Pages

Tuesday, July 30, 2013

சிவாஷ்டோத்திர சதம் - 10


91 ஓம்ʼ ம்ருʼடா³ய நம: ॐ मृडाय नमः oṁ mr̥ḍāya namaḥ பக்தர்களுக்கு இன்பத்தை அளிப்பவனுக்கு நமஸ்காரம்
92 ஓம்ʼ பஶுபதயே நம: ॐ पशुपतये नमः oṁ paśupataye namaḥ ஜீவர்களை ஆள்பவனுக்கு நமஸ்காரம்
93 ஓம்ʼ தே³வாய நம: ॐ देवाय नमः oṁ devāya namaḥ ஒளிர்பவனுக்கு நமஸ்காரம்
94 ஓம்ʼ மஹாதே³வாய நம: ॐ महादेवाय नमः oṁ mahādevāya namaḥ தேவர்களில் பெரியவனுக்கு நமஸ்காரம்
95 ஓம் அவ்யயாய நம: ॐ अव्ययाय नमः om avyayāya namaḥ என்றும் மாறாதவனுக்கு நமஸ்காரம்
96 ஓம்ʼ ஹரயே நம: ॐ हरये नमः oṁ haraye namaḥ எல்லா பந்தங்களையும் எடுத்துச்செல்பவனுக்கு நமஸ்காரம்
97 ஓம்ʼ ப⁴க³நேத்ரபி⁴தே³ நம: ॐ भगनेत्रभिदे नमः oṁ bhaganetrabhide namaḥ பகன் என்னும் தேவதையின் கெட்ட கண்ணை நீக்கி தண்டனை அளித்தவனுக்கு நமஸ்காரம்
98 ஓம் அவ்யக்தாய நம: ॐ अव्यक्ताय नमः om avyaktāya namaḥ சூக்குமமாக இருப்பவனுக்கு நமஸ்காரம்
99 ஓம்ʼ த³க்ஷாத்⁴வரஹராய நம: ॐ दक्षाध्वरहराय नमः oṁ dakṣādhvaraharāya namaḥ தக்ஷனின் குறுகிய நோக்கம் கொண்ட யாகத்தை அழித்தவனுக்கு நமஸ்காரம்
100 ஓம்ʼ ஹராய நம: ॐ हराय नमः oṁ harāya namaḥ பக்தர்களின் பாபங்களை நீக்குபவனுக்கு நமஸ்காரம்

#91: mr̥ḍāya namaḥ :
இன்பனே போற்றி / பிழையைப் பொறுப்பாய் போற்றி
मृड् 6, 9 P. (मृडति, मृड्नाति) 1 To be gracious, be pleased. -2 To forgive, pardon. -3 To delight, gladden; इन्द्रारिव्याकुलं लोकं मृडयन्ति युगे युगे Bhāg.1.3.28. -4 To be delighted or happy.मृडः An epithet of Śiva; जनसुखकृते सत्त्वोद्रिक्तौ मृडाय नमो नमः Śiva-mahimna S.3.
4.74.2முன்பனை யுலகுக் கெல்லா மூர்த்தியை முனிக ளேத்தும்
இன்பனை யிலங்கு சோதி யிறைவனை யரிவை யஞ்ச
வன்பனைத் தடக்கை வேள்விக் களிற்றினை யுரித்த வெங்கள்

அன்பனை நினைந்த நெஞ்ச மழகிதா நினைந்த வாறே
.

2,64.1
தேவா சிறியோம் பிழையைப் பொறுப்பாய் பெரியோனே

ஆவா வென்றங் கடியார் தங்கட் கருள்செய்வாய்

ஓவா வுவரிகொள்ள வுயர்ந்தா யென்றேத்தி

மூவா முனிவர் வணங்குங் கோயின் முதுகுன்றே
.
#92: paśupataye namaḥ :
பசுபதியே போற்றி / உயிர்கட்குத் தலைவா போற்றி
1.11.5ஆயாதன சமயம்பல அறியாதவன் நெறியின்
தாயானவன்
உயிர்கட்குமுன் தலையானவன் மறைமுத்
தீயானவன் சிவனெம்மிறை செல்வத்திரு வாரூர்

மேயானவ னுறையும்மிடம் வீழிம்மிழ லையே
.
#93: devāya namaḥ :
தேவே போற்றி / தேவனே போற்றி / வானவனே போற்றி
देव a. (-वी f.) [दिव्-अच्] 1 Divine, celestial; Bg.11. 11; Ms.12.117. -2 Shining; यज्ञस्य देवमृत्विजम् Rv.1.1.1. -3 Fit to be worshipped or honoured. -वः 1 A god, deity; एको देवः केशवो वा शिवो वा Bh.3.12.
#94: mahādevāya namaḥ :
மாதேவா போற்றி / தேவர்க்கும் தேவனே போற்றி
6.55.4வானத்தார் போற்றும் மருந்தே போற்றி
..
வந்தென்றன் சிந்தை புகுந்தாய் போற்றி

ஊனத்தை நீக்கும் உடலே போற்றி

..
ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி

தேனத்தை வார்த்த தெளிவே போற்றி

..
தேவர்க்குந் தேவனாய் நின்றாய் போற்றி
கானத்தீ யாட லுகந்தாய் போற்றி

..
கயிலை மலையானே போற்றி போற்றி
.
#95: avyayāya namaḥ :
மன்னியவனே போற்றி / அழிவிலாதாய் போற்றி
अव्यय a. [नास्ति व्ययो यस्य] 1 (a) Not liable to change, imperishable, undecaying, immutable; वेदाविना- शिनं नित्यं य एनमजमव्ययम् Bg.2.21; विनाशमव्ययस्यास्य न कश्चित्कर्तुमर्हति Bg.2.17,4.1,6,13;7.24-25;15.5,17. Ms. 1.18,19,57;2.81; R.8.24. (b) Eternal, everlasting, अश्वत्थं प्राहुरव्ययम् Bg.15.1; अकीर्तिं कथयिष्यन्ति ते$व्ययाम् Bg.2.24. -2 Unexpended, unwasted. -3 Economical. -4 Giving imperishable fruit. -यः 1 N. of Viṣṇu. -2 N. of Śiva
7.22.1முன்னவன் எங்கள்பிரான் முதல் காண்பரி தாயபிரான்
சென்னியில் எங்கள்பிரான் திரு நீல மிடற்றெம்பிரான்

மன்னிய எங்கள்பிரான் மறை நான்குங்கல் லால்நிழற்கீழ்ப்
பன்னிய எங்கள்பிரான் பழ மண்ணிப் படிக்கரையே
.
(மன்னிய எங்கள்பிரான் - என்றும் அழியாது நிலைபெற்றிருப்பவன்)
8.4 - திருவாசகம் - போற்றித் திருவகவல்

சென்னியில் வைத்த சேவக போற்றி
130தொழுதகை துன்பந் துடைப்பாய் போற்றி
அழிவிலா ஆனந்த வாரி போற்றி
அழிவதும் ஆவதுங் கடந்தாய் போற்றி

முழுவதும் இறந்த முதல்வா போற்றி

மானோர் நோக்கி மணாளா போற்றி
135
(அழிவிலா ஆனந்த வாரி - அழிவில்லாத இன்பக்கடல். )


#97: bhaganetrabhide namaḥ :
பகன்கண் கொண்டாய் போற்றி
6.96.9எச்சனிணத் தலைகொண்டார் பகன்கண் கொண்டார்
..
இரவிகளி லொருவன்பல் லிறுத்துக் கொண்டார்

மெச்சன்வியாத் திரன்தலையும் வேறாக் கொண்டார்

..
விறலங்கி கரங்கொண்டார் வேள்வி காத்த

உச்சநமன் தாளறுத்தார் சந்திரனை யுதைத்தார்

..
உணர்விலாத் தக்கன்றன் வேள்வி யெல்லாம்

அச்சமெழ அழித்துக்கொண் டருளுஞ் செய்தார்

..
அடியேனை யாட்கொண்ட அமலர் தாமே
.
(......
சூரியர்களில் ஒருவனாகிய பகனது கண்ணைக் கொண்டவரும்
, சூரியர்களில் மற்றொருவனுடைய பற்களை உடைத்து ஒறுத்தலைக் கொண்டவரும், ..... அறிவில்லாத தக்கனுடைய வேள்வி முழுவதையும் அதில் ஈடுபட்டார் அனைவருக்கும் அச்சம் உண்டாக அழித்துப் பின் அனைவருக்கும் அருள் செய்தவரும் ஆகிய சிவபெருமானார் ....)
#98: avyaktāya namaḥ :
தோன்றாப் பெருமையனே போற்றி / அருவமும் ஆனாய் போற்றி
अव्यक्त a. 1 Indistinct, not manifest or apparent, inarticulate; ˚वर्ण indistinct accents; Ś.7.17; फलम- व्यक्तमब्रवीत्. -2 Invisible, imperceptible. -3 Undetermined; अव्यक्तो$यमचिन्त्यो$यम् Bg.2.25;8.2. -4 Undeveloped, uncreated. -5 (In alg.) Unknown (as a quantity or number). -क्तः 1 N. of Viṣṇu. -2 N. of Śiva. -3 Cupid.

8.1 - திருவாசகம் - சிவபுராணம்
இன்பமுந் துன்பமும் இல்லானே உள்ளானே
70
அன்பருக் கன்பனே யாவையுமாய் அல்லையுமாஞ்

சோதியனே துன்னிருளே
தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே

ஈர்த்தென்னை யாட்கொண்ட எந்தை பெருமானே


8.
4 - திருவாசகம் - போற்றித் திருவகவல்
அருவமும் உருவமும் ஆனாய் போற்றி
மருவிய கருணை மலையே போற்றி
துரியமும் இறந்த சுடரே போற்றி 195
தெரிவரி தாகிய தெளிவே போற்றி
#99: dakṣādhvaraharāya namaḥ :
தக்கன் வேள்வி தகர்த்தாய் போற்றி

5.42.2பொக்கம் பேசிப் பொழுது கழியாதே
துக்கந் தீர்வகை சொல்லுவன் கேண்மினோ

தக்கன் வேள்வி தகர்த்த தழல்வண்ணன்
நக்கன் சேர்நல்லம் நண்ணுதல் நன்மையே
.
#100: harāya namaḥ :
(I think this is based on the name - रः - hara: )
அரனே போற்றி / அழிப்பாய் போற்றி
हर a. (-रा, -री f.) [हृ-अच्] 1 Taking away, removing, depriving one of; as in खेदहर, शोकहर. -2 Bringing, con- veying, carrying, taking; अपथहराः Ki.5.5; R.12.51. -3 Seizing, grasping. -4 Attracting, captivating. -5 Claiming, entitled to; as in रिक्थहर &c.; परिहृतमयशः पातितमस्मासु च घातितो$र्धराज्यहरः Mu.2.19. -6 Occupying; समादिदेशैकवधूं भवित्रीं प्रेम्णा शरीरार्धहरां हरस्य Ku.1.5. -7 Dividing. -रः 1 Śiva; श्रुताप्सरोगीतिरपि क्षणे$स्मिन् हरः प्रसं- ख्यानपरो बभूव Ku.3.4,67;1.5; Me.7.
அரன் - அழிப்பவன் / பிறப்பிறப்பை அழிப்பவன்.8,.1 -திருவாசகம் - சிவபுராணம்
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே
40ஆக்கம் அளவிறுதி இல்லாய் அனைத்துலகும்
ஆக்குவாய் காப்பாய்
அழிப்பாய் அருள்தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின்

 

 

No comments: