Wednesday, December 10, 2008
வகை வகையா புத்தி...
சிலர் சொல்லிதர சொல்லித்தர பிடிச்சுப்பாங்க. சிலருக்கு பல தரம் விளக்கமா சொல்லித்தர பிடிச்சுப்பாங்க. சிலருக்கு ஒரு தரம் புரிஞ்சு போச்சுனா அப்படியே ஞாபகம் இருக்கும். சிலர் மறந்து போவாங்க. இதை எல்லாம் நம்ம முன்னோர்கள் க்ளாசிபை பண்ணி வெச்சு இருக்காங்க. நமக்கு அது இப்ப அத்தியாவசியம் இல்லைனாலும் சுவாரசியமானதால அத கொஞ்சம் பாக்கலாம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மண் புத்தி: மண் சுவத்திலே ஆணி ஆடிக்கிறதும் அதை பிடுங்குகிறதும் ரொம்ப சுலபமா இருக்காப்போலே குருகிட்ட கேட்டது உடனே புரிஞ்சும் உடனே மறந்தும் போகிறது மண் புத்தி.
பச்சை மரத்தாணி போல் ன்னு சொல்லுவாங்க. அடிச்சு இறக்குகிறதும் சுலபம். அப்படியே கப்புனு பிடிச்சுக்கும். இப்படி கேட்டதை சுலபமா மனசுல வெச்சு அப்புறம் அதைப்பத்தி அதுக்கு மேலே ஒண்ணும் தெரியாம இருக்கறது;
பட்ட மரத்தில ஆணி இறங்குவது கொஞ்சம் கஷ்டம். அதே போல சுலபமா கழண்டு வந்துடும். இது போல கஷ்டப்பட்டுதான் உள் வாங்க முடியும். நினைவு வெச்சுகிறதும் கஷ்டம், மறந்து போயிடும்.
இது ரெண்டும் தாரு புத்தி.
பாறாங்கல் உடைக்க ரெண்டு மூணு துளை போட்டு தட்ட அப்படியே விண்டுடும். அது போல சில ஹிண்ட்ஸ் ஆலேயே விஷயத்தை புரிஞ்சுகிறவங்க ஒரு ரகம். இது சிலா புத்தி.
மூங்கில் கணுவில ஒரு பக்கம் உளி வெச்சு அடிச்சா இரண்டு பக்கமும் பிளந்துக்கும். இது போல ஒரு விஷயத்தை கேட்டா முன் பின் விஷயங்களையும் தெரிந்து கொள்கிறது வேணு புத்தி. (வேணு = மூங்கில். வேணுகோபாலன் நினைவு வருமே!)
ஒரு சொட்டு எண்ணையை தண்ணில ஊற்றும் போது சட்டுனு முழுக்கவே பரவுகிறது போல குரு சுருக்கமா சொல்கிற விஷயத்தை சட்டுன்னு முழுமையா பரவலா தெரிந்து கொள்ள முடிகிறது சிலருக்கு. இது தைல புத்தி.
(இந்த காலத்திலே எண்ணை தேய்ச்சு குளிக்கிறது குறைஞ்சு போச்சே! சரி, தண்ணில ஒரு துளி டிடர்ஜென்ட் விழுந்தாப்போலன்னு யோசிங்க!)
இதெல்லாம் ஏன் இங்க இழுக்கறேன்னா ...
நான் இந்த விஷயங்கள் படிச்ச புத்தகத்தில சாதாரணமா ஒண்ணும் புரியாதவங்களுக்கு கூட புரிகிறாப்பல சொல்லித்தரேன்னு புத்தக ஆசிரியர் சொல்லி இருக்கார். அதான். அவர் சொல்லிக்கொடுக்கிற அளவு சுலபமா ஆக்க முடியாட்டாலும் ஓரளவு சுலபமா சொல்லித்தர முயற்சி செய்யறேன்.
இந்த ஞான வழியை முதல்ல கொஞ்சம் புரிஞ்சுக்கணும். அப்புறம் சரி, தப்பு; ஒத்துக்கலாம், வேண்டாம்னு ஆராய்ச்சில இறங்கலாம். ¨செய்லிங் வித் த ஐடியா¨ ன்னு ஆங்கிலத்தில சொல்கிறாப்போல இருந்தாதான் சொல்ல வருகிறது புரியும். ஆரம்பத்திலேயே மனத்தடை இருந்தா புரிகிறது கொஞ்சம் கஷ்டம்தான்.
Labels:
நான்காம் சுற்று
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
ஆஹா...என்னதிது...டிஸ்கியே இம்புட்டு பெரிசா இருக்கு :-)
அட, இது ஒண்ணும் டிஸ்கி இல்லை மௌளி! பதிவுன்னு சொன்னா நம்பணும்!
ஹாஹா :) இதெல்லாம் சொல்லி அவங்கவங்க புத்தியை சந்தேகக் கண்ணோட பார்க்க வெச்சுட்டீங்களே :)
//நான் இந்த விஷயங்கள் படிச்ச புத்தகத்தில சாதாரணமா ஒண்ணும் புரியாதவங்களுக்கு கூட புரிகிறாப்பல சொல்லித்தரேன்னு புத்தக ஆசிரியர் சொல்லி இருக்கார்.//
இதை ஞானத்துல உணர்ந்துதான், இந்த பூவுக்கே "ஆன்மீகம்4டம்ப்மீஸ்"னு பேர் வச்சீங்களா? :)
மண் புத்திக்காரன் வந்திருக்கேனுங்கோ.
/மண் புத்திக்காரன் வந்திருக்கேனுங்கோ.//
நம்ப சொல்லறீகளா? :-))
Post a Comment