Thursday, September 18, 2008
ஆப்திக சிராத்தம்:
ஆப்திக சிராத்தம்:
இதைப்பற்றி முதலில் எழுதுவதாக உத்தேசம் இல்லை. எனினும் மௌலி கேட்கிறர். சரி எழுதி விடலாம் என்று தோன்றியது. நமக்கு தெரிந்து கடைப்பிடிக்க கூடியதை மட்டுமே எழுத உத்தேசம். நடைமுறைகள் அதிகமாக எழுதவில்லை.
------
இதை பார்வண சிராத்தம் என்பர். (பார்வணம் என்பது 3 தலை முறையை உத்தேசித்தது. ஏகோத்திஷ்டத்தில் இப்படி இல்லை)
யாருக்கு எந்த மாசத்தில் எந்த திதியில் மரணம் ஏற்பட்டதோ அதே மாத அதே திதியில் செய்ய வேண்டும். ஏனெனில் திதிதான் பலமுடையது என்கிறார் நாரதர்.
சந்திரன் நகர்வை முக்கியமாக கொண்டு நிர்ணயிப்பது சாந்த்ர மாஸம். சூரியனை கொண்டு நிர்ணயிப்பது ஸௌர மாஸம்.
சாந்திர மாசம் தர்சாந்தம் (அமாவாஸையில் முடிவது) பூர்ணிமாந்தம் (பௌர்ணமி அன்று முடிவது) என 2 வகை.
இதில் எதை பின் பற்றுவது?
ஜ்யோதிஷர்கள் நர்மதையை எல்லையாக சொல்லி அதற்கு தெற்கே தர்சாந்தம், வடக்கே பூர்ணிமாந்தம் என சொல்கின்றனர்.
விரதங்களுக்கு சாந்திர மாதம் உயர்ந்தது; ஆனால் சிராத்தத்துக்கு சௌர மாதம் என்கிறது சந்திரிகை.
சாந்திரமானத்தில் அடிக்கடி அதி மாசம் வருவதால் அது நிலை இல்லாதது என்பதை சுட்டிக்காட்டி அது இப்படி சொல்கிறது.
ஒரு வேளை சௌர மாதத்தில் 2 திதிகள் வந்தால்? அதாவது சுக்ல பட்ச சதுர்த்தி 2 என்பது போல வந்தால்? பின் திதி தோஷம் (க்ரஹணம், மாத பிறப்பு போல) இல்லாமல் இருந்தால் அதில் செய்ய வேண்டும். இரண்டிலும் தோஷம் இருந்தால்? முந்தைய திதி.
சிராத்தம் செய்ய வேண்டிய மாத்தியானிக காலம் கழிந்த அபராஹ்ணம் என்ற காலத்தில் குறிப்பிட்ட திதி இருக்க வேண்டும்.
இது போல நிறைய சமாசாரங்கள் இருக்கின்றன.
ப்ரதி வருஷம் சிராத்தம் செய்யாதவர் கோடி ஜன்மங்கள் சண்டாளனாக பிறப்பானாம். ஸம்வர்த்தகர் சொல்கிறார்.
முக்கியமான விஷயம் சகோதரர்கள் சொத்தை பிரித்துக்கொண்டுவிட்டால் - அதாவது குடும்பம் தனியாக பிரிந்து விட்டால் சிராத்தம் தனித்தனியாகதான் செய்ய வேண்டும். பலர் அன்று மட்டும் ஒன்று சேர்ந்து செய்கின்றனர். (மத்த நாட்களில் இருக்கிறாயா இல்லையா என்று கூட பார்ப்பதில்லை!) இது தவறு.
அதே போல ஏதேனும் ஆபத்து வந்தாலும் ஆம ரூபமாக செய்யக்கூடாது. அந்த திதி சௌகரியப்படாவிட்டால் அடுத்த அமாவாசை அல்லது க்ருஷ்ண ஏகாதசியில் செய்வர்.
96 சிராத்தங்கள் குறித்து முன்னேயே பார்த்து இருக்கிறோம்.
புண்ணிய தீர்த்தங்களில் செய்யும்போது வரணம் செய்யும் அந்தணரை பரீட்சிக்க வேண்டியதில்லை.
இல்லாவிட்டால் அவசியம் பரீட்சிக்க வேண்டும். {அப்படி செஞ்சா யாரும் கிடைப்பாங்களா? :-( நம்பிக்கையுடன் உறுதியோடும் செய்தால் கிடைப்பார்கள்.} அவன் குலம் நல்ல குலமா? அவன் வேதம் பயின்றவனா? ஆசாரங்கள் நல்லதாக இருக்கின்றனவா?
வேத அத்தியயனம் பிள்ளை செய்யவில்லை; அவன் அப்பா செய்து இருக்கிறார்.
வேத அத்தியயனம் பிள்ளை செய்து இருக்கிறார்; அவன் அப்பா செய்யவில்லை.
இப்படி 2 பேரில் யார் பரவாயில்லை?
ஆச்சரியமான பதில்; முதல் ஆசாமிதான்.
காயத்ரி செய்வதில் நாட்டம் உள்ளவன், ஆசாரத்துடன் இருப்பவன் சிறந்தவன். நான்கு வேதங்களும் கற்றாலும் எல்லா இடங்களிலும் சாப்பிட்டுக்கொண்டு, எல்லாவற்றையும் விற்றுக்கொண்டு, நேரத்துக்கு குளியல் சந்த்யா உபாசனம் இல்லாதவன் லாயக்கு இல்லை.
அக்னி ஹோத்ரி, நியாய சாஸ்திரம் அறிந்தவன், ஆறு அங்கங்களையும் அறிந்தவன், மந்திர பிராம்மணம் அறிந்தவன், தர்மங்களை ரக்ஷிப்பவன்; குரு, தேவதை, அக்னி இவர்களை பூஜிப்பவன், ஞானீ, சிவ பூஜை செய்பவன், விஷ்ணு பக்தி உள்ளவன் இவர்கள் வரிக்கக்கூடியவர்கள்.
அமாவாஸை பிரதமை ஆகிய காலங்களில் வேதம் சொல்கிறவன், சதாசாரம் இல்லாதவன், கண்டவர் அன்னத்தால் உடல் வளர்ப்பவன் இவர்கள் லாயக்கு இல்லை.
நான் வருகிறேன் கூப்பிடு என்று தானாக அழைத்துக்கொள்கிறவன் கூடாது என்று சொல்லப்பட்டாலும் சாஸ்திர பிரமாணம் தெரியவில்லை.
Labels:
இரண்டாம் சுற்று
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
அண்ணன், தம்பி சொத்து இருந்தாலும், இல்லாவிட்டாலும் சமையல் தனித்தனி என்று ஆகிவிட்டால் ஒரே வீட்டிலேயே இருந்தாலும், தனித்தனியாகவே சிராத்தம் செய்யவேண்டும், என்பது பொது விதி.
//வேத அத்தியயனம் பிள்ளை செய்யவில்லை; அவன் அப்பா செய்து இருக்கிறார்.//
அப்பா அத்யயனம் பண்ணி இருக்கார், பிள்ளைக்குச் சொல்லி வைக்கலை, ஆனால் (பிள்ளையின் பிள்ளை), பேரன் அத்யயனம் பண்ணி இருக்கான், அப்போ??????????????
நன்றிங்கண்ணோவ்...
Post a Comment