Pages

Friday, July 19, 2013

சிவாஷ்டோத்திர சதம் - 3

 

21 ஓம்ʼ ஶிதிகண்டா²ய நம​: ॐ शितिकण्ठाय नमः om śitikaṇṭhāya namaḥ வெண்நிற கழுத்துடையவனுக்கு நமஸ்காரம்.
22 ஓம்ʼ ஶிவாப்ரியாய நம​: ॐ शिवाप्रियाय नमः om śivāpriyāya namaḥ சிவாவுக்கு ப்ரியமானவனுக்கு நமஸ்காரம்.
23 ஓம்ʼ உக்³ராய நம​: ॐ उग्राय नमः om ugrāya namaḥ (விரோதிகளிடம்) கடுமையாக இருப்பவனுக்கு நமஸ்காரம்.
24 ஓம்ʼ கபாலினே நம​: ॐ कपालिने नमः om kapāline namaḥ மண்டை ஓட்டை பிச்சை பாத்திரமாக ஏந்தியவனுக்கு நமஸ்காரம்.
25 ஓம்ʼ காமாரயே நம​: ॐ कामारये नमः om kāmāraye namaḥ காமத்தை வென்றவனுக்கு நமஸ்காரம்.
26 ஓம்ʼ அந்த⁴காஸுரஸூத³னாய நம​: ॐ अन्धकासुरसूदनाय नमः om andhakāsura sūdanāya namaḥ அந்தகன் எனும் அசுரனை கொன்றவனுக்கு நமஸ்காரம்.
27 ஓம்ʼ ³ங்கா³த⁴ராய நம​: ॐ गङ्गाधराय नमः om gaṅgādharāya namaḥ கங்கையை தாங்கியவனுக்கு நமஸ்காரம்
28 ஓம்ʼ லலாடாக்ஷாய நம​: ॐ ललाटाक्षाय नमः om lalāṭākṣāaya namaḥ நெற்றிக்கண்ணனுக்கு நமஸ்காரம்
29 ஓம்ʼ காலகாலாய நம​: ॐ कालकालाय नमः om kālakālāya namaḥ காலனுக்கு காலனாக இருப்பவனுக்கு நமஸ்காரம்
30 ஓம்ʼ க்ருʼபாநித⁴யே நம​: ॐ कृपानिधये नमः om kṛpānidhaye namaḥ க்ருபையை செல்வமாக உடையவனுக்கு நமஸ்காரம்


#23: ஓம்ʼ உக்³ராய நம
வெய்யவனே போற்றி / வெய்யாய் போற்றி

வெய்யவன்காண் வெய்யகன லேந்தி னான்காண்
.... கொடியவர்க்குக் கொடியவனும், வெப்பமிகு கனலை ஏந்தியவனும் ....

#25:ஓம்ʼ காமாரயே நம​:
காமகோபனே போற்றி / காமனைக் காய்ந்தவனே போற்றி


கற்ப கத்தினைக் கனகமால் வரையைக்
   
காம கோபனைக் கண்ணுத லானைச்

#30:ஓம்ʼ க்ருʼபாநித⁴யே நம​:
அருள்நிதியே போற்றி


அருணன்இந் திரன்திசை அணுகினன் ....அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே
   
அலைகட லேபள்ளி எழுந்தரு ளாயே.  

No comments: