சில
விஷயங்கள் திருப்பித்திருப்பி
அசை போட்டாலும் அது உள்ளே
போறது கொஞ்சம் கஷ்டம்தான்.
ஹிந்து
பிலாசபில ஒரு தர்சனம் -
பார்வையா
இல்லை. அதுவே
அதோட சிறப்பும் கூட.
அவரவர்
புரிதல் மட்டத்துக்கு தகுந்தபடி
சில விஷயங்கள் புலப்படும்.
அது புரிஞ்ச
பிறகு அடுத்த லெவல்லேந்து
யோசிக்கணும். இந்த
விசாரம் ஒரு தொடர் கதை.
ஒரு ஜன்மத்தில
முடியற விஷயமும் இல்லை.
ஒவ்வொருவரோட
ஆன்மிக முன்னேற்றமும் அடுத்த
ஜென்மத்துக்கு எடுத்துப்போகப்படும்.
அதனால பிரச்சினை
இல்லை.
கடவுள்
இருக்கார்னும் அவரை கெஞ்சி
கேட்டா கேட்டதை கொடுப்பார்னும்
நம்பறது அடிப்படை லெவல்.
இது பாமர
லெவல்ன்னும் சொல்லலாமோ என்னவோ.
பல சமயம்
பாமரர்கள் பேசறது பெரிய ஞானி
பேசறா மாதிரிக்கூட இருக்கும்!
அது டிஎன்ஏ
ல இருக்கு!
இது
பய பக்தி. இதுவேத்தான்
தப்பு பண்ணா சாமி கண்ணை குத்தும்
ரீதில நினைக்க வைக்கிறது.
அது அந்த
அளவுக்கு நல்லதே. ஆனா
சிந்திக்கிற திறன் இருக்கறவங்க
இதை தாண்டனும். பல
நாத்திகர்களும் திட்டற இந்த
வணிக உறவை தாண்டி அப்பப்ப
ஏதேனும் வேணும்ன்னு கேட்டாலும்
அது இல்லாதப்பவும் பக்தி
பண்ணிக்கொண்டு இருக்கணும்.
இன்னும்
மேலே போக நீ எது கொடுத்தாலும்
கொடுக்காவிட்டாலும் சரி.
கொடுத்தா
அது உன் ப்ரசாதமா எடுத்துக்கறேன்னு
மனசு பக்குவம் ஆயிட்டா -
ஆஹா அதுவே
பக்தி மார்கத்தில வேண்டுவது!
இதெல்லாம்
சரியா புரிஞ்சவங்க ஆன்மிகம்
வியாபாரம் ன்னு சொல்லிக்கிட்டு
இருக்க மாட்டாங்க. (அதையே
வியாபாரம் ஆக்கலாம் என்கிறது
வேற விஷயம்!) கடவுள்கிட்ட
இதை கொடு அதை தரேன்னு பேரம்
பேசறவங்க அடி மட்ட லெவல்ல
இருக்காங்க அவ்ளோதான்.
கர்ம
மார்கத்தில இன்னும் அதிக
பிரச்சினை.
No comments:
Post a Comment