Pages

Monday, September 15, 2008

ஸர்ப பலி



பையர் இன்னிக்கு (பௌர்ணமி) ஸர்ப பலி செய்யறார்.
தயார் செஞ்சு வெச்சு இருந்ததை அவருக்கு தெரியாம க்ளிக்கிட்டேன்.


From 15092008

பொரி, சத்து மாவு, அரிசி, (எல்லாம் ஹோமத்துக்குத்தான்.) மை, சந்தனம், குளிர்ந்த தண்ணீர்.

அப்புறமா பலாஸ புஷ்பம்.
அது வஸந்தத்துலதான் பூக்குமாம்.
அப்பவே பறிச்சு சேத்து வெக்கணுமாம். தெரியாம போனதாலே போன் பௌர்ணமிக்கே செய்து இருக்கக்கூடியதை செய்ய முடியலே. ஒரு மாசமா அங்கே இங்கே சொல்லி வெச்சு கேட்டு ஒரு வழியா போன சனிக்கிழமைதான் வந்து சேர்ந்தது.

From 2008-09-15--19.21.11


பாவம் வாடி வதங்கி இருக்குங்க!
அப்பாடா, ஆணி அதிகமா போனதிலே பதிவு போட முடியாம இருந்ததை சரி பண்ணியாச்சு!


6 comments:

மெளலி (மதுரையம்பதி) said...

சரி படம் போட்டதுதான் போட்டீங்க, இந்த சர்ப பலி பற்றி நீங்க முன்பு எழுதினதை லிங்க் கொடுத்திருக்கலாம் தானே ?. இப்போ நான் எப்படி தேடி படிக்கறது :)

அதில் கூட நீங்க பலாச புஷ்பம் பற்றி சொன்ன நினைவில்லையே?.

jeevagv said...

//பலாஸ புஷ்பம்.//
Anything to do with பலா?

திவாண்ணா said...

ஓ, இல்லை!
:-))
நம்ம புரசு தான். (பூவரசு இல்லை)
முறுக்கன் ன்னும் ஒல்லுவாங்க. ரொம்ப தக்கையா நடுல ஓட்டையே இருக்கும். ஹோமத்துக்கு ரொம்ப உசிதமானது. பலாஸம் சம்ஸ்கிருதம்.

மெளலி (மதுரையம்பதி) said...

எங்க என்னோட முந்தைய பின்னூட்டம்?

பதில் வந்திருக்கான்னு பார்க்க வந்தா, பின்னூட்டமே காணோம்... :)

திவாண்ணா said...

மௌலி மன்னிக்க.
மாசம் ஒரு முறையாவது இப்படி ஆகுது. ஏன்னு தெரியலே! காமென்ட்ஸ் என் மின்னஞ்சலுக்கு வரணும். சில சமயம் வரதில்லை. இப்படி கேட பின் போய் மாடரேஷன் பக்கதிலே பாத்து சமத்தா உக்காந்து இருக்கும்! இதுக்கு அப்படிதான் ஆச்சு!

http://anmikam4dumbme.blogspot.com/2008/08/blog-post_18.html
இங்கே இப்படி:
//ஸ்ராவணீ:
ஸர்ப்பபலி என்றும் சொல்வர். ஆவணி மாத பௌர்ணமியில் செய்வர். அன்று இரவு சரு, நெய் ஹோமம் செய்து, பலாஸ பூக்களை இரு கைகளாலும் ஹோமம் செய்து; புற்று இருக்குமிடத்திலோ சுத்தமான இடத்திலோ அரிசி மாவு கோலம் போட்டு ஸர்ப்ப மந்திரங்கள் சொல்லி போற்றுவது; இதை மார்கழி பௌர்ணமி வரை செய்வர். இது ஸர்ப்ப தோஷங்களுக்கும் சாந்தியாகும்.//

மெளலி (மதுரையம்பதி) said...

அச்சோ, மன்னிப்புங்கறதெல்லாம் எதுக்குண்ணா...

எனக்கும் இது போல நடக்கிறது சில சமயங்களில்.