Pages

Tuesday, December 30, 2008

முமுக்ஷு


சாதகன் தயா நிதே ன்னு கூப்ட்டு இந்த சம்சார பந்தத்திலேந்து எப்பப்பா எனக்கு விமோசனம் கிடைக்கும்ன்னு கதறுகிறானாம். இப்படிப்பட்ட நிலை முமுக்ஷுத்வம். (1)

சர்வ சாதாரணமா பாக்கிறோம் ஒரு விஷயம். நிறைய கடன், பிரச்சினைகள், துக்கம், நோய் இப்படி சில காரணங்களால மனசு வெறுத்துபோய் போதும்பா இந்த வாழ்க்கை, அப்படின்னு சம்சாரத்திலேந்து விடுதலை கேக்கிறதை இங்க சேக்க முடியாது. ஓரளவு சுக ஜீவனம் இருக்கும்போது கூட அல்லது கஷ்டங்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதை ஒரு பொருட்டா நினைக்காம இதெல்லாம் மாயைதான். இதிலேந்து விடுபடணும்னு நினைக்கணும். இதுதான் நல்ல திடமான புத்தி. அப்பதான் அதை முமுக்ஷுத்வமா ஏத்துக்கலாம்.

எவ்வளோ சுகமா தோணினாலும் இது மாயை இதை நீக்கணும்ன்னு தீர்மானமா ஒரே தாபமா இருக்கணும். அதே சமயத்திலே ஸத்தியமான அனுபவம் வரனும்ன்னு தவிப்பு இருக்கணும். பொதுவா இந்த பேசறப்ப சத்திய அனுபவத்துக்கு அவ்வளவு முக்கியத்துவம் தரதில்லே. மாயையிலிருந்து முக்தி- விடுதலைதான் - வீடுதான் -முக்கியமா படுது.

ஏன் ஸத்யமான அனுபவத்தை கண்டுக்கலே?

ஏன்னா அதை விவரிக்க வார்த்தைகளே கிடையாது. வார்த்தைகளுக்கு எட்டாத விஷயம்.
எப்பவும் ஜீவன் பிரம்மமாதான் இருக்கான், மாயைதான் அதை உணராம கட்டிப்போடுது. கட்டு போச்சுன்னா தானா ப்ரம்ம அனுபவம் கிடைச்சுடும்.

ம்ம்ம்ம்...விவேக சூடாமணியிலேயும் என்ன சொல்லறாங்கன்னு ஒரு பார்வை பாத்துடலாம். (2)

அஞ்ஞானம் என்பதுதான் மாயை. இந்த மாயையால்தான் பரமாத்மாவுக்கு அன்னியமா ¨நான்¨ ன்னு ஒண்ணு தோணுது. அதுதான் அஹங்காரம். சூக்குமமா இருக்கிற இந்த அஹங்காரத்தில் இருந்து தூலமான தேகம் வரை இது விரிஞ்சு கட்டிப்போட்டு இருக்கு. இதுதான் முதல் வரிக்கு பொருள். இதிலேந்து விடுபடணும் என்கிற இச்சை -ஆசையே முமுக்ஷுதா. முடிவான நிலை என்ன?

பந்தம் மட்டும் போனால் போதும். அப்புறமா கல் மண் மாதிரி எப்படி வேண்ணா இருக்கலாம். என்கிறது இல்லை. தன் உண்மையான தன்மையான ஆத்மாவை குறித்து ஞானம் பெறுவது. இதனால முக்தி கிடைக்கணும் என்கிறார்.

அஞ்ஞானம் போகிறதும் ஞானம் வருகிறதும் ஒரே நேரத்திலே நடக்கிற விஷயம்தான். தீக்குச்சியை உரசி பத்த வெச்சா இருட்டு முதல்ல போகுமா இல்லை வெளிச்சம் முதல்ல வருமா என்கிறது போல.

முமுக்ஷுக்கு நல்ல உதாரணமா புத்தரை சொல்லறாங்க. அவர் போதி மரத்தடில உக்காரும் முன் சொன்னதா ஒரு வாசகம் சொல்லராங்க. ¨இந்த ஆசனத்திலேயே இந்த உடம்பு வத்தி சுக்கா போகட்டும்; தோலும், எலும்பும் மாமிசமும் நசிந்தே போகட்டும்; போதம் (ஞானம்) பெறாம - எத்தனையோ கல்ப காலம் ஆகும்னாலும் சரி, - இந்த இடத்தை விட்டு இந்த உடம்பு நகராதாக்கும்.¨

1. ஸம்சார பந்த நிர்முக்தி: கதம் ஸ்யாந் மே தயாநிதே|
இதி யா ஸுத்ருடா புத்திர் - வக்தவ்யா ஸா முமுக்ஷுதா||

- அபரோக்ஷ அனுபூதி

2.அஹங்காராதி தேஹாந்தான் பந்தான் - அஜ்ஞாந கல்பிதான் |
ஸ்வஸ்வரூபாவபோதேந மோக்துமிச்சா முக்ஷுதா ||


4 comments:

Geetha Sambasivam said...

இன்னும் ஆரம்பமே வரலைனு தோணுது, படிக்கும்போது! :(((

மெளலி (மதுரையம்பதி) said...

தீக்குச்சி விளக்கம் அருமை. :)

திவாண்ணா said...

ஓ அக்கா, இது கடேசி நிலை. அதுக்கு வரலைன்னு ஏன் வருத்தம்?
மௌலி நன்னி!

Kavinaya said...

//எவ்வளோ சுகமா தோணினாலும் இது மாயை இதை நீக்கணும்ன்னு தீர்மானமா ஒரே தாபமா இருக்கணும். அதே சமயத்திலே ஸத்தியமான அனுபவம் வரனும்ன்னு தவிப்பு இருக்கணும்.//

நல்லாச் சொன்னீங்க. எப்ப வருமோங்கிற தவிப்புதான் பெரிசா இருக்கு :(