செவ்வாய்
கிழமை வெள்ளிக்கிழமை நல்ல
நாளா?
ரொம்ப
கோளாறான எண்ணங்கள் வந்து
ரொம்ப நாளாச்சில்ல?
மேலே கேட்ட
கேள்வி மனசில பல நாட்கள்
ஓடிகிட்டு இருந்தது.
சுக்கிரன் அசுர
குரு.
செவ்வாயும்
அடிதடிக்காரர்.
ஆனா இவங்களை
ரெப்ரசண்ட் செய்கிற நாட்கள்
மட்டும் நல்ல நாட்களா?
எப்படி?
செவ்வாய்,
வெள்ளி அன்னிக்கு
கோவிலுக்கு போறது விசேஷம்;
நல்ல நாளும்
அதுவுமா ஏண்டி அழுதுண்டு
இருக்கே?;
இது போல பல
வாக்கியங்களை கேள்விப்பட்டு
இருப்போம்.
அதனால இவற்றை
நல்ல நாள்ன்னு நினைக்கிறாங்க
என்பதில சந்தேகம் இல்லை.
அதெப்படி
நல்ல நாளாச்சு?
உலகம்
முழுதும் காலண்டர் பல விதங்களில
வித்தியாசமா இருந்தாலும்
ஏன் கிழமைகள் மட்டும் மாறலை?
அதுவும் உலகம்
முழுக்க ஒரே மாதிரிதான்
கிழமைகள்.
இன்னைக்கு இந்த
நாட்டில ஞாயித்து கிழமை,
இன்னொரு நாட்டில
வெள்ளிக்கிழமைன்னு இல்லை.
ஏன்,
எப்படி?
கிழமைக்கும்
அன்றைய நடப்புக்கும் சம்பந்தம்
இருக்கா?
சுப கிரகம் ன்னா
நல்லது நடக்கும்,
பாப கிரகம்ன்னா
கெட்டது நடக்கும்ன்னு இருக்கா?
சுக்கிரன்,
குரு,
வளர்பிறை சந்திரன்
மூணும் சுபம்.
புதன் ஒண்ணுமில்லை.
மத்தத்து எல்லாமே
அசுப கிரகங்கள்.யோசிக்க
சிலது தோணுது.
சுப கிரகம்ன்னு
சொன்னாலும் அசுர குருவோட
தாக்கத்தை குறைச்சுக்கவும்,
செவ்வாய் அண்ணிக்கு
அடிதடி தூண்டுதலை குறைச்சுக்கவும்
கோவிலுக்கு போய் தெய்வத்தை
வேண்டிக்கறோம்ன்னு இருக்கலாம்.
கோவிலுக்கு போக
நல்ல நாள் ன்னு சொல்லி இருக்கலாம்.
அது பின்னால்
அர்த்தம் மறந்த பல விஷயங்களைப்போல
சும்மா நல்ல நாள் ன்னு ஆகி
இருக்கலாம்.
வாட் ஸே?
விஷயம்
தெரிஞ்சவங்களை கேட்போம்!
No comments:
Post a Comment