Pages

Monday, May 15, 2017

ஆன்மீக விசாரம் - 6





சரி, வாசன ஒழியறது எல்லாம் நாளாகும்; அது நடக்கறப்ப நடக்கட்டும். அது வரைக்கும் லௌகீகமா வேண்டியது கிடைக்க என்ன செய்ய? ன்னு கேட்டா......
கேட்டு வாங்கிக்கோ!
எதை செஞ்சா எது கிடைக்கும்னு ஒண்ணு இருக்கில்லையா? உப்பு தின்னா தண்ணி குடிக்கணும். ஒரு செயலுக்கு ஒரு ரிசல்ட் இருக்கவே இருக்கும். அது எப்பவுமே அப்படி இருக்காது என்கிறதே பிரச்சினை.
உதாரணமா தலை வலிக்கறது; சரின்னு ஒரு மாத்திரை எடுத்து போட்டுக்கறோம். போன வாரம் இப்படி போட்டுண்டப்பக்கூட நல்ல நிவாரணம் இருந்தது. ஆனா இப்ப இல்லை. ஏன்? தெரியாது!
லோகத்தில நடக்கற ஆயிரக்கணக்கான விஷயங்களில சிலது அப்படியே எப்பவுமே நடக்கும். உப்பை எப்போ எங்கே தண்ணில போட்டாலும் கரையும். சிலது பெரும்பாலும் நடக்கும். வெடி பட்டாசை கொளுத்தினா பெரும்பாலும் வெடிக்கும். ஒண்ணு ரெண்டு புஸ் ஆகும்! இப்படி ஒரு முழு ஸ்பெக்ட்ரம் இருக்கும்.
ஆனா நமக்கு வேண்டியது நடக்கணுமே!
இயற்கை சக்திகள் மேலே தேவதைகளுக்கு கண்ட்ரோல் இருக்கு. நமக்கு வேண்டியது மழை வெயில் என்கிறது போல இயற்கை சமாசாரம்ன்னா தகுந்த படி குறிப்பிட்ட தேவதையை வேண்டிப்பெறலாம். அதுக்கு ஜபமோ ஹோமமோ தானமோ பயன்படலாம். இதோட ரிசல்ட் இப்படி அப்படித்தான் இருக்கும். ஏன்?
முன்னே பாத்தது போல கயிறு கட்டி இருக்கே! மாட்டு எவ்வளோ மேயும் என்கிறது கட்டுப்படுத்தி இருக்கு. 'நடவாதது என்ன முயற்சிக்கினும் நடவாது' ன்னு ரமணர் சொன்னது போல.
சரி அது நடக்க வாய்ப்பு இருக்குன்னு வெச்சுப்போம். அப்ப?
அப்ப வாய்ப்பு இருக்கு சரி. ஆனா இந்த காலத்தில அதுக்கு தடங்கல்கள் அதிகம்.
ஜபம் செய்ய உக்காந்தா மனசு அதுல லயிக்கறது கஷ்டமா இருக்கு.
ஹோமம் செய்யலாம்ன்னா அதுக்கு கூட இன்னும் சிலர் வேண்டி இருக்கு. அவங்க எப்படி நடந்துக்கறாங்க என்பதை பொருத்து ரிசல்ட் மாறிப்போகிறது. இந்த காலத்தில் மனம் ஒன்றி கருத்தா ஹோமம் செய்யறவங்களை தேடினாக்கூட கிடைக்கறது சிரமமே! கனபாடிகள் கூட காலப்போக்கில மந்திரங்களை சரியா உச்சரிக்கறதுல கவனம் செலுத்தறதில்லை. செய்கை அலட்சியம்; உணவு கட்டுப்பாடு போறாமை; பிரம்மச்சரியத்தை கடைபிடிக்காமை; ஹோம திரவியங்களில குறைகள் … ஆயிரத்தெட்டு காரணங்கள் இருக்க இயலும். அதனாலும் பல சமயங்களில் ரிசல்ட் கிடைக்காம போகிறது.
அப்ப இதை எல்லாம் செய்ய வேணாமா?
செய்யுங்க செய்யுங்க.
ஒண்ணு வேண்டிய ரிசல்ட் கிடைக்கும். இல்லைன்னா இதெல்லாம் சரிப்படாது; பகவானே நீ பாத்துக்கோன்னு சரணாகதி அடையத்தோணும். ரெண்டுமே நல்லது!

No comments: