Pages

Thursday, December 12, 2019

காஞ்சி_காமகோடி_ஆச்சார்ய_பீட_குரு_பரம்பரை - 48





45 ஆவது ஆச்சார்யரின் விவரங்கள்:

ஆஶ்ரம பெயர்: ஶ்ரீ பரமஶிவேந்திர ஸரஸ்வதி (1)
பூர்வாஶ்ரம பெயர்: ஶ்ரீகாந்தா
பூர்வாஶ்ரம தந்தையின் பெயர்: ஶிவஶாம்ப பண்டிதர்
பீடாதிபதியாக ஆண்டுகள்: 21
சித்தி: 4161 சர்வாரி ஆஷ்வயுஜ்ய சுக்ல ஸப்தமி (பொ.ச 1060-அக்டோபர் 10) இரவு
பிற:
நன்கு அறியப்பட்ட கதா சரித்ர சாகரா என்னும் கதைகளின் தொகுப்பாளர் சோமாக்க தேவ பட்டர் இந்த ஆச்சார்யரின் சீடராவார். ஆச்சார்யர் பெரும்பாலும் நேரத்தை தபஸ் மற்றும் சமாதிகளில் ஶ்ரீசைலம் அருகே உள்ள குகைகளில் செலவிடுவார். சோமகா அவருக்கு தொடர்ந்து பணியாற்றுவார்.
இருப்பினும், மற்றவர்கள் ஆச்சார்யரின் தபசுக்கு தடையை ஏற்படுத்துவர். எனவே, ஆச்சார்யர் தனியாக தனியாக இருக்க விரும்பினார். சோமகாவிற்கு சன்னியாசம் அளித்தார். அவரை தனக்குப்பின் பீடாதிபதியாக நியமித்தார். தர்மத்தின் பாதுகாப்பிற்காக அவ்விடத்தை விட்டு வெளியேறுவதற்கும் நாடு முழுவதும் பயணம் செய்வதற்கும் அவர் உத்தரவு கொடுத்தார்.
அதற்குப் பிறகு, யாரோ ஒருவர் (அதாவது ஈஶ்வரஸங்கல்பத்தில்) எந்த உணவையோ அல்லது வேறு எந்தவொரு சேவையையோ ஆச்சார்யருக்கு கொண்டுவந்து அளித்தால் ஏற்றுக்கொள்வார். இல்லையானால் சும்மாயிருப்பார். இது மலைப்பாம்பின் நிலை. எப்படி அது தன்னிடத்தில் வரும் இரையை கொண்டு ஏதும் வராவிட்டால் சும்மா இருக்குமோ அது போல.

No comments: