Pages

Tuesday, September 23, 2008

காம்யம் -நிஷ்காம்யம்


காம்ய கர்மாக்கள் பலவிதம். பூஜைகள், ஜபங்கள், ஹோமங்கள், தர்ப்பணங்கள். கிரிவலம், தானங்கள், நெறையவே இருக்கு. சாஸ்திரங்களில் சொல்லி இருக்கிற பிராயச்சித்தங்களும் இப்படித்தான்.

நிஷ்காம்ய கர்மாவுக்கும் இதுக்கும் செய்கிற விதத்திலேயும் வித்தியாசம் உண்டு. இன்ன விஷயம் நிறைவேற இப்படி இதை செய்கிறேன் என்று சங்கல்பம் செய்தால் அதை அப்படியே நிறைவேத்தனும். அதில லீ வே எடுத்துக்க முடியாது.

ஒருவர் ஒரு கஷ்டத்துக்காக ஒரு மடாதிபதியை போய் பார்த்தார். அவர் அதுக்கு ஒரு தீர்வு சொன்னார். ஒவ்வொரு சஷ்டியும் திருச்செந்தூர் போய் இன்னது செய்யது வரணும்; அப்படி தொடர்ந்து இவ்வளவு தரம் செய்யனும். சரின்னு இவரும் அப்படியே செய்து வந்தார். முக்கால்வாசி பூர்த்தி ஆயிடுத்து. இன்னும் 4-5 தான் பாக்கி என்ற நிலைல இவர் மடாதிபதியை போய் பாத்து அடுத்த சஷ்டி போக முடியாது. சென்னைல முக்கிய வேலை இருக்குன்னார். மடாதிபதி போய்த்தான் ஆகணும்னார். இவர் இல்லை அதுக்கு பதிலா இன்னும் 2 தரம் போய்வரேன் என்றார். இல்லை, அதுக்கு அடுத்த நாள் போறேன் என்றார். மடாதிபதி ஒத்துக்கலை. என்னால நிச்சயம் போக முடியாது, என்ன செய்யறதுன்னு கேட்டார் இவர். அப்படின்னா பரவாயில்லை, திருப்பி முதல்லேந்து ஆரம்பிச்சு செய் என்றார் மடாதிபதி.

நிஷ்காம்யத்துல இப்படி சட்ட திட்டம் இல்லை.

சரி நாம செய்கிற எல்லா விஷயமுமே காம்யம்தானா? ஞான வைராக்கிய சித்யர்த்தம் என்று பண்ணினால்? அது மோட்சத்தை தேடுகிற மார்க்கம்; அது காம்யம் இல்லை.

சமீபத்தில ஒரு கூட்டத்தில ஸ்வாமி ஓங்காரனந்தா சொன்னார்: ஒரு கோவிலுக்கு போய் ஒரு சின்ன அஷ்ட்டோத்திர பூஜை செய்யக்கூட இருக்கிற எல்லார் பேரும் சொல்கிறோம். வீர்ய விஜய ஆயு ஆரோக்கிய என்று முழ நீள சங்கல்பம் செய்கிறோம்.
ஸோம யாகம் செய்வதை பாருங்க. யக்ஞேஸ்வர ப்ரீத்யர்த்தம், ஸோமேன யக்ஷ்யே.. அவ்ளோதான்.!
பலன் செய்கிறவருக்கும் கிடைத்தாலும் பொதுவாகவே எல்லாருக்கும் பலன் கிடைப்பதால் இது நிஷ்காம்யம் ஆகிவிட்டது.


5 comments:

jeevagv said...

முன்பொருமுறை ரமண மகரிஷி ஒரு சம்பவத்தை செய்து காட்டி, அதன் மூலம் நிஷ்காம்யகர்மம் என்றால் என்ன என்று விளக்குவார். இதை முன்பு படித்தும், எழுதியும் இருந்ததால்தான், சட்டென்று சொல்ல முடிந்தது:
http://jeevagv.blogspot.com/2007/07/blog-post_8760.html

மெளலி (மதுரையம்பதி) said...

ஆமாம், சில விரதங்கள், பூஜைகள், ஜபங்கள் குடும்பத்தில் தலைமுறை-தலைமுறையாக வருகிறது. அவையெல்லாமும் நிஷ்காம்ய கர்மாக்களில்தான் சேர்க்கணும் இல்லையா?...

திவாண்ணா said...

தொடுப்புக்கு நன்றி ஜீவா!
நல்ல நிகழ்வை எழுதி இருக்கிறீர்கள். அவன் திட்டமில்லாமல் எதுவும் நடப்பதில்லையே! எல்லாத்துக்கும் ஒரு காரணம் இருக்கு!
காம்யத்தில் அது நம்முடையது.
நிஷ்காம்யத்தில் அது அவனுடையது!
நாம் நம்ம காரியத்தை செய்வதைவிட அவனுடைய காரியத்தை செய்வது மேல் இல்லையா?
சிந்தனையை தூண்டியதுக்கு நன்றி!

திவாண்ணா said...

@ மௌலி
என்ன சங்கல்பம் என்பதை பொறுத்தது இல்லையா மௌலி?

மெளலி (மதுரையம்பதி) said...

உண்மை தான் திவாண்ணா....ஒரு சில குறிப்பிட்ட விரத பூஜைகளைத் தவிர மற்றவைநித்ய கர்மாவாக, ஞான வைராக்கிய சித்யர்த்தம் என்றே ஆகிறது. :)