Pages

Friday, December 20, 2019

காஞ்சி_காமகோடி_ஆச்சார்ய_பீட_குரு_பரம்பரை - 55





52 ஆவது ஆச்சார்யரின் விவரங்கள்:
ஆஶ்ரம பெயர்: ஶ்ரீஶங்கரானந்தேந்திர ஸரஸ்வதி (1)
பிறப்பு: மத்தியார்ஜுனம்
பூர்வாஶ்ரமபெயர்: மகேசன்
பூர்வாஶ்ரம தந்தையின் பெயர்: பாலசந்திரா
பீடாதிபதியாக ஆண்டுகள் : 32
சித்தி: 4517 துர்முகி சைத்ர சுக்ல ப்ரதமா (பொ.ச. 1416-மார்ச் -9) அதிகாலை வேளையில்
மற்றவை:
அவரது குரு ஶ்ரீ வித்யதீர்த்தேந்தர ஸரஸ்வதியுடன், இந்த ஆச்சார்யர் அவரது கருவியாக செயல்பட்டார். கர்நாடகப் பிராந்தியங்கள் அத்வைதம் மற்றும் சனாதன தர்மம் ஆகியவை வீர சைவம் மற்றும் சமீபத்தில் உருவாக்கி இருந்த த்வைத சிந்தனை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருந்தன. கர்நாடகத்திற்கு அந்த பணிக்கு நியமிக்கப்பட்ட எட்டு சன்னியாசிகளை வழிநடத்தி வந்த புகழ்பெற்ற ஶ்ரீ வித்யாரண்யருக்கு இவர் சன்னியாசம் கொடுத்தார்.

அதன் பிறகு இவர் தன் குருவுடன் இமயமலைக்கு குருசேவை செய்ய சென்றார். அவரது குரு அங்கே 15 வருடங்கள் தவம் செய்தார். குரு சித்தி அடைந்தபின் பிறகு காஞ்சிக்கு திரும்பி காமகோடி பீடத்தின் ஆச்சார்யராக அவரது கடமைகளை மீண்டும் தொடங்கினார்.
இந்த ஆச்சார்யரின் காலத்தில், வைஷ்ணவ ஆகமகங்களின் சில தீவிர சீடர்கள், விஷ்ணு பிரசாதத்தை பொது மக்களுக்கு விநியோகிக்கும் பிரமேயத்தில் சிவனுக்கு எதிராக வெறுப்பை தூண்டி வந்தனர். சிவபெருமானும் விஷ்ணுவும் ஒருவரே என்பதை உணர்த்த, விஷ்ணு காஞ்சியின் வரதராஜரிடம் இந்த ஆச்சார்யர் பிரார்த்தனை செய்தார். அவர் உடனடியாக தனது மூர்த்தியை சிவபெருமானாக மாற்றிக்கொண்டார். பின்னர், ஆச்சார்யர் வரதராஜரிடம் பிரார்த்தனை செய்ய அவரும் தன் பழைய வடிவத்தை எடுத்துக் கொண்டார்.

No comments: