Pages

Saturday, July 20, 2013

சிவாஷ்டோத்திர சதம் - 4


31 ஓம்ʼ பீ⁴மாய நம​: ॐ भीमाय नमः om bhīmāya namḥ பயங்கரமானவனுக்கு நமஸ்காரம்
32 ஓம்ʼ பரஶுஹஸ்தாய நம​: ॐ परशुहस्ताय नमः om parasuhastāya namaḥ கோடரியை கையில் தாங்கியவனுக்கு நமஸ்காரம்
33 ஓம்ʼ ம்ருʼக³பாணயே நம​: ॐ मृगपाणये नमः om mṛgapāṇaye namaḥ மானை கையில் ஏந்தியவனுக்கு நமஸ்காரம்
34 ஓம்ʼ ஜடாத⁴ராய நம​: ॐ जटाधराय नमः om jaṭādharāya namaḥ சடையை தாங்கியவனுக்கு நமஸ்காரம்
35 ஓம்ʼ கைலாஸவாஸினே நம​: ॐ कैलासवासिने नमः om kailāsavāsine namaḥ கைலாஸத்தில் உறைபவனுக்கு நமஸ்காரம்
36 ஓம்ʼ கவசினே நம​: ॐ कवचिने नमः om kavacine namaḥ மந்திர காப்பு அணிந்தவனுக்கு நமஸ்காரம்
37 ஓம்ʼ கடோ²ராய நம​: ॐ कठोराय नमः om kaṭhorāya namaḥ கடுமையாக இருப்பவனுக்கு நமஸ்காரம்
38 ஓம்ʼ த்ரிபுராந்தகாய நம​: ॐ त्रिपुरान्तकाय नमः om tripurāntakāya namaḥ திரிபுரங்களை அழித்தவனுக்கு நமஸ்காரம்
39 ஓம்ʼ வ்ருʼஷாங்காய நம​: ॐ वृषाङ्काय नमः om vṛṣāṅkāya namaḥ நந்தியை சின்னமாக கொண்டவனுக்கு நமஸ்காரம்
40 ஓம்ʼ வ்ருʼஷபா⁴ரூடா⁴ய நம:: ॐ वृषभारूढाय नमः om vṛṣabhārūḍhāya namḥ விடையேறியவனுக்கு நமஸ்காரம்


​31, 37 ​ பாபம் செய்வோருக்கு அவன் பயங்கரமானவனாகவும் கடுமையுடனும் இருக்கிறான்.
39 வ்ருஷங்க =


वृषाङ्कvRSAGka
bull-marked

40 விடை = காளைமாடு என்பது அனேகமாக எல்லாருக்கும் தெரியும்.


#36: kavacine namaḥ
திருநீறே கவசமோ?

கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை
மங்காமற் பூசி மகிழ்வரே யாமாகில்
தங்கா வினைகளும் சாரும் சிவகதி
சிங்கார மான திருவடி சேர்வரே.


ஞானவாள் ஏந்தும்ஐயர்
    நாதப் பறையறைமின்
மானமா ஏறும்ஐயர்
    மதிவெண் குடைகவிமின்
ஆனநீற் றுக்கவசம்
    அடையப் புகுமின்கள்
வானஊர் கொள்வோம்நாம்
    மாயப்படை வாராமே. 





ஆப்பி நீரோ டலகுகைக் கொண்டிலர்
பூப்பெய் கூடை புனைந்து சுமந்திலர்
காப்புக் கொள்ளி கபாலிதன் வேடத்தை
ஓப்பிக் காணலுற் றாரங் கிருவரே.

காப்பு - திருநீறு


#37: kaṭhorāya namaḥ
திண்மையான்


"...செறுத்திருந்த மும்மதில்கள் மூன்றும் வேவச்
    சிலைகுனியத் தீமுட்டுந் திண்மை யானாம் ...."

No comments: