Pages

Saturday, December 14, 2019

காஞ்சி_காமகோடி_ஆச்சார்ய_பீட_குரு_பரம்பரை - 50




47 ஆவது ஆச்சார்யரின் விவரங்கள்:
ஆஶ்ரம பெயர்: ஶ்ரீ சந்த்ரசேகரேந்த்ர ஸரஸ்வதி (3)
பிறந்த இடம்: குந்தி நதி (அநேகமாக நர்மதாவின் துணை நதி)
பூர்வாஶ்ரம பெயர்: ஶ்ரீகாந்தா
பூர்வாஶ்ரம குடும்பம்: தென்னிந்திய தோற்றம் (பிறந்த இடம் வேறாக இருந்த போதிலும், மேலே பார்க்க)
பூர்வாஶ்ரம தந்தையார் பெயர்: ஶுகதேவ சர்மா
பீடாதிபதியாக வருடங்கள்: 68
சித்தி: 4266 பார்த்திவ சைத்ர அமாவாசை (பொ.ச. 1165-ஏப் -19)
மற்றவை:
இந்த ஆச்சார்யரை ஜெயதேவா, மங்கா, கிருஷ்ண மிஶ்ரா, சுஹாலா போன்ற பெரிய அறிஞர்கள் தம் குருவாக ஏற்றுக்கொண்டனர். ஶங்கர பாஷ்யத்தை அவரிடம் பயின்றனர். அவரது காலத்தில் காஷ்மீர அரசர் குமரபாலா ஆவார். இவர் கல்வியறிவு குறித்தும் அறிஞர்கள் குறித்தும் பெரும் ஆர்வமுள்ளவராக இருந்தார். ஹேமாச்சார்யா என்ற ஜைன அறிஞர் / துறவியை ஆதரித்து அரசவையில் இருக்கச்செய்தார். ஆனால் அவரது செல்வாக்கு காரணமாக, சனாதன தர்மத்தில் அரசர் நம்பிக்கை இழந்தார். அத்தகைய ஒரு நேரத்தில், அவரது விஜய யாத்திரையில் காஷ்மீருக்குச் சென்ற ஆச்சார்யர் ஹேமாச்சார்யாவை தனது புலமையால் வென்றதுடன், அரசரை பாரம்பரிய பாதையில் மீட்டெடுத்தார்.

No comments: