Pages

Sunday, September 21, 2008

காம்ய கர்மா:



காம்ய கர்மா:
ஏதோ ஒரு விஷயத்தை வேண்டி ஒரு கர்மா செய்கிறோம். இது காம்ய கர்மா.
ஜீவனத்துக்கு பணம் வேண்டிதான் வேலை பார்க்கிறோம். அப்ப இதுவும் காம்ய கர்மாதான். சில பேருக்கு அப்படி வேலை பார்க்க தேவையில்லாமல் இருப்பர். இருந்தாலும் வீட்டில் சும்மா இல்லாமல் ஏதோ ஒரு வேலை பார்ப்பார்கள். அதற்கு சம்பளம் என்று ஒன்று இருந்தாலும் அதைப்பத்தி கவலை படாம வேலை பார்ப்பார்கள். உதாரணமா சொன்னா பல பெண்கள் படிப்பு முடித்து ஆசிரியை வேலை பார்ப்பதுண்டு. அப்படி சம்பாத்திக்க கட்டாயமோ இல்லை அவசியமோ இல்லாவிட்டாலும் சமூகத்துக்கு ஏதோ ஒரு உதவி செய்யணும் என்று செய்வர். அல்லது இலவச ட்யூஷன் எடுப்பார்கள். அப்போது இதே அகாம்ய நிஷ்காம்ய கர்மா ஆகிவிடும்.

எப்போதுமே அகாம்ய நிஷ்காம்ய கர்மா காம்ய கர்மாவை விட உயர்ந்தது.
அது நல்லாவும் நடக்கும். ஏன்? அப்படி கர்மா செய்கிறபோது பணம்/ சம்பளம் பத்தி யோசனை இல்லை. மனசு முழுக்க காரியத்தில் ஈடுபடும். அப்படி செய்யும் காரியம் பரிமளிக்கும்.

காரியம் செய்யும் போது என்ன சங்கல்பம் செய்கிறோம்? “பகவத் ஆக்ஞையா" “ பரமேஸ்வர /நாராயண ப்ரீத்யர்த்தம்" இப்படி எல்லாம் சொல்லிதான் இன்ன காரியம் செய்கிறேன் என்று சங்கல்பிக்கிறோம். ஏன் கர்மா செய்கிறோம்? அது பகவானுடைய உத்தரவு. எதற்கு செய்கிறோம்? அது அவனுக்கு பிடிக்கும் அதனால். அதே போல கர்மா முடிந்து "உடலால், வாக்கால், மனதால், இந்திரியங்களால், புத்தியால் இல்லை வெறும் சுபாவத்தால் என்னவெல்லாம் செய்கிறேனோ அனைத்தையும் நாராயணனுக்கே சமர்ப்பணம் செய்கிறேன்.” என்று செய்த கர்மாவில் பலனை விட்டு விடுகிறோம். இப்படி செய்யும் போது அது அகாம்ய நிஷ்காம்ய கர்மா ஆகிறது.

இப்படி சொல்வதால் அகாம்ய கர்மா மட்டுமே செய்யவேண்டும் என்று இல்லை. லௌகீக வாழ்க்கையில் சில பொறுக்க முடியாத தொந்திரவுகள் வந்தால், சில நியாயமான ஆசைகள் நிறைவேறாமல் போகும்போது இப்படி கர்மாக்கள் செய்யலாம்.
இதிலேயே ஆசை என்று ஒன்று, ஆஸ்தை என்று ஒன்று.

ஆசைல தனக்கு, தன் குடும்பத்துக்கு என்று கொஞ்சம் குறுகிய நோக்கம் இருக்கு.
ஊரில் மழையே இல்லை. வெயில் வாட்டி எடுக்கிறது. மழை பெய்யணும்னு ஏதோ ஒரு கர்மா -ஏகாதச ருத்திர அபிஷேகம் போல- செய்யறோம். ஊருக்கு மழை பெய்யணும் என்பது ஆஸ்தை.

மனுஷனுக்கு காம்யங்கள் -ஆசைகள்- ரொம்பவே அதிகமா இருக்கு. அப்ப அதற்கான கர்மாக்களும் எக்கச்சக்கமா இருக்கு. எதோ வேதம் பிலாஸபிதான் ன்னு நினைக்கிறோம். உண்மையில அதுல நிறைய கர்மாக்கள் சொல்லி இருக்கு. எல்லாத்துக்கும் பலன் சொல்லி இருக்கு. வேதம் இந்த மாதிரி வாழ்க்கைக்கும் பின்னால வரப்போற வாழ்க்கைக்கும் சேத்துதான். பிலாஸபி -வேதாந்தம் (வேத அந்தம்) -கடேசில வரதுதான். அது நிரந்தர தீர்வு. முன்னாலே வருகிறதெல்லாம் தற்காலிக தீர்வுகள்.

4 comments:

jeevagv said...

அகாம்ய கர்மா - இது தாங்களே உருவாக்கிய வார்த்தையோ!!!
நிஷ்காம்ய கர்மா என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறேன்!

மெளலி (மதுரையம்பதி) said...

//இதிலேயே ஆசை என்று ஒன்று, ஆஸ்தை என்று ஒன்று.//

ஆசைக்கு ஒன்று ஆஸ்திக்கு ஒன்றுன்னு சொல்றதுண்டே?.

ஆஹா! ஆஸ்தி வேற, ஆஸ்தை வேறயா?..ஏதோ புரிந்தமாதிரி இருக்கு. :)

திவாண்ணா said...

@ ஜீவா
தவறை சுட்டிக்காட்டியதற்கு நன்றி. திருத்தி இருக்கிறேன்.
சமீப காலமாக இப்படி ஏதேனும் சின்ன தப்பு செய்கிறேன். ம்ம்ம்ம்...வயசாகுதோ?
:-))

@மௌலி
என்ன புதுசா புரிஞ்சதுன்னு சொல்லலாமா?
;-)

மெளலி (மதுரையம்பதி) said...

ஆஸ்தை புதிய வார்த்தை புரிந்தது போல இருந்தது.

நிஷ்காம்யத்துக்கு இன்னொரு வார்த்தை அகாம்யம் போல என்று விட்டுவிட்டேன்...இப்போது அதுவும் புரிந்தது :)