போன
ஜன்மத்திலே நாம் பாபமே
பண்ணலைன்னா இப்ப பிறந்தே
இருக்க மாட்டோம். இதை
எல்லாம் படித்துக்கொண்டு
இருக்கவும் மாட்டோம்.
இதை படித்துக்கொண்டு
இருக்கோம் என்கிறதே நாம ஏதோ
பாபங்கள் செய்து இருக்கோம்
என்பதை காட்டுது. அதை
ஒண்ணு அனுபவிச்சு தீர்க்கணும்.
அல்லது
ப்ராயச்சித்தம் செய்து
தீர்க்கணும். பலமானது
எல்லாம் அனுபவிச்சே ஆகணும்.
அவ்வளவு
பலமில்லாததை அனுபவிக்க
ஆரம்பிக்கும் போது அடடா,
ஏதாவது
ப்ராயச்சித்தம் செய்யலாமான்னு
தோணலாம். அப்ப
ப்ராயச்சித்தம் செய்தா
தீர்ந்து போகும். அப்ப
நம்ம கையில் ஒரு சாய்ஸ்
இருக்கும், அனுபவிக்கறதா
அல்லது ப்ராயச்சித்தம்
செய்யறதான்னு.
ஆனா
நமக்கு வர பிரச்சினை இதுல
எதுல சேர்த்தின்னு கண்டு
பிடிக்கறது? கஷ்டம்தான்.
காஞ்சி
மஹா பெரியவரை பார்க்க ஒத்தர்
வந்தார். அவர்
அடிக்கடி மடத்துக்கு வந்து
போகிறவர்தான். அவருக்கு
நாட்பட்ட தோல் வியாதி ஒண்ணு
இருந்தது. பெரியவர்
தரிசனம் ஆகிறப்ப திடீர் என்று
பெரிவா அவரிடம், “மடத்துக்கு
நீ எவ்வளோ நாளா சேவை செய்யற!
உனக்கு
இருக்கிற பிரச்சினை தெரியும்.
இதுக்கு ஒரு
அசாதாரண ஹோமம் செய்தால்
சரியாயிடும். அது
தெரிஞ்சவா அதிகம் கிடையாது.
சரியான நாளும்
அமையணும். இன்னைக்கு
அப்படிப்பட்ட நாள். உன்
நல்ல காலம் அதை செய்யக்கூடியவர்
இன்னைக்கு இப்ப மடத்தில
இருக்கார். நீ
சரின்னு சொல்லு; இப்பவே
செய்ய ஏற்பாடு செய்யறேன்"
என்றார்.
அவரோ
தயங்கிக்கொண்டு "வீட்டில்
கேட்டு வந்து அப்புறம்
சொல்கிறேன்!” என்றார்.
பெரியவா
மீண்டும் வற்புறுத்தி சொன்னார்.
அப்போதும்
அதே பதில்தான் வந்தது.
அவர்
போன பிறகு பக்கத்தில் இருந்த
சிஷ்யர்கள் ஆச்சர்யத்துடன்
"பெரிவா,
இப்படி
கேட்காம எதையும் சொல்ல
மாட்டீர்களே!” என்றார்கள்.
“ஆமாம்.
விதியைப்பத்தி,
ப்ராயச்சித்தம்
பத்தி இங்கே விவாதம் நடந்தது
இல்லையா? இப்ப
பாருங்கோ" என்றார்.
"இந்த
ப்ராயச்சித்தம் செஞ்சா
இவருக்கு வ்யாதி குணமாயிடுமா?”
“பின்னே?
ஆகாட்டா
சொல்லுவேனா?”
“இவர்
செஞ்சுப்பாரா?”
“ஆ!
இது நல்ல
கேள்வி. செஞ்சுக்க
மாட்டார்! அவரோட
விதி அவரை விடாது!”
அதே
போல அவர் திரும்பி வந்து
மறுப்பு சொல்லி விட்டு
போய்விட்டார். பெரிவா
சொல்லை தட்டாதவர் இப்போது
அவர் வலியுறுத்தியும்
கேட்கவில்லை!
இதே
போல ஒரு இஞ்சினீயருக்கு
பெரியவா ஒரு வேலை செய்யச்சொன்னார்.
குறிப்பிட்ட
கோவிலுக்கு போய் வரச்சொன்னார்.
அவ்வளவுதான்.
எதுக்கு
என்றார் அவர்.
அங்கே
உனக்கு நடக்க வேண்டியது ஒண்ணு
பாக்கி இருக்கு என்றார்
பெரியவா.
எனக்கு
ஒண்ணுமே வேண்டாம். உங்க
ஆசீர்வாதம் இருக்கு;
போறும்.
எனக்காகன்னு
ஒண்ணும் செஞ்சுக்க மாட்டேன்
என்று உறுதியாக சொல்லிவிட்டார்.
சில
வாரங்கள் கழித்து அலுவல்
நிமித்தம் ஜீப்பில் மஹாராஷ்ட்ரா
எல்லையருகே வேற்றூர் போக
நேர்ந்தது. வேலை
சீக்கிரம் முடிந்துவிட்டது,
கூட வந்தவர்கள்
வழியில் வேறு எங்காவது போகலாமா
என்று விவாதித்துக்கொண்டு
இருந்தனர். இவர்
திடீரென்று வண்டியை இந்தப்பக்கம்
விடு என்று வழி சொன்னார்.
இவரது பேச்சே
மாறிவிட்டது. சரளமாக
முன்னே பின்னே அறிமுகம் கூட
இல்லாத மராத்தியில் ட்ரைவருக்கு
முன் பின் தெரியாத இடத்தில்
வழி சொல்லிக்கொண்டே போனார்.
ஒரு சிற்றூர்
வந்தது. ஒரு
கோவில் வந்தது. இவர்
இறங்கிப்போனார். விழுந்து
நமஸ்கரித்தார். காதில்
ஏதோ மந்திரம் ஓதப்பட்டது.
திரும்பிவிட்டார்.
அவ்வளவுதான்.
ஆபீஸுக்கு
திரும்பலாம் என்றார்.
பழையபடி
ஆகிவிட்டார். நடந்தது
ஒன்றுமே தெரியவில்லை.
எதுக்கு
சொல்ல வந்தேன்னா நடக்கணும்ன்னு
இருந்தா அது நிச்சயம் நடந்துடும்.
நடக்க முடியாதது
என்ன முயற்சி பண்ணாலும்
நடக்காது. இதைத்தானே
ரமணர் சொன்னார்?
No comments:
Post a Comment