41. ஓம்ʼ ப⁴ஸ்மோத்³தூ⁴லிதவிக்³ரஹாய நம: | ॐ भस्मोद्धूलितविग्रहाय नमः | oṁ bhasmoddhūlitavigrahāya namaḥ | உடல் முழுதும் சாம்பலை பூசிக்கொண்டவனுக்கு நமஸ்காரம் |
42. ஓம்ʼ ஸாமப்ரியாய நம: | ॐ सामप्रियाय नमः | oṁ sāmapriyāya namaḥ | ஸாம வேத ப்ரியனுக்கு நமஸ்காரம் |
43. ஓம்ʼ ஸ்வரமயாய நம: | ॐ स्वरमयाय नमः | oṁ svaramayāya namaḥ | ஸ்வரமயமாக இருப்பவனுக்கு நமஸ்காரம் |
44. ஓம்ʼ த்ரயீமூர்தயே நம: | ॐ त्रयीमूर्तये नमः | oṁ trayīmūrtaye namaḥ | ருக், யஜுஸ், ஸாமம் என்று மூன்று வேத வடிவாக இருப்பவனுக்கு நமஸ்காரம் |
45. ஓம் அநீஶ்வராய நம: | ॐ अनीश्वराय नमः | om anīśvarāya namaḥ | தனக்குத்தலைவன் இல்லாதவனுக்கு நமஸ்காரம் |
46. ஓம்ʼ ஸர்வஜ்ஞாய நம: | ॐ सर्वज्ञाय नमः | oṁ sarvajñāya namaḥ | எல்லாம் அறிந்தவனுக்கு நமஸ்காரம் |
47. ஓம்ʼ பரமாத்மநே நம: | ॐ परमात्मने नमः | oṁ paramātmane namaḥ | பரம ஆத்மாவாக இருப்பவனுக்கு நமஸ்காரம் |
48. ஓம்ʼ ஸோமஸூர்யாக்³நிலோசநாய நம: | ॐ सोमसूर्याग्निलोचनाय नमः | oṁ somasūryāgnilocanāya namaḥ | சூரியன், சந்திரன், அக்னி ஆகியவற்றை மூன்று கண்களாக உடையவனுக்கு நமஸ்காரம் |
49.ஓம்ʼ ஹவிஷே நம: | ॐ हविषे नमः | oṁ haviṣe namaḥ | ஹவிசு வடிவாக இருப்பவனுக்கு நமஸ்காரம் |
50. ஓம்ʼ யஜ்ஞமயாய நம: | ॐ यज्ञमयाय नमः | oṁ yajñamayāya namaḥ | வேள்விகளின் வடிவாக இருப்பவனுக்கு நமஸ்காரம் |
கபர்தின் = wearing braided and knotted hair
#41: bhasmoddhūlitavigrahāya namaḥ
முழுநீறு சண்ணித்த மூர்த்தீ
முடியார் சடையின் மதியாய் போற்றி
.. முழுநீறு சண்ணித்த மூர்த்தீ போற்றி
.. முழுநீறு சண்ணித்த மூர்த்தீ போற்றி
#42: sāmapriyāya namaḥ
சாமவேதம் உகப்பாய்
திங்கள் தங்கிய சடையுடை யானைத்
.. தேவ தேவனைச் செழுங்கடல் வளரும்
சங்க வெண்குழைக் காதுடை யானைச்
.. சாம வேதம் பெரிதுகப் பானை
.. தேவ தேவனைச் செழுங்கடல் வளரும்
சங்க வெண்குழைக் காதுடை யானைச்
.. சாம வேதம் பெரிதுகப் பானை
#43: svaramayāya namaḥ
स्वरः [स्वर्-अच्, स्वृ-अप् वा] 1 Sound, noise. -2 Voice; स्वरेण तस्याममृतस्रुतेव प्रजल्पितायामभिजातवाचि Ku.1.45. -3 A note of the musical scale or gamut, a tone, tune; (these are seven:-
ஓசை ஒலியெலாம் ஆனாய்
ஓசை யொலியெலா மானாய் நீயே
.. உலகுக் கொருவனாய் நின்றாய் நீயே
.. உலகுக் கொருவனாய் நின்றாய் நீயே
குறிப்புரையில்: ".... 'ஒசை,
ஒலி' என்பன, 'சத்தம், நாதம்' என்னும் பொருளுடையன. 'வெற்றோசையும்
பொருளோசையும்' என ஒசை இருவகைப்படும். அவற்றுள், வெற்றோசையை 'ஒசை' என்றும்,
பொருளோசையை 'ஒலி' என்றும் அருளிச்செய்தார். ...."
#45:anīśvarāya namaḥ
நாமார்க்குங் குடியல்லோம் ....
தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான சங்கரன் ....
தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான சங்கரன் ....
குறிப்புரையில்: .... 'தாம்' என்றது, ஒருமை பன்மை மயக்கம் ....
#46: sarvajñāya namaḥ
திருவாசகம்-போற்றித் திருவகவல்
வேதி போற்றி விமலா போற்றி
ஆதி போற்றி அறிவே போற்றி
கதியே போற்றி கனியே போற்றி
நதிசேர் செஞ்சடை நம்பா போற்றி
உடையாய் போற்றி உணர்வே போற்றி 110
வேதி போற்றி விமலா போற்றி
ஆதி போற்றி அறிவே போற்றி
கதியே போற்றி கனியே போற்றி
நதிசேர் செஞ்சடை நம்பா போற்றி
உடையாய் போற்றி உணர்வே போற்றி 110
வேதி - வேதத்தை உடையவன். விமலன் - மாசில்லாதவன். ஆதி - எப்பொருட்கும் முதலானவன். அறிவு - அறிவே வடிவாயுள்ளவன்.
#48: somasūryāgnilocanāya namaḥ
கண்கள் சுடர்மூன்று ஆனாய்
11.23.88
அடையுந் திசைஈசன் திண்டோளா காசம்
அடையுந் திருமேனி அண்டம் அடையும்
திருமுடிகால் பாதாளம் ஆடைகடல் அங்கி
திருமுடிநீர் கண்கள்சுடர் மூன்று.
அடையுந் திருமேனி அண்டம் அடையும்
திருமுடிகால் பாதாளம் ஆடைகடல் அங்கி
திருமுடிநீர் கண்கள்சுடர் மூன்று.
#49: haviṣe namaḥ
4.32.7
ஆவியா யவியு மாகி யருக்கமாய்ப் பெருக்க மாகிப்
பாவியர் பாவந் தீர்க்கும் பரமனாய்ப் பிரம னாகிக்
காவியங் கண்ண ளாகிக் கடல்வண்ண மாகி நின்ற
தேவியைப் பாகம் வைத்தார் திருப்பயற் றூர னாரே.
பாவியர் பாவந் தீர்க்கும் பரமனாய்ப் பிரம னாகிக்
காவியங் கண்ண ளாகிக் கடல்வண்ண மாகி நின்ற
தேவியைப் பாகம் வைத்தார் திருப்பயற் றூர னாரே.
திருப்பயற்றூரனார்
வேள்வித் தீயின் புகையாய், வேள்வியில் தேவருக்கு வழங்கப்படும் அவி உணவாய்,
நுண் பொருளாய், மிகப்பெரும் பொருளாய்,.........
#50: yajñamayāya namaḥ
வேள்வி ஆனாய்
வேதமும் வேள்வியும் ஆயி னார்க்கு
மெய்ம்மையும் பொய்ம்மையும் ஆயி னார்க்குச்
சோதியு மாய்இருள் ஆயி னார்க்குத்
துன்பமு மாய்இன்பம் ஆயி னார்க்குப்
பாதியு மாய்முற்றும் ஆயி னார்க்குப்
பந்தமு மாய்வீடும் ஆயி னாருக்
காதியும் அந்தமும் ஆயி னாருக்
காடப்பொற் சுண்ணம் இடித்தும் நாமே.
மெய்ம்மையும் பொய்ம்மையும் ஆயி னார்க்குச்
சோதியு மாய்இருள் ஆயி னார்க்குத்
துன்பமு மாய்இன்பம் ஆயி னார்க்குப்
பாதியு மாய்முற்றும் ஆயி னார்க்குப்
பந்தமு மாய்வீடும் ஆயி னாருக்
காதியும் அந்தமும் ஆயி னாருக்
காடப்பொற் சுண்ணம் இடித்தும் நாமே.
குறிப்புரையில்: "பின்
வருவனபோல மறுதலைப் பொருள்பட, 'வேதம்' என்றதற்கு, 'வேதமுடிபினால்
உணர்த்தப்படுவதாகிய ஞானம்' எனப்பொருள் கூறுக. 'வேள்வி' என்றது, கன்ம
காண்டத்துள் சொல்லப்பட்ட வேள்விகளையாம். ....."
No comments:
Post a Comment