Pages

Wednesday, September 24, 2008

பிறப்பால் கர்மா



சாஸ்திரப்படி ஒருவருடைய கர்மா என்னன்னு சொல்லி இருக்குன்னு பாக்கலாம். இந்த காலத்திலே இது பொருந்துமா என்பது அவரவர் முடிவு செய்ய வேன்டியது.

அந்தணருடைய கர்ம அதிகாரம் வேத அத்தியயனம் (கற்பது) செய்தல், வேத அத்யாபனம் (சொல்லிக்கொடுத்தல்), யாகம் செய்தல், யாகம் செய்வித்தல், தானம் கொடுத்தல், தானம் வாங்கிக்கொள்ளுதல். இவ்வளவே.

இப்படி கர்ம அதிகாரம் உள்ள இவருக்கு இருக்க வேண்டியவை: தவம், இந்திரிய அடக்கம், தயை, தானம், ஸத்யம், தர்மம், சாஸ்திரம், அன்பு, வித்யை, அறிவு: பரலோகம், ஈஸ்வரன், வேதம் பிரமாணமானது என்பதில் நம்பிக்கை.

க்ஷத்திரியர்களுக்கு: வேத அத்தியயனம் (கற்பது) செய்தல், யாகம் செய்தல், தானம் கொடுத்தல் இவை மூன்றும் உண்டு. ஆனால் முக்கிய தர்மம் பிரஜைகளை காப்பதுதான்.
இவன் எப்படி இருக்க வேண்டும்? மிகுந்த உத்ஸாகம், தானசீலம், நன்றி மறவாமை, பெரியோரை சேவித்தல், வணக்கம் இவை உள்ளவன். ஸத்வ குணம், உண்மையான வாக்கு, சுத்தம், கார்யங்களை சீக்கிரமாக செய்தல், மறதி இன்மை, பெருந்தன்மை, கடினசித்தம் இன்மை; தார்மிகன், சூதாட்டம் போன்ற கெட்ட பழக்கங்கள் இன்மை, நல்லறிவு, சூரனாக இருத்தல், ரஹசியங்களை /தந்திரங்களை அறிந்து இருத்தல், ஆத்ம வித்யை, அர்த்த சாஸ்திரம், பசு பாலனம் இவற்றை அறிந்து இருத்தல், இப்படி இருக்கணும்.

இவன் அந்தணர்களிடம் பொறுமையுடனும், நண்பர்களிடம் வக்கிரமில்லாமலும், எதிரிகளிடத்தில் ப்ரதாபம் உள்ளவனாயும், வேலைக்காரர்கள், ஜனங்கள் இவர்களிடத்தில் அப்பாவை போல அன்பு உள்ளவனாயும் இருக்க வேண்டும்.
இப்படி இருப்பதற்காக அரசனுக்கு பிரஜைகளின் புண்ணியத்தில் 1/6 பங்கு கிடைக்கும். (அதே போல அவர்கள் பாவத்திலும்...முழுப்பாவமும் கிடைக்கும்!). அதனால் வஞ்சகர்கள், திருடர்கள், சூதுக்காரர்கள், கொள்ளையர்கள், கணக்கர்கள் இவர்களிடம் துன்பப்படும் மக்களை கவனித்து காக்கவேண்டும்.

அரசன் சாதுக்களை சிறப்பிக்க வேண்டும். லஞ்சத்தால் பிழைப்பவர்களை சொத்து பறிமுதல் செய்து நாட்டை விட்டு விரட்டவேண்டும். வேதம் உணர்ந்தவர்களை தானங்களால் ஆதரித்து நாட்டில் வசிக்க செய்ய வேண்டும். இப்படி எல்லாம் யாக்ஞவல்கியர் சொல்றார்.


6 comments:

மெளலி (மதுரையம்பதி) said...

அந்தணனும் தான் சம்பாதிப்பதில் (வைதீக சம்பாவனையில்), மூன்றில் ஒரு பங்கோ (சரியா நினைவில்லை) என்னமோ தானம் கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறதல்லாவா?.

திவாண்ணா said...

குடும்ப நிர்வாகத்தில் ஆறில் ஒரு பங்கு தர்மத்துக்கு என்றும் அப்படி வரும் பணம் தூயது என்றும் சொல்லப்பட்டு இருக்கு.

மெளலி (மதுரையம்பதி) said...

ஓ, அப்போ சம்பாதிப்பதில் எவ்வளவு தானம் அப்படிங்கறது இல்ல?..ஓகே

திவாண்ணா said...

மௌலி
அப்ப தானத்துக்கும் தர்மத்துக்கும் வித்தியாசம் பாக்கறீங்க. அதுவும் சரிதான். :-))
மொத்தத்திலே 1/6 பங்கு நமக்கோ நம் குடும்பத்துக்கோ பயன் படக்கூடாது.

மெளலி (மதுரையம்பதி) said...

//மௌலி
அப்ப தானத்துக்கும் தர்மத்துக்கும் வித்தியாசம் பாக்கறீங்க. அதுவும் சரிதான். :-))
மொத்தத்திலே 1/6 பங்கு நமக்கோ நம் குடும்பத்துக்கோ பயன் படக்கூடாது.//

தானத்துக்கும்-தர்மத்துக்கும் வித்யாசமா? புரியல்ல திவாண்ணா...பிராமணனுக்கு வரும்படி என்பது தானம் வாங்குவது + வைதீக சம்பாவனை ஆகிய இரண்டு முறைகளிலே மட்டும் இல்லையா?

சம்பாவனை (அ) தானம் ஏதாகிலும் சரி, அவனுக்கு வருவதில் 1/6 அவன் மீண்டும் தானம்/தர்மம் பண்ணனும் என்பதுதானே நீங்க சொல்றது?

ஆமாம், தானத்துக்கும் தர்மத்துக்கும் என்ன வேறுபாடு...ஏதோ கொஞ்சம் புரியற மாதிரி இருக்கு ஆனா புரியல்ல...நீங்களே சொல்லிடுங்களேன்

திவாண்ணா said...

//தானத்துக்கும்-தர்மத்துக்கும் வித்யாசமா? புரியல்ல திவாண்ணா...பிராமணனுக்கு வரும்படி என்பது தானம் வாங்குவது + வைதீக சம்பாவனை ஆகிய இரண்டு முறைகளிலே மட்டும் இல்லையா?//
ஆம்மாம். குரு கக்ஷிணையும் சேத்துக்கலாம்.
சம்பாவனை (அ) தானம் ஏதாகிலும் சரி, அவனுக்கு வருவதில் 1/6 அவன் மீண்டும் தானம்/தர்மம் பண்ணனும் என்பதுதானே நீங்க சொல்றது?
அதே அதே!
//ஆமாம், தானத்துக்கும் தர்மத்துக்கும் என்ன வேறுபாடு...ஏதோ கொஞ்சம் புரியற மாதிரி இருக்கு ஆனா புரியல்ல...நீங்களே சொல்லிடுங்களேன்//

ஔபாசனம் செய்யறீங்க. அதுக்கு ஸ்தாலிபாகம் போல பல விஷயங்கள் கூட இருக்கு. அதுக்கு ஆசார்யன் கூப்பிட்டு செய்யறீங்க. ஆசார்ய சம்பாவனை செய்யறீங்க.
இது உங்க தர்மம். விதிக்கப்பட்டது.
ஒத்தர் கோவில் கும்பாபிஷேகம்/ பொண்ணுக்கு கல்யாணம்/ ஸோம யாகம் செய்யணும், இப்படி உதவி கேட்டு வராங்க. நீங்களூம் உதவறீங்க. இது தானம்.