Wednesday, September 10, 2008
பத்தாம் நாள் காரியம்.
தசாஹம்
பத்தாம் நாள் தாயாதிகள் அனைவரும் உடம்பு முழுதும் சவரம் செய்து கொண்டு குளித்துவிட்டு விரித்த தலையுடன் ஒரே ஒரு துணிமட்டும் அணிந்து தெற்கு முகமாக நதி கரையில் கல் ஊன்றிய இடத்தில் உள்ள குண்டத்தில் 30 துணியுடன் நீர் வார்த்தலும் 75 முறை எள்ளும் நீரும் வார்த்தலும் செய்வர்.
பிறகு கர்த்தா 3 முறை குளித்து அதே குண்டத்தில் 3 முறை துணியுடன் நீர் வார்த்தலும் 12 முறை எள்ளும் நீரும் வார்த்தலும் செய்வார். வீட்டுக்கு போய் அங்குள்ள கல் ஊன்றிய இடத்தில் தினம் போல துணியுடன் நீர் வார்த்தல், எள்ளும் நீரும் வார்த்தல், ஏக்கோத்திர வ்ருத்தி சிராத்தம் ஆகியன செய்து ப்ரபூத பலி தானம் செய்வார்.
ஒத்தைப்படை கோடுகள் வரும்படி கோலம் போட்டு (அதனால் வீடுகளில் சாதரணமாக அப்படி கோலம் போடுவது இல்லை) தெற்கு நுனியாக துணியை பரப்பி தர்ப்பைகளையும் பரப்பி எள்ளும் நீரும் விட்டு மௌனமாக அன்னம் அப்பம் கொழுக்கட்டை, லட்டு, முறுக்கு, நெய், தேன், தயிர் எல்லாம் வைப்பர். அதன் மேல் மீண்டும் எள்ளும் நீரும் விட்டு குலம் தழைக்க வேண்டிக்கொள்வர். பாத்திரங்களை எள்நீரால் சுற்றி, அலம்பி, நிமிர்த்தி வைத்து, தெற்கு முகமாய் நமஸ்கரிக்க வீட்டு காரியங்கள் முடிகிறது. பெண்கள் துன்பத்தை காட்டுவர். பின் அவர்களை வெளியே அனுப்பிவிட்டு, கல்லை எடுக்க தானங்கள் செய்து, பித்ருவை போக வேண்டிய இடத்துக்கு போகச்சொல்லி பிரார்தித்து, கண்களை மூடிக்கொண்டு கற்களை எடுத்து; விழித்து, அவற்றை துணியில் வைத்து கையலம்பி, சகதி மண், தானியங்கள் இவற்றை எடுத்துக்கொண்டு போய் ஒரு குழியில் எல்லாவற்றையும் போட்டு மூடுவர்.
இதே போல நதி கரையில் காரியங்களை செய்வர். பெரியோரை வலம் வந்து பிரார்தித்து மீண்டும் சர்வாங்க சவரம் செய்து குளிக்க தீட்டு கழிகிறது.
Labels:
இரண்டாம் சுற்று
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
//30 துணியுடன் நீர் வார்த்தலும் 75 முறை எள்ளும் நீரும் //
இதுல 75 முறை நீர் வார்த்தல் பண்ணினதா தெரியல்ல...
அதே போல 2 ஸ்நானங்களதான் நினைவுல இருக்கு...
படிச்சப்ப எனக்கும் கொஞ்சம் ஆச்சரியம்தான்!
Post a Comment