62 | ஓம் அநகா⁴ய நம: | ॐ अनघाय नमः | om anaghāya namaḥ | குற்றமற்றவனே நமஸ்காரம் | |||||
63 | ஓம்ʼ பு⁴ஜங்க³பூ⁴ஷணாய நம: | ॐ भुजङ्गभूषणाय नमः | oṁ bhujaṅgabhūṣaṇāya namaḥ | பாம்புகளை அணியாகக் கொண்டவனே நமஸ்காரம் | |||||
64 | ஓம்ʼ ப⁴ர்கா³ய நம: | ॐ भर्गाय नमः | oṁ bhargāya namaḥ | பாபங்களையும் கெட்ட எண்ணங்களையும் எரிப்பவனே நமஸ்காரம் | |||||
65 | ஓம்ʼ கி³ரித⁴ந்வநே நம: | ॐ गिरिधन्वने नमः | oṁ giridhanvane namaḥ | மேரு மலையை வில்லாகக் கொண்டவனே நமஸ்காரம் | |||||
66 | ஓம்ʼ கி³ரிப்ரியாய நம: | ॐ गिरिप्रियाय नमः | oṁ giripriyāya namaḥ | மலைகளை விரும்புவனே நமஸ்காரம் | |||||
67 | ஓம்ʼ க்ருʼத்திவாஸஸே நம: | ॐ
कृत्तिवाससे नमः |
oṁ kr̥ttivāsase namaḥ | கரித்தோல் அணிந்தவனே நமஸ்காரம் | |||||
68 | ஓம்ʼ புராராதயே நம: | ॐ पुरारातये नमः | oṁ purārātaye namaḥ | மூன்று புரங்களையும் அழித்தவனே (ஸ்தூல, சூக்கும, காரண சரீரங்களை அழித்தவனே) நமஸ்காரம் | |||||
69 | ஓம்ʼ ப⁴க³வதே நம: | ॐ भगवते नमः | oṁ bhagavate namaḥ | செல்வம், புகழ், கோன்மை, அறிவு, பற்றற்ற தன்மை உடையவனுக்கு நமஸ்காரம் |
|||||
70 | ஓம்ʼ ப்ரமதா²தி⁴பாய நம: | ॐ प्रमथाधिपाय नमः | oṁ pramathādhipāya namaḥ | ப்ரமதம் என்னும் பூத கணங்களுக்கு அதிபதியே நமஸ்காரம். |
62: anaghāya namaḥ
தூயான்
தூயானைத் தூயவா யம்மறை யோதிய
வாயானை வாளரக் கன்வலி வாட்டிய
தீயானைத் தீதில்கச் சித்திரு வேகம்பம்
மேயானை மேவுவா ரென்றலை மேலாரே.
வாயானை வாளரக் கன்வலி வாட்டிய
தீயானைத் தீதில்கச் சித்திரு வேகம்பம்
மேயானை மேவுவா ரென்றலை மேலாரே.
#63: bhujaṅgabhūṣaṇāya namaḥ
அரவாபரணன்.
அரவாபரணன் - n. < அரவு² + ā-bharaṇa. Šiva, as adorned with serpents; சிவன்.
#64: bhargāya namaḥ
தேசன்
भर्गः 1 N. of Śiva. -2 Of Brahman. -3 Radiance, lustre; आदित्यान्तर्गतं वर्चो भर्गाख्यं तन्मुमुक्षुभिः Yogiyājñaval- kya. -4 Roasting.
பாசம் பரஞ்சோதிக் கென்பாய் இராப்பகல்நாம்
பேசும்போ தெப்போதிப் போதா ரமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசி யிவையுஞ் சிலவோ விளையாடி
ஏசு மிடமீதோ விண்ணோர்க ளேத்துதற்குக்
கூசு மலர்ப்பாதந் தந்தருள வந்தருளுந்
தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள்
ஈசனார்க் கன்பார்யாம் ஆரேலோ ரெம்பாவாய்.
பேசும்போ தெப்போதிப் போதா ரமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசி யிவையுஞ் சிலவோ விளையாடி
ஏசு மிடமீதோ விண்ணோர்க ளேத்துதற்குக்
கூசு மலர்ப்பாதந் தந்தருள வந்தருளுந்
தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள்
ஈசனார்க் கன்பார்யாம் ஆரேலோ ரெம்பாவாய்.
".......... தாமரை மலர் போன்ற திருவடியை அன்பருக்குக் கொடுத்தருள எழுந்தருளும் ஒளி உருவன்; தில்லைச் சிற்றம்பலத்து இறைவனுக்கு ............"
#65: giridhanvane namaḥ
மலைவில்லியே போற்றி
9.7.8
வகைமிகும் அசுரர் மாளவந் துழிஞை
வானமர் விளைத்ததா ளாளன்
புகைமிகும் அனலிற் புரம்பொடி படுத்த
பொன்மலை வில்லிதன் புதல்வன்
திகைமிகு கீர்த்தித் திருவிடைக் கழியில்
திருக்குரா நீழற்கீழ் நின்ற
தொகைமிகு நாமத் தவன்திரு வடிக்கென்
துடியிடை மடல்தொடங் கினளே.
வகைமிகும் அசுரர் மாளவந் துழிஞை
வானமர் விளைத்ததா ளாளன்
புகைமிகும் அனலிற் புரம்பொடி படுத்த
பொன்மலை வில்லிதன் புதல்வன்
திகைமிகு கீர்த்தித் திருவிடைக் கழியில்
திருக்குரா நீழற்கீழ் நின்ற
தொகைமிகு நாமத் தவன்திரு வடிக்கென்
துடியிடை மடல்தொடங் கினளே.
மலைவில்லி = மலையை வில்லாக ஏந்திய சிவபெருமான்;
#66: giripriyāya namaḥ
மலையான் மருகன்.
(e.g. கிரிசுதா = பார்வதி.
प्रियः = son-in-law?)
प्रिय a. [प्रीणाति प्रि-तर्पणे क] (compar. प्रेयस्, superl. प्रेष्ठ) 1 Dear, beloved, liked, welcome, favourite; बन्धुप्रियाम् Ku.1.26; प्रकृत्यैव प्रिया सीता रामस्यासीन्महात्मनः Rām; R.3.29. -2 Pleasing, agreeable; तामूचतुस्ते प्रियमप्यमिथ्या R.14.6. -2 Fond of, liking, loving, devoted or attached to; प्रियमण्डना Ś.4.9.; प्रियारामा वैदेही U.2. -2 Dear, expensive. -5 Ved. Customary, familar, usual. -यः 1 A lover, husband; स्त्रीणामाद्यं प्रणयवचनं विभ्रमो हि प्रियेषु Me.28. -2 A kind of deer. -3 A son-in-law (जामाता); Ms.3.119 (com.).
மலையான் மருகனாய் நின்றாய் நீயே
பேசப் பெரிதும் இனியாய் நீயே
பிரானாய் அடியென்மேல் வைத்தாய் நீயே
தேச விளக்கெலா மானாய் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ.
ஓசை யொலியெலா மானாய் நீயே
உலகுக் கொருவனாய் நின்றாய் நீயே
வாச மலரெலா மானாய் நீயேமலையான் மருகனாய் நின்றாய் நீயே
பேசப் பெரிதும் இனியாய் நீயே
பிரானாய் அடியென்மேல் வைத்தாய் நீயே
தேச விளக்கெலா மானாய் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ.
#67: kr̥ttivāsase namaḥ
அதள் ஆடையன்.
(कृत्तिः f. [कृत्-क्तिन्] 1 Skin, hide (in general); Mu.3.2. -2 Especially, the hide of an antelope on which a religious student sits.)
சிவனெனு மோசை யல்ல தறையோ வுலகிற் றிருநின்ற செம்மை யுளதே
அவனுமொ ரைய முண்ணி யதளாடை யாவ ததன்மேலொ ராட லரவம்
கவணள வுள்ள வுண்கு கரிகாடு கோயில் கலனாவ தோடு கருதில்
அவனது பெற்றி கண்டு மவனீர்மை கண்டு மகநேர்வர் தேவ ரவரே.
அவனுமொ ரைய முண்ணி யதளாடை யாவ ததன்மேலொ ராட லரவம்
கவணள வுள்ள வுண்கு கரிகாடு கோயில் கலனாவ தோடு கருதில்
அவனது பெற்றி கண்டு மவனீர்மை கண்டு மகநேர்வர் தேவ ரவரே.
".... தோலையே ஆடையாக உடையவன். ...."
ஆடை ஆவது, அதள் (- தோல் ).
#69: bhagavate namaḥ
அறுகுணத்தான்.
(भगः (also भगम्) [भज्-घ] 1 One of the twelve forms of the sun; the sun. -2 The moon. -3 A form of Śiva. -4 Good fortune, luck, happy lot, happiness; आस्ते भग आसीनस्य Ait. Br.; भगमिन्द्रश्च वायुश्च भगं सप्तर्षयो ददुः Y.1.282. -5 Affluence,
prosperity; 'ऐश्वर्यस्य समग्रस्य वीर्यस्य यशसः श्रियः ।
ज्ञानवैराग्ययोश्चैव षण्णां भग इतीरणा ॥'; शमो दमो भगश्चेति यत्सङ्गाद्याति
संक्षयम् Bhāg.3.31.33.
பகம் - n. < bhaga. 1. The six attributes, aicuvariyam, vīriyam, pukaḻ, tiru, ñāṉam, vairākkiyam; ஐசுவரியம், வீரியம், புகழ், திரு, ஞானம், வைராக்கியம் என்ற அறுகுணங்கள். )
பிரியாத குணமுயிர்கட் கஞ்சோ டஞ்சாய்ப்
பிரிவுடைய குணம்பேசிற் பத்தோ டொன்றாய்
விரியாத குணமொருகால் நான்கே யென்பர்
விரிவிலாக் குணநாட்டத் தாறே யென்பர்
தெரிவாய குணமஞ்சுஞ் சமிதை யஞ்சும்
பதமஞ்சுங் கதியஞ்சுஞ் செப்பி னாரும்
எரியாய தாமரைமே லியங்கி னாரும்
இடைமருது மேவிய ஈச னாரே.
பிரிவுடைய குணம்பேசிற் பத்தோ டொன்றாய்
விரியாத குணமொருகால் நான்கே யென்பர்
விரிவிலாக் குணநாட்டத் தாறே யென்பர்
தெரிவாய குணமஞ்சுஞ் சமிதை யஞ்சும்
பதமஞ்சுங் கதியஞ்சுஞ் செப்பி னாரும்
எரியாய தாமரைமே லியங்கி னாரும்
இடைமருது மேவிய ஈச னாரே.
இடைமருது
மேவிய ஈசனார் உயிர்களை விட்டு நீங்காத பத்து இயற்கைப் பண்புகளாகவும்,
உயிர்களுக்கு மலச் சார்பினால் வரும் பதினொரு செயற்கைப் பண்புகளாகவும், பரம்
பொருளுக்கு என்று ஒருகால் தொகுத்துச் சொல்லப்படும் நான்கு பண்புகளாகவும்,
பிறிதொருகால் சொல்லப்படும் ஆறு பண்புகளாகவும் உள்ளனவற்றையும் மெய்ந்நூல்கள்
பற்றி ஆராய்ந்து உணரப்படும் பொதுவான ஐம்பண்புகளையும் ஐவகை
சமித்துக்களையும், திருவைந்தெழுத்தையும் உயிர்கள் சென்று சேரக்கூடிய வழிகள்
ஐந்தையும் குறிப்பிட்டு ஞானப்பிரகாசமாகிய ஒளியை உடைய அடியவர்களின்
உள்ளத்தாமரையில் உலவிவருபவராவார்.
குறிப்புரையில்: ".............. அறுகுணங்களாவன
'முற்றுணர்வு, வரம்பிலின்பம், இயற்கையுணர்வு. தன்வயம், முடிவிலாற்றல்,
பேரருள்' என்பன. இவை முறையே, 'சருவஞ்ஞதை, திருத்தி, அநாதிபோதம்,
சுவதந்திரதை, அனந்தசத்தி, அலுத்த சத்தி', எனவும் கூறப்படும். இவற்றோடு 'தூய
உடம்பு அல்லது விசுத்த தேகம், இயல்பாகவே பாசமின்மை அல்லது நிராமயம்'
என்னும் இரண்டுங்கூட்டி 'எட்டுக்குணம்' என்றலே விரித்துக் கூறலாகலின்,
'நான்கு' என்றும் 'ஆறு' என்றும் கூறுவன தொகுத்துக் கூறலாமாறு உணர்க. .........."
No comments:
Post a Comment