Pages

Thursday, September 11, 2008

பத்தாம் நாள் காரியங்கள் -தொடர்ச்சி


அடுத்து சாந்தி ஹோமம்.

இது வரை தீட்டு இருந்தது, தர்ப்பைகள் தெற்காக வைக்கப்பட்டன. பவித்ரம் செய்தால் அதில் ஒத்தைபடை தர்ப்பைகள். நமஸ்காரம் தெற்கு நோக்கி.
ஆனால் இப்போது தீட்டு போய் விட்டது. இனி தேவ காரியங்கள் போல. அதற்கு தகுந்தாற்போல சாதாரணமாகவே நடைமுறை.

சாந்தி ஹோமத்துக்கு விசேஷமாக வேண்டியவை எருது (தோல்) கொத்துமல்லி, நீர்வஞ்சி, கல், நட்டு வைக்க செடிக்கிளை, நொச்சி மாலைகள் ஆகியன. அக்னி வழக்கம் போல பிரதிஷ்டை செய்து மேற்கே தோலை விரித்து தாயாதிகள் அதில் உட்கார்ந்து நொச்சி மாலை அணிவர். ஹோம கிரமத்தில் சில மாறுதல்கள் உண்டு. ஹோமமும் இலையின் கீழ் பாகத்தால் செய்வர். 10 ஹோமங்கள். ஒவ்வொன்றும் முடிந்தபின் இலையிலிருந்து சொட்டு நெய்யை வடக்கில் ஒரு பாத்திரத்தில் விடுவர்.

இதற்கு முன் கிழக்கே ஒரு எருதை நிறுத்தி இருக்க வேண்டும். அதற்கு பதில் சிவப்பு எருதின் தோலை வைக்கிறார்கள். இப்போது அதற்கு பதில் மட்டை தேங்காயை வைக்கிறார்கள் போல் இருக்கு. எருதையே நிறுத்தி வைத்து இப்போது அதை தொட்டுவிட்டு அதன் பின்னே அனைவரும் வரிசை ஏதும் இல்லாமல் கிழக்கு நோக்கி மந்திரம் சொல்லிக்கொண்டு போவர்.

கர்த்தா நீர்நொச்சி கொத்தை எடுத்துக்கொண்டு எல்லாருக்கும் பின்னால் எருது, தான் உட்பட எல்லார் அடிசுவட்டையும் அழித்துக்கொண்டு போவார்.
இறந்தவருக்கும் உயிரோடு இருப்பவருக்கும் இது எல்லை, என எண்ணி தாயாதிகளுக்கு தென்புறமாக கல்லை நடுவர். பிறகு சுமங்கலிகள் உள்ளங்கைகளால் கீழே நீர் விடுவர். பின் அந்த ஸ்த்ரீக்கள் அந்நீரால் முகத்தை துடைத்துக்கொள்வர். அப்படி யாரும் இல்லையானால் கர்த்தாவே அப்படி செய்வார்.
இப்போது அனைவரும் மை இட்டுக்கொள்வர்.

அப்புறம் கர்த்தா மாயானத்திலோ அல்லது வேறிடத்திலோ ஒரு மரக்கிளையை நடுவார். பின் அனைவரும் நொச்சி மாலைகளை கழற்றி எறிவர்.

ஆனந்த ஹோமம் அடுத்தது.

இவ்வளவு நாட்கள் சோகமான காரியங்களையே செய்து கொண்டு இருந்தார்கள். இப்போது ஆனந்த ஹோமம்.
தானங்கள் செய்து அதிக சம்ஸ்காரங்கள் இல்லாமல் ஹோமம்.
லௌகீகமான (=சாதாரணமான) அக்னியில் அன்னம் சமைத்து கர்த்தாவும் தாயாதிகளும் அதை சாப்பிடுவர். பின் புண்யாஹம் செய்து அந்த புனித நீரை உட்கொள்வர்.

இந்த ஆனந்த ஹோம அக்னியை வீட்டுக்கு எடுத்து சென்று அங்கு வைத்துக்கொள்வர்.
இரவில் பொரி, அப்பம் முதலியன தானம் செய்ய சொல்லி இருக்கு.

இப்படியாக 10 நாள் காரியங்கள் முடிந்தது.


3 comments:

மெளலி (மதுரையம்பதி) said...

கொஞ்சம் வேலை அதிகம்....ஒவ்வொன்றாக படிச்சுண்டுவரேன்.

குமரன் (Kumaran) said...

பத்து நாள் காரியங்களும் முடிந்த பின்னர் தீட்டு நீங்கியதற்கு அடையாளமாகக் கோவிலுக்குப் போகும் வழக்கம் எங்களுக்குள் இருக்கிறது. இதைப் பற்றிய சாத்திரம் ஏதேனும் இருக்கிறதா?

திவாண்ணா said...

வாங்க குமரன்!
தீட்டு கழிந்து உடனடியாக ஒரு நல்ல காரியம் செய்யணும் என்பது கருத்து. அது ஆனந்த ஹோமம் / நவகிரஹ ஹோமமாக இருந்தாலும் கோவிலுக்கு போவதாக இருந்தாலும் ஒரே கருத்தில் இருக்கு. குறிப்பாக கோவில் போகணும்ன்னு இல்லை.