ஸ்ரீசங்கரர் ¨ப்ரஹ்மணி புத்தே: ஸ்தாபனம்¨ அப்படின்னார்.
பிரம்மத்தில் புத்தியை நிலை நாட்டு.
ஆமாம், இது வரை நாம கேள்வி பட்டதெல்லாம் புத்தியால ஆத்மாவை பிடிக்க முடியாதுன்னுதானே? முன்னுரையிலேயே அப்படி கொஞ்சம் சிரமப்பட்டு சொன்னாப்பல ஞாபகம்!
உண்மைதான். புத்தியால பிடிக்க முடியாதுதான். ஒண்ணுக்கு ரெண்டா உபநிஷத்துக்களிலே (1) ந மேதயா - புத்தி சக்தியால இல்லை- அப்படின்னு சொல்லி இருக்கு.
பின்னே என்ன அர்த்தம்?
இங்கே அவர் முடிவு நிலையான சமாதியை சொல்லலை. அதுக்கு கீழே இருக்கிறதாலதான் சமாதானம் ன்னு சொல்லி இருக்கார்.
புத்தியாலே பிடிக்க முடியாதுன்னா வேற என்னதான் செய்யறது?
அதை வரணம் செய்யணும்.
வரணம்?
கல்யாணத்துக்கு வரன் தேடறோம். வரன் = சிறந்தவன். இப்படி ஒரு அர்த்தம். இன்னும் ஒண்ணு பல பேரிலே தேர்ந்து எடுக்கப்பட்டவன். சூஸ்! அதான். ஸ்வயம்வரம். அந்த காலத்து ராஜ குமாரிகள் தன் கணவனை தேர்ந்து எடுத்தாங்க. இப்படி செய்கிறதுதான் வரணம். குரு சிஷ்யனை தேர்ந்து எடுக்கிறது சிஷ்ய வரணம். சிஷ்யன் நமக்கு குரு யார்ன்னு தேடி தேர்ந்து எடுக்கிறது குரு வரணம்.
இதே போல பலதையும் தள்ளிவிட்டு ஆத்மாவையே தேர்ந்து எடுத்து ¨நீயே உன்னை தெரிவிச்சுக்க. என்னதான் நான்தான் நீ; நீதான் நான்னு இருந்தாலும் அறியாமையால அது எனக்கு பிடிபடலை. என் மனசு, வாக்கு, புத்தியால உன்னை பிடிக்க முடியலை. அதனால் நீயேதான் உன்னை காட்டிக்கணும்¨ ன்னு பிரார்த்தனை செய்யணும். இப்படி செய்து கொண்டே இருந்தா ஒரு நாள் திடீர்ன்னு அது பளிச்சுன்னு வெளியாகிடுமாம். பிரார்த்தனை செய்தவன் புத்தி, மனசு, வாக்கு எல்லாத்தையும் அவனதுன்னு இல்லாம ஆக்கி இவன் ஆத்ம சொரூபமாகவே சுய அனுபூதி பெறப்பண்ணிடும். அது விவரணம். வரணம் செய்தவனுக்கு கிடைக்கிறது விவரணம்! அதாவது மூடி இருப்பதை திறந்து விடுகிறது. Revelation!
திருப்பி கேள்விக்கு வரலாம். இப்படி புத்தியால முடியாது என்கிறத தெரிஞ்சு இருக்கிறப்ப புத்தியை ப்ரம்மத்தில பொருத்துன்னா என்ன அர்த்தம்?
ப்ரம்மத்தை பத்தி வேத சாஸ்திரங்களிலே சொல்லி இருக்கிறதிலேயும் குரு சொன்னதிலேயும் உன் புத்தியை ஒரே சிந்தனையா பதிய வை.
புத்தியை ப்ரம்மத்திலேயே முழுக்க முழுக்க முழுக விடுகிறது சமாதி. அது அப்புறம் வரது.
இப்ப ப்ரம்ஹணி (மானஸ சஞ்சரரே ஞாபகம் வருதா? மானஸ சஞ்சரரே... ப்ரஹ்மணி...மானஸ சஞ்சரரே:) -பிரம்மத்தில் - பிரம்மத்தை பத்திய விஷயங்களில்.
இதில் புத்தியை பொருத்து. இதுக்கு முன்னாலே நாம் பாத்தது சிரத்தை இல்லையா? பரம சற்குரு (ஈஸ்வரன்) நூல் (வேத சாத்திரங்கள்) மீது அன்பு பற்றுதலே சிரத்தையாகும். ஞாபகம் இருக்கு இல்லே?
இப்ப அதோட தர்க்கரீதியான தொடர்ச்சியா சத் குரு சொன்னது மேலேயும் நூல்கள்ல இருக்கிறதிலேயும் புத்தியை பொருத்தச் சொல்லறாங்க.
ப்ரம்மத்தோட அனுபவம் வரது பின்னால. இப்போதைக்கு அதைப்பத்தி புத்தி வழியா என்னவெல்லாம் தெரிஞ்சுக்க முடியுமோ அதெல்லாம் தெரிஞ்சுக்கணும். அப்படியும் அது போல ப்ரம்மம் இருக்காது!
அட, பின்ன என்ன பிரயோசனம்?
ஒருத்தனுக்கு ஆனை பத்தி ஒண்ணுமே தெரியாது (பாவம்!) பாத்ததே இல்லை. (ரொம்ப பாவம்!) அவனுக்கு ¨இப்படி இப்படி இருக்கும்; இப்படி இப்படி இருக்காது¨ன்னு சொன்னாலும் சரியான கற்பனை வர முடியாது. ஆனா இப்படி கொஞ்சம் புத்தியால தெரிஞ்சு கொண்ட பிறகு எங்கேயாவது ஆனையை பாத்தா ஓ, இதுதான் ஆனை ன்னு உடனே புரிஞ்சுடும்!
அப்படித்தான் இப்ப இந்த புத்தி இன்னும் ஒழிஞ்சு போகாததாலே அதுக்கு ஏதும் நல்ல தீனி போடணும்ன்னு அதை ¨ப்ரம்மத்தை சுத்தியே கிட¨ ன்னு சொல்லறது!
(1) கடோபநிஷத் 2-23; முண்டகோபநிஷத் 3- 2.3
7 comments:
//இப்ப ப்ரம்ஹணி (மானஸ சஞ்சரரே ஞாபகம் வருதா? மானஸ சஞ்சரரே... ப்ரஹ்மணி...மானஸ சஞ்சரரே //
ம்ம்ம்ம்ம், இரண்டு நாள் முன்னே தான் நெய்வேலி சந்தானகோபாலன் பாடினார். என்றாலும் அடிக்கடி விரும்பிக் கேட்கும் பாடலில் இதுவும் உண்டு. யார் பாடினாலும் உள்ளம் உருகப் பாடுவார்கள். நாமும் மானசீகமாய் சஞ்சரிக்கும் உணர்வு வரும் பாடல்.
//ஒருத்தனுக்கு ஆனை பத்தி ஒண்ணுமே தெரியாது (பாவம்!) பாத்ததே இல்லை. (ரொம்ப பாவம்!) அவனுக்கு ¨இப்படி இப்படி இருக்கும்; இப்படி இப்படி இருக்காது¨ன்னு சொன்னாலும் சரியான கற்பனை வர முடியாது. ஆனா இப்படி கொஞ்சம் புத்தியால தெரிஞ்சு கொண்ட பிறகு எங்கேயாவது ஆனையை பாத்தா ஓ, இதுதான் ஆனை ன்னு உடனே புரிஞ்சுடும்!//
இதான் பரோக்ஷம் அபரோக்ஷம் என்கிறதா? ஒரு பொருளை உணர்ந்து தெரிஞ்சுக்கிறது... (ஹி..ஹி.. ஒரு புத்தகத்துல படிச்சேன் :)
//யார் பாடினாலும் உள்ளம் உருகப் பாடுவார்கள். நாமும் மானசீகமாய் சஞ்சரிக்கும் உணர்வு வரும் பாடல்.//
அப்ப அடிக்கடி கேக்க வேண்டியதுதான்!
/இதான் பரோக்ஷம் அபரோக்ஷம் என்கிறதா? ஒரு பொருளை உணர்ந்து தெரிஞ்சுக்கிறது...//
பரோக்ஷம் = மறைந்து உள்ளது.
அபரோக்ஷம் = வெளிப்படையா உள்ளது.
லிடரல் அர்த்தம் இதான்.
இடத்துக்கு தகுந்தாப்போலே ....என்னமோ நிரடுது. ஆனா சரிதான்.
உள்ளேனய்யா....
டூ மெனி நெய்ல்ஸ்?
:-))
மதுரைக்கும்-பெங்களூருக்கும் ரோடு போடறேன் :-). கடந்த வாரம் காரைக்குடிக்கும் சேர்த்துப் போக வேண்டியதாயிடுத்து. இளையாற்றங்குடி-அதிஷ்ட்டானம், திருக்கோஷ்டியூர், பட்டமங்கலம், நாட்டரசங்கோட்டைன்னு பல இடங்களுக்கும் போய் வந்தேன்.
Post a Comment