச் சரத்தானே.
#73: jagadvyāpine namaḥ
எங்கும் பரந்தான்.


6.55.9
மூவாய் பிறவாய் இறவாய் போற்றி
..
முன்னமே தோன்றி முளைத்தாய் போற்றி
தேவாதி தேவர்தொழுந் தேவே போற்றி
..
சென்றேறி யெங்கும் பரந்தாய் போற்றி
ஆவா அடியேனுக் கெல்லாம் போற்றி
..
அல்லல் நலிய அலந்தேன் போற்றி
காவாய் கனகத் திரளே போற்றி
..
கயிலை மலையானே போற்றி போற்றி.எங்கும் பரந்தாய் = எங்கும் பரவியிருப்பவனே;


#74: jagadgurave namaḥ
எல்லாருக்கும் குரவன்.5.22.9சிரமஞ் செய்து சிவனுக்குப் பத்தராய்ப்
பரம னைப்பல நாளும் பயிற்றுமின்

பிரமன் மாலொடு மற்றொழிந் தார்க்கெலாம்
குரவ னாரு
றை யுங்குட மூக்கிலே.பிரமன் மாலொடு மற்று ஒழிந்தார்க்கு எலாம் குரவனார் - பிரமன், திருமால் முதலிய தேவர்க்கெல்லாம் பரம ஞானாசாரியனாக விளங்கும் பரமன்;#76: mahāsenajanakāya namaḥ
அமரர் சேனை நாயகன் தாதன்.

7.68.7
மறவ னைஅன்று பன்றிப்பின் சென்ற
..
மாயனை நால்வர்க் காலின்கீழ் உரைத்த
அறவ னைஅம ரர்க்கரி யானை
..
அமரர் சேனைக்கு நாயக னான
குறவர் மங்கைதன் கேள்வனைப் பெற்ற
..
கோனை நான்செய்த குற்றங்கள் பொறுக்கும்
நறைவி ரியும்நள் ளாறனை அமுதை
..
நாயி னேன்மறந் தென்நினைக் கேனே

#77: cāruvikramāya namaḥ
மனங்கவர் மைந்தன்.
(
மைந்து - அழகு; வலிமை; மைந்தன் - வீரன்;)6.32.1
கற்றவர்க ளுண்ணுங் கனியே போற்றி
..
கழலடைந்தார் செல்லுங் கதியே போற்றி
அற்றவர்கட் காரமுத மானாய் போற்றி
..
அல்லலறுத் தடியேனை ஆண்டாய் போற்றி
மற்றொருவ ரொப்பில்லா மைந்தா போற்றி
..
வானவர்கள் போற்றும் மருந்தே போற்றி
செற்றவர்தம் புரமெரித்த சிவனே போற்றி
..
திருமூலட் டானனே போற்றி போற்றி.

#78: rudrāya namaḥ
தொழுதகை துன்பம் துடைப்பான்.
(வணங்கிய கையினரின் துன்பங்களை நீக்குவோன்.)உருத்திரன் - துன்பத்தை ஓட்டுகின்றவன்;

6.5.8வெஞ்சினவெள் ஏறூர்தி யுடையாய் போற்றி
..
விரிசடைமேல் வெள்ளம் படைத்தாய் போற்றி

துஞ்சாப் பலிதேருந் தோன்றால் போற்றி

..
தொழுதகை துன்பந் துடைப்பாய் போற்றி
நஞ்சொடுங்குங் கண்டத்து நாதா போற்றி

..
நான்மறையோ டாறங்க மானாய் போற்றி

அஞ்சொலாள் பாகம் அமர்ந்தாய் போற்றி

..
அலைகெடில வீரட்டத் தாள்வாய் போற்றி
.

8.004 - திருவாசகம் - போற்றித்திருவகவல்
.............
என்னையும் ஒருவ னாக்கி இருங்கழல்

சென்னியில் வைத்த சேவக போற்றி
130தொழுதகை துன்பந் துடைப்பாய் போற்றி
அழிவிலா ஆனந்த வாரி போற்றி

.............
(
தொழுத கை
- வணங்கிய உடன், 'கை' என்பது இங்குக் காலத்தை உணர்த்திற்று. இனி, 'தொழு தகை' என்றானும், 'தொழுத கை' என்றானும் பிரித்து, 'தொழுந் தகைமையுடையார், தொழுத கையினை யுடையார்' எனப்பொருள் கொள்ளலுமாம். துடைத்தல் - விரையச் சென்று முற்றத் தொலைத்தல்,)#79: bhūtapataye namaḥ
பூதப்படை உடையான்.

6.32.4
பொன்னியலும் மேனியனே போற்றி போற்றி

..
பூதப் படையுடையாய் போற்றி போற்றி
மன்னியசீர் மறைநான்கு மானாய் போற்றி

..
மறியேந்து கையானே போற்றி போற்றி

உன்னுமவர்க் குண்மையனே போற்றி போற்றி

..
உலகுக் கொருவனே போற்றி போற்றி

சென்னிமிசை வெண்பிறையாய் போற்றி போற்றி

..
திருமூலட் டானனே போற்றி போற்றி
.#80: sthāṇave namaḥ தாணு.
(
தாணு
- நிலைபெற்று இருப்பவன்; தூண்;)
(
स्थाणु a. [स्था-नु पृषो˚ णत्वम्] Firm, fixed, steady, stable, immoveable, motionless; नित्यः सर्वगतः स्थाणुरचलो$यं सनातनः Bg.2.24; Mb.1.34.5. -णुः 1 An epithet of Śiva; स स्थाणुः स्थिरभक्तियोगसुलभो निःश्रेयसायास्तु वः V.1.1. -2 A stake, post, pillar; अपि स्थाणुवदासीनः Pt.1.49; किं स्थाणुरयमुत पुरुषः. )1.62.9நாணமுடை வேதியனும் நாரணனும் நண்ணவொணாத்
தாணு
வெனை யாளுடையான் தன்னடியார்க் கன்புடைமை
பாணனிசை பத்திமையாற் பாடுதலும் பரிந்தளித்தான்

கோணலிளம் பிறைச்சென்னிக் கோளிலியெம் பெருமானே
.



 

No comments: