சாதாரணமா நம்ம மனசு எப்படி இருக்கு?
செய்யற வேலை நல்லா முடிஞ்சுட்டா அதுக்கு நாம் உரிமை கொண்டாடுறோம்.
அது தப்பா போச்சுனா யார் மேல பழி போடலாம்ன்னு பாக்கிறோம்.
வேளுக்குடியார் சுவாரசியமா உதாரணம் சொன்னார். உபன்யாஸத்துக்கு கிளம்பினாராம். ஏழு மணிக்கு நிகழ்ச்சி. போகும்போது ஒரே ட்ராபிக் ஜாம். நேரமாயிடுத்து. சபா காரியதரிசி ஏன் லேட்டுன்னு கேட்டாராம். அதுக்கு இவர் பல காரணங்களோட தயாரா இருந்தார். அழச்சுகிட்டு போக வேண்டியவர் நேரத்துக்கு வரலை; வர வழில ஒரே ட்ராபிக் ஜாம். இப்படி எல்லாம் சொல்லி அதனால தாமதமாயிடுத்து என்றார். அடுத்த நாள் சபாவுக்கு சரியான நேரத்துக்கு போனாராம். காரியதரிசி அட இன்னிக்கு நேரத்துக்கு வந்துட்டீரே ன்னார். அதுக்கு "நான் எப்பவும் சரியான நேரத்துக்கு வந்துடுவேனே" என்றார். என்ன சொல்லி இருக்கணும்? அழைத்து போகிறவர் சரியான நேரத்துக்கு வந்தார். வழில டிராபிக் ஜாம் இல்லை. கார் மக்கர் செய்யாம சரியா ஓடித்து... ஆனா இப்படி எதுவுமே சொல்லையே!
ஆக பலனுக்கு நாம் எப்போதுமே முழு காரணமில்லை.
--
இதை ஏற்கெனவே பாத்தாச்சு. இருந்தாலும் கொஞ்சம் திருப்பி பாக்க...
பலனை எதிர்பாக்காதேன்னா அனேகமா யாருமே அப்படி செய்ய மாட்டாங்க. யாரா இருந்தாலும் எதோ ஒரு பலன் - விளைவு நடக்கும்ன்னுதானே வேலை செய்யறோம். அத எதிர் பாக்காதேன்னு சொன்னா யார் வேலை செய்வாங்க?
ஒரு வேலையை செய்யலாம், செய்யாம விடலாம் அல்லது வேற மாதிரி செய்யலாம். அதுக்கு உனக்கு அதிகாரம் இருக்கு! ஒரு போதும் பலன்ல அதிகாரமில்ல.
பலன் இப்படிதான் இருக்கணும்னு சொல்கிறத்துக்கு நமக்கு அதிகாரம் இல்ல. ஏன்னா பலன் நம்ம மட்டுமே பொருத்தது இல்ல. நேரம், இடம், நாம் செய்யற வேலைல பங்கு இருக்கிற மத்தவங்க எப்படி என்ன செய்யறாங்க இதெல்லாம் வருது இல்லையா?
நாம நல்லா படிச்சு பரீட்சை எழுதலாம். அதை திருத்தறவருக்கு அது சரியா போய் சேரனும். அவர் அப்ப நல்ல மூட்ல இருக்கனும். ஏதாவது பக்கத்தை பாக்காம விட்டுடக்கூடாது. மார்க் கூட்டி போடறது சரியா இருக்கனும். அத சரியா கணினில பதியனும். நம்ம மார்க் வந்து சேரத்துக்குள்ளே இப்படி எவ்ளோ விஷயம் இருக்கு?
எதுவுமே இப்படித்தான் இருக்கணும்ன்னு நினைக்கிறப்போதான் நமக்கு பிரச்சினை வருது. நடக்குமோ நடக்காதோன்னு தூக்கம் கெட்டு போகுது. நடக்கலேனா என்ன செய்யறதுன்னு ரொம்ப யோசனை செய்ய ஆரம்பிக்கிறோம். நினைச்சபடி நடக்கலைனா அதுக்கு தடையா இருந்தது எதுவோ, அது மேல கோபம் வருது. அதப்பத்தி ஒண்ணும் செய்ய முடியலைனா விரக்தி வருது.
நம்மால முடிஞ்ச வரை செஞ்சோம். அப்புறம் அவன் விட்ட வழின்னு யார் நினைக்கிறாங்களோ அவங்க அவ்வளவு கஷ்டப்பட மாட்டாங்க. மனசு அமைதியா இருப்பதாலே அவரால வேலையை நல்லாவே செய்ய முடியும்.
--
மூணாவது வரி
"செயல்பாட்டின் பயனுக்கு நீ காரணமா ஆகாதே.”
இது எப்படி சாத்தியம்? முதல்ல செயலை பண்ணு. அதுக்கு அதிகாரம் இருக்கு. பலன் இப்படிதான் வேணும்ன்னு சொல்லாதே. பலன்ல அதிகாரம் உனக்கு இல்லைன்னாரே! இப்ப செயல்பாட்டோட பலனுக்கு காரணமாகாதேன்னா?? அப்ப பலனுக்கு நம்மதான் காரணம்ன்னு ஆயிடுமே? முரணில்லையா?
இல்லை. பலனுக்கும் ஓரளவு நாம்தானே காரணம். மேலே சொன்ன 5 காரணங்கள்ல ஜீவாத்மாவும் ஒண்ணுதானே?
உதாரணத்தால விளக்கலாம்.
அக்னி காரியம் பண்ணுகிறோம். பலனை கருதாம பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் ன்னு சொல்லி செய்கிறோம். அப்படி செய்கிறபோது தானாக சில பலன்கள் விளையும். அக்னி காரியத்தின் பல பலன்களில் பணம் கிடைக்கிறது ஒண்ணு. இது நமக்கு வேணுமா இல்லையா ன்னு பாத்து, தேவை இல்லைனா வேற பலனை கூட ஈச்வரன் கொடுக்கலாம். அது ஒரு வேளை நமக்கு தெரியாமலே இருக்கலாம்; தேவைன்னு தோணாமலே இருக்கலாம். “எல்லாம் உனக்கு தெரியும்பா, நீயே கொடுக்கிரதை கொடு; இல்லை கொடுக்காட்டா கூட பரவாயில்லைன்னு நினச்சு யார் பலனை யோசிக்காம கர்மா செய்கிறானோ அவனுக்கு தேவையானதை ஈச்வரன் கொடுத்து எல்லாமே நல்லபடியா இருக்கும்.
ஆனா ஒரு வேளை ஒரு வேளை நாம் பணம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்போட -சங்கல்பம் செய்தோ, செய்யாமலோ, எதிர்பார்ப்போடயோ செய்தா? பணம் கிடைச்சுடும். செய்கிற கர்மா சரியா செஞ்சா பலன் கிடைச்சே ஆகணுமே! ஆனா அதால நல்ல விளைவுகள் ஏற்படும்ன்னு சொல்ல முடியாது.
"தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும்" இல்லையா?
இததான் பலனுக்கு காரணமாக ஆகிடாதேன்னு சொன்னது. இன்ன பலன் வேணும்ன்னு உத்தேசிக்கிறதாலேயே நாம் பலனை நிர்ணயம் செஞ்சிடறோம். அப்படி செய்யாதேன்னுதான் இங்கே சொன்னது.
இப்படி எல்லாம் கேட்டபிறகு நமக்கு தோணலாம். அட, பலன்ல உரிமை கிடையாதுன்னா வேலை பண்ணுவானேன்? இது பெரிய பிரச்சினையப்பா. பேசாம சும்மா கிடந்துடலாம். ஏன் வம்பு!
8 comments:
//நம்மால முடிஞ்ச வரை செஞ்சோம். அப்புறம் அவன் விட்ட வழின்னு யார் நினைக்கிறாங்களோ அவங்க அவ்வளவு கஷ்டப்பட மாட்டாங்க. மனசு அமைதியா இருப்பதாலே அவரால வேலையை நல்லாவே செய்ய முடியும்.//
ம்ம்ம்ம் இந்த மாதிரி ஒரு மனம் வேண்டும்னு நினைக்க மட்டுமே முடியும். கொடுக்கிறது அவன் செயல்!
--
/ம்ம்ம்ம் இந்த மாதிரி ஒரு மனம் வேண்டும்னு நினைக்க மட்டுமே முடியும். கொடுக்கிறது அவன் செயல்! //
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்......
பாத்தீங்களா, நம்மால முடியாத விஷயத்துக்கு அவன் மேலே பழிய போடறோம்!
டிஸ்கி - எனக்கு சொந்தமா ஒண்ணும் தெரியாது...
திருவாசகம் கூட
"அவனருளாலே அவன் தாள் வணங்கி"ன்னு சொல்லுதே. அப்ப அவனை வணங்கவும் அவனருள் வேணும்னுதானே அர்த்தம்?
//அப்ப அவனை வணங்கவும் அவனருள் வேணும்னுதானே அர்த்தம்?//
ஆமாம் அக்கா!
நான் சொல்ல வந்தது -
ஒரேயடியாய் எனக்கு தெரியாது, நீயே பாத்துக்கன்னு விட்டு விடலாம். அதுல சாரம் இருக்கு.
சாதாரணமா நாம என்ன செய்யறோம்? ஏதாவது சரியா பண்ணிட்டா நாம க்ரெடிட் எடுத்துக்கிறோம். சரியில்லைனா அவன் மேல பழிய போடறோம். ஒண்ணு ரெண்டுத்துக்குமே அவன்தான் காரணம் ன்னு சொல்லனும். இல்லைனா ரெண்டுத்துக்கும் நாம பொறுப்பேத்துக்கனும். அவ்ளோதான்.
//நம்மால முடிஞ்ச வரை செஞ்சோம். அப்புறம் அவன் விட்ட வழின்னு யார்//
க்ர்ர்ர்ர்ர்ர் முடிஞ்சவரை செஞ்சுட்டுத் தானே அப்படி வேணும்னு கேட்டு இருக்கேன்.:P
கீ அக்கா, சரிதான்!
வேளுக்குடியாரின் அருமையான கதை. இரசித்தேன். :-)
:-))
வாங்க குமரன்.
ஆமாம், இது எனக்கும் ரொம்பவே பிடித்து போன உதாரணம்.!
Post a Comment