Pages

Sunday, September 28, 2008

வேண்டுகோள்


நல்லது.
இப்படியெல்லாம் சாஸ்திரங்கள் விதிச்சாலும் இப்ப நிலைமை தலை கீழாக மாறிவிட்டது.

வர்ண கலப்பு என்பது மஹாபாரத காலத்திலேந்தே தொடங்கி நாளாக ஆக அதிகமாக ஆகிட்டே இருக்கு. இந்த நிலைல பொதுவா சொல்ல முடியலை. அவரவர் முடிவு செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கு.

எங்க குல தெய்வத்தை கண்டு பிடிச்சு அங்கே போன போது சில நடை முறைகள் தெரியவந்தது. அந்த கோவிலுக்கு பூஜை செய்ய அதிகாரம் உள்ளவங்க சுமார் 50 குடும்பங்கள். எல்லாருமே ஏதோ ஒரு வேலைல இருக்காங்க.

இத்தனை பேருக்கும் வருஷத்திலே ஒரு வாரம் பூஜை செய்ய முறை. அந்த சமயம் லீவு போட்டுட்டு பூஜைக்கு வந்துடுவாங்க. மத்த சம்யம் எப்படி இருக்காங்களோ, அந்த ஒரு வாரம் மட்டும் சுத்த பத்தமா இருப்பாங்க. ஒரு வாரம் பூஜை கவனிச்சுட்டு அவங்க அவங்க வேலைக்கு போயிடுவாங்க.
இதுல ஒரு விசேஷம் இருக்கிறதா தெரியுதே! அவங்க அத்தனை பேருக்கும் அந்த கோவில்ல வேலை கிடைக்காதுன்னு யாரும் விட்டுட்டு போகலையே! நல்லா சம்பாதிக்கிற வேற வேலைல இருந்தாலும் இதை செய்யணும்ன்னு தோணுதே!

இப்படியே எல்லாரும் இருக்க முடியுமோன்னு யோசனை!
என்ன வேலை பாத்தாலும் அவரவர் ஸ்வ தர்மமான வேலைல ஒரு 'டச்' இருந்து கொண்டு இருக்கலாமோன்னு.....

குறிப்பா இங்கே அந்தணர்களை பத்தி சொல்லணும்.
மற்ற வேலைகளை பிறர் செய்கிறதாலே எந்த வேலையும் அழிஞ்சு போச்சான்னு பாத்தா.. ஒரு சில கலைகளை தவிர எல்லாமே இன்னும் இருக்கு. வைச்யர்கள் வியாபரத்தை விட்டா என்ன இப்ப எல்லாருமே வியாபாரம் செய்கிறாங்க. ஆட்சி முறை மாறி போனதிலே க்ஷத்திரியர்கள் போலீஸ், ராணுவம் இப்படி போகலைனாலும் அதுக்கு ஆள் இன்னும் இருந்துகிட்டுதான் இருக்கு. இப்படி லௌகீக சமாசரங்கள் யாராலோ பூர்த்தி செய்யப்படுது. பிரச்சினை அதிகம் இல்லை.

ஆனால் அந்தணர்கள் ஸ்வதர்மத்தை விட்டதுல வேதம் நம்மகிட்டேந்து பிரிஞ்சு போய்கிட்டே இருக்கு.
அப்ப வேதம் அழிஞ்சு போயிடுமா?

போகாது. ஏன்னா அது ஈஸ்வரனின் உயிர் மூச்சு. ஈஸ்வரன் இருக்கும்வரை அது இருக்கும். அப்படின்னா அது எப்பவுமே இருக்கும்.
பின்னே? அது நம்மகிட்டேந்து விலகி போயிடும். அப்படி நடந்தா அது நம்மோட நல்லதுக்கு இல்லை.

அந்தணர்கள் விதி வசத்தால எந்த வேலைல வேண்டுமானா இருக்கட்டும். கொஞ்ச நேரம் ஒதுக்கி வேதம் கத்துக்கொள்வது; கற்று கொண்டு இருந்தா அதை பாராயணம் செய்வது- மற்றவர்களுக்கும் சொல்லிக்கொடுப்பது; இரண்டுமே முடியாத பட்சத்தில் வேத பாடசாலைகள் தழைக்க முடிஞ்சதை செய்வது- இப்படி ஏதேனும் செய்ய வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்.


6 comments:

Geetha Sambasivam said...

உங்க வேண்டுகோள் நிறைவேற இறைவன் துணை நிற்பான்.

Geetha Sambasivam said...

என்ன ஆச்சு?? பாப் அப் சாளரம் வரலை??? அப்பா, நிம்மதியா இருக்கு! :P

மெளலி (மதுரையம்பதி) said...

நீங்க சொல்றது புரிகிறது திவாண்ணா.

அடடா. பாப் அப் விண்டோ இருந்தா படித்ததில் ஏதாச்சும் கேள்வி வரும் போது, கோடிட்டு திருப்பி கேள்வி கேட்க வசதியா இருக்கும்....இப்படி பண்ணிட்டீங்களே? :)

திவாண்ணா said...

கீ அக்கா நன்னி.
மௌலி கீ அக்கா அப்படாங்கிறாங்க நீங்க அடடாங்கிறீங்க! :-))
கோட் பண்ண என்ன பிரச்சினை இடது பக்கம் மேலே show original post க்ளீக்கினா முழு போஸ்டும் தெரியுமே! இல்லைனா காமென்ட்ஸ் பக்கத்தை தனியா திறந்துக்கலாமே?
என் அமைப்பில பாப் அப் திறந்தா திருப்பி மொழி தேர்வு அமைக்க வேண்டி இருக்கு. அதனால எடுத்துட்டேன்.

மெளலி (மதுரையம்பதி) said...

சாதாரணமா உங்க போஸ்ட் ஓபன் ஆக அதிக நேரம் பிடிக்கும்...இப்போ எல்லாம் நல்ல இம்ப்ரூவ்மெண்ட் தெரியுது....என்ன பண்ணினீங்க ?

திவாண்ணா said...

ஒண்ணும் பண்ணலையே மௌலி!