Pages

Monday, September 8, 2008

முதல் நாள் காரியம்



முதல் நாள் காரியம் (தொடர்ச்சி) :

மத்தியானத்தில் புது துணி, எள், தர்ப்பை, சொம்பு எடுத்து நீர் நிலைக்கு போகணும். அதன் கரையில் கல் புதைக்க குழி தோண்டணும். கல் புதைக்க அனுமதி வாங்கி சங்கல்பம் செய்து தெற்கு முகமாய் இடது காலை மண்டி போட்டு அமர்ந்து தர்ப்பையால் சுற்றப்பட்ட 3 கற்களை குண்டத்தில் வைத்து இறந்தவரை (ப்ரேதத்தை) அதில் ஆவாஹனம் செய்ய வேண்டும்.

பத்து தர்ப்பைகளுடன் ஒரு புது துணியை மூன்றாக மடித்து சுருட்டி உள்ளங்கையால் இன்னாருக்கு என சொல்லி 3 முறை நீர் வார்க்க வேண்டும்.

அதே போல பின்னர் எள்ளும் நீரும் இறைக்க வேண்டும்.
(இதை ஒட்டிதான் "எனக்கும் அவனுக்கும் சம்பந்தம் இல்லை எள்ளும் தண்ணியும் இறைச்சாச்சு" என கோபத்தில் சொல்வதுண்டு. பெரிய பாபம்.)

அப்புறம் அத்தனை நீரையும் கொட்டிவிடவேண்டும்.

இப்படி இரண்டாம் நாள் ஆரம்பித்து ஒவ்வொரு நாளும் துணியுடன் நீரும் ஒவ்வொரு நாளும் ஒன்று அதிகமாய் எள்நீரும் கொடுக்க வேன்டும்.

பின் வீட்டுக்கு போய் திண்னையிலோ அல்லது வெளியிலோ இடது பக்கத்தில் குழி தோண்டி கல் புதைக்க வேண்டும். சிறு குழி தோண்ட வேண்டும். ப்ராயச்சித்தமாக ஹிரண்யம் தானம் செய்து கல் ஊன்றுவர். முன் போலவே துணியுடன் நீர் வார்ப்பது. இதனால் பிரேத சரீரம் உருவாகிரது. சாதாரண தீயில் கர்த்தா தானே சரு சமைக்கணும். அதில் நெய் விட்டு வடக்கே இறக்கி திருப்பி நெய் சேர்த்து குழியின் அருகில் தென்கிழக்கில் பசு சாணத்தால் தரையை மெழுகி நீர் தெளித்து தெற்கு நுனியாக தர்ப்பைகளை பரப்பி எள் நீர் வார்ப்பது. பின் சருவில் எள் கலந்து முஷ்டி அளவு அல்லது கோழி முட்டை அளவு எடுத்து பிண்ட தானம் செய்வர். (மாலையானால் கட்டைவிரல் அளவு.) அதன் மீது எள்ளும் நீரும் வார்ப்பர். படைத்தவற்றை ஏற்கும்படி வேண்டிக்கொள்வர். சரு பாத்திரத்தை நீரிட்டு அலம்பி அந்த நீரால் ஒரு முறை இடமாக (அப்ரதக்ஷிணமாக) நீரால் சுற்றுவர்.

ஏக்கோத்தர விருத்தி ச்ராத்தம்: ஆம ரூபமாக செய்வதாக சங்கல்பம் செய்து 3 அந்தணர் சாப்பிடக்கூடிய அளவு அரிசி தானம் செய்வர்.

இப்படி 10 நாட்கள் பிண்டமும் பலி தானம் கொடுத்து; ஒவ்வொரு நாளும் ஒன்று அதிகமாய் எள்நீரும் கொடுக்க வேண்டும்.

நவ ச்ராத்தம்:
குண்டத்தின் மேல் 2 உரிகளை கட்டி ஒன்றில் நீரும் மற்றதில் பாலும் தரையில் இளநீரும் வைப்பர். பிண்டத்தையும் பலியையும் துணியில் வைத்து குடுமி முடிந்து குலத்துக்கோ ஆற்றுக்கோ சென்று நீரில் தெற்கு முகமாக நின்று பிண்டத்தையும் பலியையும் தலைக்கு மேலாக பின் பக்கம் ஆகாயத்தில் எறிவர். அப்படியே முழுக்கு போடுவர்.
முதல் நாள் செய்யப்பட்ட அதே திரவியம்தான் கடைசிவரை சரு செய்ய பயனாகும். முதல் நாள் போட்ட அதே இடத்தில்தான் மற்ற நாட்களூம் பிண்டம் நீர் போடுவர்.
நீர் நிலையில் உள்ள கல்லுக்கு நீர் இறைத்தல் மட்டும். வீட்டில் உள்ள கல்லில் பிண்டமும் உண்டு. நீர் நிலை இல்லை என்று வீட்டிலேயே இரண்டு கற்களையும் ஊன்றியது உண்டு. இப்போதெல்லாம் ஃப்லாட் ஆகிவிட்டபோது என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை.

5 comments:

திவாண்ணா said...

திருப்பியும் வாய்கால் வெட்டறேன்னு....வேணாம் யாரும் நம்ம மாட்டாங்க. நேத்து முதல் இணைப்பு போச்! கஷ்டப்பட்டு கடமை உணர்ச்சியோட பதிவிருக்கேன் பாருங்க! இப்பவும் ரொம்பவே மெதுவா வரதும் போறதும்....

Geetha Sambasivam said...

ஆஹா!!!!!!!!!!!தலைமறைவு வாழ்க்கையே பழகிப் போச்சு போல! :P

geethasmbsvm6 said...

//இப்போதெல்லாம் ஃப்லாட் ஆகிவிட்டபோது என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை.//

ஞானவாபி இருக்கே??????

மெளலி (மதுரையம்பதி) said...

பாட்டிக்கு, அப்பாக்கு வீட்டிலேயே 2 கல்லும் ஊனினோம்....பிளாட்ல கஷ்டந்தான்....

//ஞானவாபி இருக்கே??????//

போறுமே!....அதன் மூலம் வருபவர்களது சிரத்தை நான் பல முறை பார்த்துட்டேன்....ஏதோ ஆலையில்லா ஊருக்கு இலுப்பை பூ சக்கரைதான்.

திவாண்ணா said...

//ஏதோ ஆலையில்லா ஊருக்கு இலுப்பை பூ சக்கரைதான்.//
அது சரி!