தத்துவ
ஞானி பாரபட்சமில்லாத உண்மை
பற்றி நீண்ட ப்ரசங்கம் செய்தார்.
மாஸ்டர்
சொன்னார்: நீங்க சொல்கிறது உண்மையில் சத்தியம்
இல்லை. அது
நீங்க ப்ரபஞ்சத்தை பார்க்கிற
பார்வை. நீங்க
உணருவது இந்த ப்ரபஞ்சத்தை
இல்லை; உங்களோட
மனநிலையைத்தான்.
அப்ப
யாராலும் சத்தியத்தை உணர
முடியாதா?
முடியுமே!
எண்ணங்களை
கடந்தவங்களால முடியும்!
அட!
என்ன மாதிரி
மனுஷங்க இவங்க?
தான்/
நான் என்கிற
அஹங்காரத்தை இழந்தவங்க.
அதுதான் ஒரு
ப்ரொஜக்டர் போல வேற படத்தை
காட்டிகிட்டு இருக்கு.
அது இல்லைன்னா
ப்ரபஞ்சத்தை உள்ளது உள்ளப்டி
பார்க்கலாம்!
No comments:
Post a Comment