Pages

Wednesday, December 24, 2008

சிரத்தை -3



கொஞ்சம் ரிவிஷன்.

அநித்தியம் எதுன்னு நமக்கு போகப்போக நல்லாவே தெரிகிறது. ஆனா நித்திய வஸ்துவை அனுபவிக்காததால அதைப்பத்தி தெரியாதுதான். ஆத்ம வஸ்துவை பத்தி பெரியவங்க சொன்னதை கேட்டும் புத்தகங்களை படித்தும் ஒரு வழியா ஒரு சின்ன ஐடியா இருக்கும். ஆனாலும் அநித்திய வஸ்துவை பத்தி உறுதியா அனுபவத்திலே தெரிஞ்சுக்கிற அளவு இதை தெரிஞ்சுக்க முடியாது. இருந்தாலும் அநித்தியம்ன்னு தெரியறதை வேண்டாம்ன்னு வெறுத்து தள்ள ஆரம்பிக்கிறோம், இல்லையா? இது வைராக்கியம். அப்புறம் அநித்தியங்களை தேடிப்போக மனசையும் இந்திரியங்களையும் கட்டிப்போடறோம். - சமம், தமம். நாளடைவிலே வேண்டியது கிடைக்காம ஒருவழியா அலுத்து போய் மனசு அலை பாயறதை நிறுத்திடும். - உபரதி. இங்கேயும் ஆத்மா இல்லாததை அனுபவிக்கிற கஷ்டம் இல்லைனாலும் ஆத்ம சுகம் ஒண்ணுமில்லை. வெளியிருந்து வருகிற சுக துக்கங்களை பொறுத்துக்க பழகுறோம்.- திதிக்ஷா. இப்போகூட ஆத்ம சுகமில்லை. இன்னும் வரலை.

இப்படி ஒரேயடியா ஒண்ணுமேயில்லைன்னு இல்லை. அப்பப்ப வெயில்ல எங்கேயோ மழை பெஞ்சு சிலு சிலுன்னு ஒரு காத்து திடீர்ன்னு அடிக்கிற மாதிரி ஏதோ அனுபவம் கிடைக்கும். அப்பப்ப கொஞ்சம் அதிகமாவும் கிடைக்கலாம். மாறி மாறி வரும். கொஞ்சம் கூட சாம்பிள் இல்லைனா பயல் சாதனையை விட்டுவிட்டுவானோன்னு பகவான் அப்பப்ப போடுகிற பிச்சை அது! ¨இத்தனை காலமும் சாதனை பண்ணி ஒண்ணும் பெரிசா தெரியலையே! சமயத்தில கொஞ்சம் மட்டுமே தெரிந்து கண நேரத்தில அதுவும் ஓடிப்போகிறதே! லட்சியம் எப்ப சித்திக்குமோ! எத்தனை ஜன்மம் ஆகுமோ?¨ ன்னு ஆதங்கம் வரலாம். கடப்பாரையை முழுங்கிட்டு சுக்கு கஷாயம் குடிச்சு இருக்கிறப்ப கடப்பாரையை முழுங்கினது பெரிசா தோணாமல் சுக்கு கஷாயம் குடிச்சது மட்டும் பெரிசா தெரியும்! ஏக்கமும் ஏமாத்தமும் வரும். ஓரளவு திதிக்ஷா இருக்கிறதா நினைச்சு கொண்டு இருக்கும்போது இப்படி சகிக்க முடியாம ஆதங்கம் எப்படி வந்ததுனே தெரியாம வந்துடும். அனுக்கிரஹம் பண்ணுகிற பகவானே இப்படி பரிட்சையும் வெக்கிறதாலேதான் இப்படி நடக்கிறது. அதுக்குத்தான் சாதனையை விட்டுவிடக்கூடாதேன்னு சிரத்தையை வைச்சாங்க.

ச்ரத்தைக்கு லட்சணமா இப்படி சொல்கிறாங்க.

சாஸ்த்ரஸ்ய குரு வாக்யஸ்ய ஸத்ய புத்த்யாவதாரணா|
ஸா ச்ரத்தா கதிதா ஸத்பிர்- யயா வஸ்தூபலப்யதே||
வி.சூ 25/26

சாஸ்திரமும் குரு வாக்கியமும் சத்யம் என்று புத்தியால உறுதியா தீர்மானம் செய்வதே சிரத்தை ன்னு சத்துக்களால சொல்லப்பட்டு இருக்கு. இதனால்தான் மெய்ப்பொருள் அடையப்படுகிறது.

இது கொஞ்சம் வித்தியாசமா இருக்குன்னு தெரியறதா?
அதாவது, முன்னாலே என்ன சொன்னோம்? புத்தியை தள்ளி வெச்சுட்டு நம்பிக்கை அடிப்படைல மேலே போகணும்ன்னு சொன்னோம். இப்ப கொஞ்சம் வித்தியாசம். புத்தியாலேயே உறுதி பண்ணிக்க ன்னு சொல்கிறோம். முரண்பாடு மாதிரி இருக்கு இல்லே!
இல்லை, முரண் இல்லை.

புத்தியாலேயே யோசிக்கலாம்.

யோசிச்சு அட நம்மால – புத்தியால- எல்லாத்தையுமே தெரிஞ்சுக்க முடியாது. எல்லத்தையும் ஜட்ஜ் பண்ணவும் முடியாது. கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு. அதுவும் ஆத்ம சம்பந்தமான பல விஷயங்கள் நமக்கு புரிகிறது கஷ்டம். அதில பகவான் தெரியப்பண்ணியும் சொந்த அனுபவத்திலேயும் ஏற்கெனவே தெரிஞ்சு கொண்ட பெரியவங்க சொல்கிறதை அப்படியே எடுத்துகிறதுதான் உசிதம். அதனால் இங்கே நமக்கு வேலை இல்லைன்னு புத்தி புரிஞ்சுக்கணும்.

புத்திக்கு நிறையவே வேலை உண்டே? நித்திய அநித்தியங்களை பகுத்து ஆராயணும். அதுக்கு அவசியமா புத்தி வேணும். மத்தது மனம் என்கிற நிலையை சம்பத்தப்பட்டது. கடைசில இங்கே நமக்கு வேலை இல்லைன்னு புத்திக்கு உறுதியா தெரியணும். வேலையை செய்வதில் சக்தியை காட்டுகிறதைவிட இப்படி காட்டாம இருகிறதுதான் கஷ்டம்! அதுக்கு ரொம்பவே விநயம் வேணும்.

ஒரு அறிவில்லாதவனோட நம்பிக்கையா இல்லாம அறிவோட கூடிய நம்பிக்கையா இருக்கணும். அவ்ளோதான்.

நாரதர் ஒரு முறை மகா விஷ்ணுவை பாக்க போய் கொண்டு இருந்தார். வழில ரெண்டு பேர் மோக்ஷம் வேணும்னு தவம் செய்து கொண்டு இருந்தாங்க. அவங்க நாரதரை பாத்து ¨எங்கே போறீங்க¨ன்னு கேட்டாங்க. ¨நான் மகா விஷ்ணுவை பாக்கப்போறேன்¨ன்னு நாரதர் சொல்ல ¨அப்படியா! எங்க ரெண்டு பேருக்கும் எப்ப மோக்ஷம் கிடைக்கும்ன்னு கேட்டு வாங்க¨ அப்படின்னாங்க. ¨சரி¨ ன்னு நாரதரும் சொன்னார். திரும்பி வரப்ப நாரதரை பாத்து ரெண்டு பேரும் ஆவலா ¨பதில் கிடைச்சுதா¨ ன்னு கேட்டாங்க. நாரதர் விஷ்ணு சொல்லச் சொன்ன பதிலையே சொன்னார். முதல் நபரை பாத்து ¨உங்களுக்கு இன்னும் 3 ஜன்மா போகணும்¨ ன்னார். கேட்டவர் ¨நாராயணா! இன்னும் 3 ஜன்மமா¨ ன்னு அழ ஆரம்பிச்சுட்டார். ரெண்டாவது நபரை பாத்து ¨இந்த மரத்திலே நிறைய இலைகள் இருக்கு இல்ல? உங்களுக்கு அத்தனை ஜன்மா போகணும்¨ ன்னார். கேட்டவரோ ¨ஆஹா! நிச்சயம் மோக்ஷம் கிடைச்சிடும்¨ ன்னு டான்ஸ் ஆட ஆரம்பிச்சுட்டார்!

சாதனையால மோக்ஷம் நிச்சயம் என்கிற நம்பிக்கையோட சாதனை பண்ணணும்!



8 comments:

Kavinaya said...

புத்தி, மனசு, நம்பிக்கைன்னு அழகழகா சொல்லீட்டீங்க.

//¨நாராயணா! இன்னும் 3 ஜன்மமா¨ ன்னு அழ ஆரம்பிச்சுட்டார்.//

என்னை மாதிரி ஆள் போல :)

(ஆமா, நீங்களே தொகுத்து கொடுத்திட்டீங்களே. அப்ப இதுல பரீட்சை கிடையாதுதானே? :)

திவாண்ணா said...

//என்னை மாதிரி ஆள் போல :)//
நினைப்பு வந்தது!
(ஆமா, நீங்களே தொகுத்து கொடுத்திட்டீங்களே. அப்ப இதுல பரீட்சை கிடையாதுதானே? :)
பிட் அடிக்க வசதி பண்ணி கொடுத்து இருக்கேன்! பரிட்சை நிச்சயம் உண்டு. வழக்கம் போல எனக்குத்தான்! :-))
ஆனா இப்பதானே பாடங்கள் ஆரம்பிக்குது! இன்னும் நாள் இருக்கு.

மெளலி (மதுரையம்பதி) said...

அட, இந்த பதிவு எனக்காகவே எழுதிய மாதிரி இருக்கு...பிட் அடிக்க வசதியா :-)

தொகுப்பாக படிக்கையில் இன்னும் கொஞ்சம் புரியறதே...

திவாண்ணா said...

தொகுப்பாக படிக்கையில் இன்னும் கொஞ்சம் புரியறதே...//

ஆஹா மௌலி, எழுத வேண்டிய விதத்தைப்பத்தி ஹிண்ட் கொடுத்துட்டீங்க!

Geetha Sambasivam said...

//¨இந்த மரத்திலே நிறைய இலைகள் இருக்கு இல்ல? உங்களுக்கு அத்தனை ஜன்மா போகணும்¨ ன்னார். கேட்டவரோ ¨ஆஹா! நிச்சயம் மோக்ஷம் கிடைச்சிடும்¨ ன்னு டான்ஸ் ஆட ஆரம்பிச்சுட்டார்!
//

இது தான் நித்தியம்! என்னைப் பொறுத்தவரையில்.

திவாண்ணா said...

//இது தான் நித்தியம்! என்னைப் பொறுத்தவரையில்.//

எது? டான்ஸ் ஆ? உங்க ஆனை இன்னும் ஆட ஆரம்பிக்கலியே? :-))

கபீரன்பன் said...

//அப்பப்ப வெயில்ல எங்கேயோ மழை பெஞ்சு சிலு சிலுன்னு ஒரு காத்து திடீர்ன்னு அடிக்கிற மாதிரி ஏதோ அனுபவம் கிடைக்கும். //

அதுவும் இந்த மாதிரி பதிவுகள் படிக்கும் போது வர்றதுதான் :)

திவாண்ணா said...

@ கபீரன்பன்.
கபீர் தோஹா படிக்கிறப்பவும் இருக்குமே!